Written by S NAGARAJAN
Date: 6 August 2017
Time uploaded in London:- 5-23 am
Post No.4133
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
புனித கங்கை
அக்பர் விரும்பிய அமரத்தன்மை அளிக்கும் கங்கை நீர்!
ச.நாகராஜன்
முகலாய மன்னர்களில் சற்று வித்தியாசமான மன்னர் அக்பர். அவரது நிர்வாகம் பற்றிய விரிவான குறிப்புகளைத் தரும் நூல் அய்ன் -இ-அக்பரி. 16ஆம் நூற்றாண்டு நூல் இது.
இதன் பொருள் அக்பரின் அரசியல் சாஸனம் என்பதாகும்.
இதை எழுதியவர் அபுல் ஃபாஜி இபுன் முபாரக் என்பவர்..
அது அக்பரின் கங்கை நீர் மீதான விருப்பத்தையும் அதை அவர் எவ்வளவு மதித்தார் என்பதையும் நன்கு விவரிக்கிறது.
அதில் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் அப்படியே காணலாம்:
“His Majesty (AKBAR) calls this source of life (Ganges Water) ‘the water of immortality’ and has committed the care of this department to proper persons. He does not drink much, but pays much attention to this matter. Both at home and on travels he drinks Ganges water.
Some trustworthy persons are stationed on the banks of that river who dispatch the water in sealed jars.
When the court was at the capital Agra and in Fattepore Seikree the water came from the district of Saran, but now that His Majesty is in the Punjab water is brought from Hardwar.
For the cooking of the food, rain water or water taken from Jumna and Chenab is used, mixed with a little Ganges water; On journeys and hunting parties, His Majesty from his predilection for good water appoints experienced men as water-tasters.”
அதிகாரபூர்வமான நூலான அய்ன் -இ -அக்பரி தரும் சுவையான தகவல்கள் இவை.
அக்பர் கங்கை நீரை அமரத்தன்மை அளிக்கும் நீர் எனக் கூறி வந்தார்.
நீரைக் கொணரும் பணியை பொறுப்பான ஆட்களிடம் அவர் ஒப்படைத்திருந்தார்.
அவர் அதிகம் நீர் பருகுவதில்லை என்ற போதிலும், நீர் பற்றி அதிக கவனம் செலுத்தி வந்தார்.
இல்லத்திலும் பயணங்களிலும் அவர் கங்கை நீரையே அருந்தி வந்தார்.
நம்பிக்கையான் ஆட்கள் கங்கை கரையில் இருந்தனர். அவர்கள் கங்கை நீரை சீலிடப்பட்ட ஜாடிகளில் வைத்து அனுப்பினர்.
ஆக்ராவிலோ அல்லது பதேபூர் சிக்ரியிலோ அரசவை நடக்கும் சமயங்களில் நீரானது சரண் மாவட்டத்திலிருந்து வந்தது.
ஆனால் இப்போது அவர் பஞ்சாபில் இருப்பதால் நீரானது ஹரித்வாரிலிருந்து கொண்டுவரப்படுகிறது.
சமைப்பதற்கு யமுனா அல்லது ஜீனாப் நதி நீரோ அல்லது மழை நீரோ கங்கை ஜலம் சிறிது அதில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
பயணங்களிலும் வேட்டையாடச் செல்லும் போதும் நீருக்கு முக்கியத்துவம் தந்து தகுந்த நிபுணர்களை நீர் சுவையாக இருக்கிறதா என்பதைப் பார்க்க அவர் நியமிப்பார்.”
மேற்கண்ட சுவையான தகவல்கள் அக்பர் கங்கை நீருக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்து வந்தார் என்பதை விளக்குகிறது.
யமுனை நீரோ இதர நீரோ – அதைப் பயன்படுத்த நேரும் போது கூட – அதில் சிறிது கங்கை நீரைச் சேர்ப்பது அவர் பழக்கம் என்பதை நோக்குகையில் கங்கையின் புனிதத்தை அவர் போற்றி வந்தார் என்பதும் புலப்படுகிறது. அத்துடன் அமரத்தன்மை அளிக்கும் நீர் என்று அவர் கங்கை நீரைப் போற்றியது அவருக்கு கங்கை பால் இருந்த மதிப்பையும் மரியாதையையும் நம்பிக்கையையும் தெரிவிக்கிறது.
இத்துடன் கங்கையின் புனிதம் பற்றிய தகவல்கள் நிற்கவில்லை.
ஔரங்கசீப் எப்படி கங்கை நீரை விரும்பினார் என்பதை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.
***