மாக்ஸ்முல்லர் மர்மம்! – 1 (Post No.4222)

Written by S.NAGARAJAN

 

Date: 18 September 2017

 

Time uploaded in London- 6-08 am

 

Post No. 4222

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

மாக்ஸ்முல்லர் மண்ணைக் கவ்வினார்; அணுசக்தி விஞ்ஞானிகள் செமை அடி என்ற ச.சுவாமிநாதனின் கட்டுரையை- 16-9-17இல் வெளியான கட்டுரை எண் 4217- ஐப் படிக்குமாறு அன்பர்களை வேண்டுகிறேன்.

நண்பரா, கைக்கூலியா!

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 1

 

ச.நாகராஜன்

1

 

மாக்ஸ்முல்லர்!

வேதங்களை மொழி பெயர்த்தவர்; ஹிந்து மதத்தின் பால், – ஹிந்து நாகரிகத்தின் பால், பெரு மதிப்புக் கொண்டிருந்தவர் என்ற புகழுரைகள் ஒரு புறம்!

ஹிந்து மதத்திற்கு எதிராக சதி வேலை செய்தவர், பிரிட்டிஷாரின் கைக்கூலி; கிறிஸ்தவ பாதிரிகளின் கைப்பாவை – என்று இப்படி அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இன்னொரு புறம்!

சாயனரே மறு அவதாரம் எடுத்து வந்திருப்பதாகக் கருதுகிறேன். எவ்வளவு பெரிய வேலையைச் செய்திருக்கிறார்; அவருக்கு ஹிந்து மதத்தின் மீது தான் எவ்வளவு அன்பு என்று ஸ்வாமி விவேகானந்தரின் புகழுரைகள் இன்னொரு புறம்!

எந்த ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அது தோன்றிய நாடு என்று என் கை சுட்டிக் காட்டுவது இந்தியாவைத் தான் என்று அடித்துச் சொல்லி (எழுதி) இந்தியாவை புகழேணியில் உச்சியில் ஏற்றும் மாக்ஸ்முல்லரின் எழுத்துக்கள் (அச்சிலே வந்து விட்டன நூலகள்) இன்னொரு புறம்.

மலைக்கிறோம்.

திகைக்கிறோம்.

அவரது அன்னைக்கு எழுதிய கடிதத்தில் வேதம் பற்றிய அவரது கருத்தைக் கண்டு மயங்குகிறோம்.

India – what it can teach us என்ற நூலில் அவர் இந்தியா பற்றி எழுதிய புகழாரம் கண்டு மகிழ்கிறோம்.

அவர் என்ன முரண்பாடுகளின் மூட்டையா?

அல்லது முதலில் ஹிந்து மதத்திற்கு எதிராகச் சதி செய்த சதிகாரப் பாதிரிகளுக்கு கைக் கூலியாக இருந்து மனம் மாறிய மனிதரா?

அவரது ஆராய்ச்சியில் அர்த்தம் உண்டா?

அல்லது ரஷியர் ஒருவர் கூறியது போல அவை அனைத்துமே பிழையானவை என்று சொல்லி விடலாமா?

 

அரைகுறை ஆராய்ச்சியாளரா, அல்லது ஆராய்ச்சியின் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்தாரா?

பல ஆண்டுகளாக இந்தக் குழப்பம் எனக்கு இருக்கிறது.

இதே குழப்பம் ஆயிரக்கணக்கானோருக்கும் இருப்பதிலும் வியப்பில்லை.

மாறுபட்ட கருத்துக்கள் அதற்குரிய ஆதாரங்களுட்ன வரும் போது குழப்பம் வருவது இயற்கை தான்!

அனைத்தையும் ஒரு அலசு அலசினால் உணமை வராதா என்ன?

முயன்று பார்ப்போம்!

 

2

முதலில் அவர் கூறிய் ஒரு புகழுரை.

 

“If I were asked under what sky the human mind has most fully developed some of its choicest gifts, has most deeply pondered over the greatest problems of life, and has found solutions of some of them which well deserve the attention even of those who have studied Plato and Kant, I should point to India. And if I were to ask myself from what literature we who have been nurtured almost exclusively on the thoughts of Greeks and Romans, and of the Semitic race, the Jewish, may draw the corrective which is most wanted in order to make our inner life more perfect, more comprehensive, more universal, in fact more truly human a life… again I should point to India.”
― 
Friedrich Max MüllerIndia: What it Can Teach Us

உலகம் வியக்கும் உயர்ந்த வேத சிந்தனைகள் என்ற எனது கட்டுரையில் (சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது)  எனது மொழிபெயர்ப்பு இது:

“வானத்தின் கீழ, எந்த மனிதர்களின் மனம், தமக்கு அரிதாகக் கொடுக்கப்பட்ட கொடைகளை முழுவதுமாக வளர்ச்சியுறச் செய்திருக்கிறது; வாழ்வின் பெரிய பிரச்சினைகளை ஆய்ந்திருக்கிறது; அது மட்டுமின்றி,பிளேடோ, காண்ட் போன்றோரை – நன்கு பயின்றவர்களைக் கூடக் கவரும் வகையில் அந்தப் பிரச்சினைகளில் சிலவற்றிற்குத் தீர்வைக் கண்டிருக்கிறது என்று என்னைக் கேட்டால் இந்தியாவையே நான் சுட்டிக் காட்டுவேன். இங்கே ஐரோப்பாவில் கிரேக்க, ரோமானிய மற்றும் செமிடிக் இனமான யூத இனத்தின்  சிந்தனைகளை மட்டும் பிரத்யேகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமோ அப்படிப்பட்ட நாம் நமது அக வாழ்விற்கு பரிபூரணமான, மிகப் பரந்த, பிரபஞ்சம் அளாவிய, இன்னும் சொல்லப்ப்போனால் நிஜமாகவே மனிதாபிமானமுள்ள ஒரு வாழ்க்கைக்காக – இந்த பூமியில் வாழும் வாழ்க்கை மட்டுமல்லாமல் இதற்கு அப்பால் என்றும் நிலைத்து வாழும் வாழ்க்கைக்குமாக – எந்த இலக்கியத்திலிருந்து வேண்டிய திருத்தங்களைப் பெற முடியும் என்று என்னைக் கேட்டால் மீண்டும் நான் இந்தியாவையே சுட்டிக் காட்டுவேன்.”

தனது திடமான உள்ளார்ந்த நம்பிக்கையை இப்படி அழுத்தம் திருத்தமாக கம்பீரமான சொற்களினால் மாக்ஸ்முல்லர் சொல்வதை “India, What it can teach us” நூலில் காண முடிகிறது.

* ஆய்வைத் தொடர்வோம்

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: