துக்ளக் விரும்பிய கங்கை நீர்! (Post No.4130)

Written  by S NAGARAJAN

 

Date: 5 August 2017

 

Time uploaded in London:- 6-12 am

 

 

Post No.4130

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

புனித கங்கை

 

 

துக்ளக் விரும்பிய கங்கை நீர்!

 

ச.நாகராஜன்

 

 

ஹிந்து சரித்திரம் கண்ட விசித்திரமான மன்னர்களில் ஒருவர் முகம்மது பின் துக்ளக்.

 

ஒரு கிறுக்குத்தனமான ஆசாமி மன்னராக இருந்தால் என்னென்ன நடக்கலாம் என்பதற்கு துக்ளக் ஆட்சி ஒரு உதாரணம்.

தன் தந்தையின் வெற்றியைக் கொண்டாட ஒரு மர மாளிகையை அமைத்தான் துக்ளக். அதன் அஸ்திவாரத்தைப் பற்றி அவன் கவனம் கொள்ளவில்லை. விளைவு, தந்தையும் அவரது சேனா பிரமுகர்களும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அது இடிந்து வீழ்ந்தது.

தந்தைக்கு நல்ல வரவேற்பு!

 

 

அடுத்து வெள்ளி, தங்க நாணயங்களை தாமிர நாணயங்களாக மாற்றினான் துக்ளக். ஹிந்து பொற்கொல்லர்கள் ஒரிஜினலை விட பிரமாதமாக நாணயங்களைத் தாங்களாகவே தயார் செய்யவே தாமிர நாணயங்களை வாபஸ் வாங்கினான். இந்த விஷ பரிட்சையால் பெருமளவு கஜானா காலி ஆனது.

அடுத்தது தலை நகர் மாற்றம். 40 நாட்கள்  700 மைல் தூரம் தன்னுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு டெல்லியை விட்டு புது தலை நகரான தௌலதாபாத் நோக்கிச் சென்றான் அவன்.

 

 

பலர் காடுகளில் சென்று ஒளிந்து கொண்டனர். பலர் வழியிலேயே செத்து மடிந்தனர். இந்த விஷ பரிட்சையும் கூட விபரீதத்தில் தான் முடிந்தது.

 

 

துக்ளக் – பல மொழிகள் கற்றவன்; கணிதத்தில் நிபுணன்; அழகாக எழுதுவான். சூஃபி யோகிகளின் பால் பற்று; கடுமையாக் இஸ்லாமிய விதிகளை அனுசரிப்பவன். 1325இல் தந்தையின் மறைவுக்குப் பின் முழு அரசாட்சிப் பொறுப்பை ஏற்றான்.20-3-1351இல் மறைந்தான்.

 

 

அவன் மறைவு கூட சற்று விசித்திரமானது தான். ஒரு அழுகிய மீனைச் சாப்பிட்டு அதனால் அவன் மரணம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது!.

 

இப்படிப்பட்ட துக்ளக் விரும்பி அருந்திய நீர் புனிதமான் கங்கா நீர்

என்றால் அதிசயமாக இல்லை?!

 

மொராக்கோவிலிருந்து இந்தியா வந்த இபுன் பதாதா (1325-1354) என்ற யாத்ரீகர் தனது இந்திய வருகையில் தான் கண்டதை எல்லாம் எழுதி வைத்துள்ளார்.

 

அவர் துக்ளக் ஏற்பாடு செய்திருந்த அஞ்சல் சேவையை விரிவாக எடுத்துரைக்கிறார் இப்படி:

 

 

“This post is quicker than the mounted post. It is sometimes used to transport fruits from Khursan which are highly valued in India; they are put on plates and carried with great speed to the Sultan. In the same way they transport the principal criminals, they are each placed in a stretcher and the carriers run carrying the stretcher on their heads.”

 

 

துகளக் விரும்பி அருந்தியது கங்கா நீர்.

அது தௌலதாபாத்திற்கு இதே போலத் தான் கொண்டு வரப்பட்டது.

 

அது பற்றி இபுன் பதாதா குறிப்பிடுவது இப்படி:

 

“The Sultan’s drinking water is brought to him by the same means when he resides at Dawlatabad from the river Kank ( Ganges) to which the Hindus go on a pilgrimage and which is at a distance of forty days’ journey from there.”

கங்கை நீரை மட்டுமே அருந்தி வந்த முகம்மதிய மன்னர்கள் பலர்.

 

அவர்களுள் துக்ளக்கும் ஒருவர்.

மற்றவர்களைப் பற்றி இன்னொரு கட்டுரையில் காண்போம்.

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: