Written by S.NAGARAJAN
Date: 30 August 2017
Time uploaded in London- 5-52 am
Post No. 4173
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
by ச.நாகராஜன்
ஹிந்து தத்துவத்திற்கும் அதைச் சார்ந்த கலைகளுக்கும் உல்கெங்கும் இப்போது பெரும் வரவேற்பு உள்ளது.
யோகா
ஆயுர்வேதம்
வாஸ்து சாஸ்திரம்
ஆகியவை மேலை நாட்டினரால் நாளுக்கு நாள் அதிகமாகப் பின்பற்றப்படுகின்ற்ன.
இவை அனைத்தும் உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்திற்கும் ஆன்ம உயர்விற்கும் வழி வகுக்கின்றன என்பது உண்மை.
பௌதிக ரீதியாக மட்டும் அனைத்தையும் அணுகும் மேலை நாட்டு விஞ்ஞானம் ஆன்மீக ரிதியாகவும் அனைத்தையும் அணுகும் ஹிந்துத்வத்திடம் போட்டி போட முடியாது என்கின்ற சாஸ்வதமான உண்மையை உலகம் இப்போது உணர்கிறது.
காத்லீன் காக்ஸ் என்ற பெண்மணி தி பவர் ஆஃப் வாஸ்து லிவிங் ( Kathleen Cox – The Power of Vastu Living) என்ற நூலை எழுதி வாஸ்து சாஸ்திரத்தின் பெருமையை உலகம் உணரச் செய்திருக்கிறார்.
1985ஆம் ஆண்டு நியூயார்க்கிலிருந்து நியூடெல்லி வந்தவர் இங்குள்ள ஹிந்து வாழ்க்கை முறையைக் கண்டு வியந்து போனார்.
1990இல் நிரந்தரமாக டில்லியை தன் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டார்.
காலையில் எழுந்ததிலிருந்து இரவு வரை ஒவ்வொரு ஹிந்துவும் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகள் அனைத்தும் அவரை வியப்பில் ஆழ்த்தின. வெறும் உடல் வளர்ச்சிக்காக மட்டுமின்றி ஆன்மீக வளர்ச்சிக்காகவும் அவை அமைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த அவர் வாஸ்து சாஸ்திரத்தின் பால் தன் மனதைச் செலுத்தி அதைக் கற்றுத் தேர்ந்தார்.
மூன்று முக்கிய விஷயங்களை வாஸ்து சாஸ்திரத்தின் மூலமாக அவர் வலியுறுத்துகிறார்.
- ஐம்பூதங்களைப் போற்றி பிரபஞ்சத்தின் லயத்தை ஒருவர் மதிக்க வேண்டும்.
- இயற்கை உலகை நாம் வாழும் இடத்திலும் நாம் பணி புரியும் இடத்திலும் இணைக்க வேண்டும். இயற்கையின் வெளி உலகும் வீட்டில் நாம் வாழும் உலகும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத தொடர்புடன் இருக்கிறது.
- நாமும் கூட இறைசக்தியின் ஒரு அங்கமே என்பதை உணர்ந்து நாம் யார் என்பதை உணரத் தலைப்பட வேண்டும்
ஆகிய இந்த மூன்று கொள்கைகளை வலியுறுத்தி வாஸ்து சாஸ்திரம் எப்படி நம் வாழ்க்கையை வளப்படுத்த முடியும் என்பதை அவர் 400 பக்கங்களில் தெளிவு படுத்துகிறார்
.
அவரது இணையதளம் www.vastuliving.com பல உண்மைகளை விளக்குகிறது.
கோவில்கள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரப்படியே அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு வழிபாட்டிற்காகக் குழுமும் மக்களுக்கு உயரிய ஆன்மீக அனுபவங்கள் ஏற்படும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.
சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம், வான சாஸ்திரம் முதலானவை ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருப்பதை அதை நன்கு அறிந்தோர் உணரலாம்
.
ஹிந்து வாழ்க்கை முறையில் அனைத்துக் கலைகளும் அற்புதமாக இணைக்கப் பட்டிருப்பதை மேலை நாட்டினர் உணர்ந்து அதை நமக்கே திருப்பிச் சொல்லி நம் அருமையை விளக்கும் போது தான் நாம் நமது சாஸ்திரங்களை மதிக்கத் தலைப்படுகிறோம்.
வேதனையான் உண்மை இது!
ஏராளமான வாஸ்து சாஸ்திர நூல்கள் பதிக்கப்படாமல் சுவடி வடிவிலேயே உள்ளன.
சில சுவடிகள் பதிக்கப்பட்டு அந்த நூல்கள் தரும் தாக்கத்திற்கே மேலை உலகம் வியப்பின் உச்சிக்கு ஏறும் போது அனைத்தும் பதிக்கப்பட்டால் நமது பெருமை எந்த உயரத்திற்குச் செல்லும்!
நினைத்துப் பெருமைப்படலாம்; வாஸ்து உள்ளிட்ட் அனைத்தையும் பழைய காலம் போல அனைவரும் கற்றுப் பின்பற்றலாம்.
ஹிந்து வாழ்க்கை முறை உலகெங்கும் பரவ ஹிந்துக்கள் அதை வாழ்ந்து காட்ட வேண்டும்!
****