Written by S.NAGARAJAN
Date: 20 September 2017
Time uploaded in London- 6-30 am
Post No. 4227
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
நண்பரா, கைக்கூலியா!
மாக்ஸ்முல்லர் மர்மம்! – 2
ச.நாகராஜன்
3
மாக்ஸ்முல்லரைப் பற்றிய் இந்த ஆய்வைத் தொடர்வதற்கு முன்னர் சில முக்கியமான கால வரிசை அட்டவணையைத் தெரிந்து கொள்ளுவது இன்றியமையாதது.
மாக்ஸ்முல்லர் பிறந்த தேதி : 6-12-1823
மறைந்த தேதி 28-10-1900
வயது 76
விவேகானந்தர் பிறந்த தேதி 12-1-1863
மறைந்த தேதி 4-7-1902
வயது 39
விவேகானந்தர் சிகாகோ கலைக் கழகத்தில் சர்வமத மகாசபையில் 1893 செப்டம்பர் 11ஆம் நாள் மாலையில் பேசி பெருத்த வரவேற்பைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது 30.
விவேகானந்தர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்த தேதி 28-5-1896
அப்போது மாக்ஸ்முல்லருக்கு வயது 72
விவேகானந்தருக்கு வயது 33
மாக்ஸ்முல்லர் கேம்பிரிட்ஜில் 1883 ஆம் ஆண்டு தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இதுவே India What It can Teach Us – என்ற உரைத் தொகுப்பு நூலாகப் பின்னர் வெளி வந்தது.
இந்த சொற்பொழிவுகளை அவர் ஆற்றும் போது அவருக்கு வயது 60. இதில் தான் அவர் இந்தியாவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
.2 பிராங்கிற்கு சாக்லட் வாங்கினேன். இனி ஒரு போதும் வாங்கக் கூடாது என்று தீர்மானித்தேன். –
தன் கையில் பணமே இல்லை என்று இப்படி வருத்தப்பட்டு எழுதிய டயரி குறிப்பின் தேதி 10-4-1845 வயது 22.
தனது தாய்க்கு தான் எழுதும் ஒவ்வொரு பேப்பருக்கும் தான் 4 ஸ்டர்லிங் பவுண்ட் கேட்டிருப்பதாகக் கடிதம் எழுதிய தேதி 15-4-1847. வயது 24.
ஆக்ஸ்போர்டில் உள்ள செவாலியர் புன்சென்னுக்கு இந்தியாவை கிறிஸ்தவமயமாக்கத் தன் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக எழுதிய கடிதத்தின் தேதி 25-8-1856. வயது 33.
மாக்ஸ்முல்லர் தன் மனைவிக்கு தனது வேத மொழிபெயர்ப்பு இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் என்று எழுதிய கடிதத்தின் தேதி 9-12-1867 .அவரது வயது 44.
இந்தியா ஒரு முறை ஜெயிக்கப்பட்டது; ஆனால் இன்னொரு முறை ஜெயிக்கப்பட வேண்டும். அது கல்வி மூலமாக. இந்த இரண்டாவ்து வெற்றி மேலை நாட்டுக் கருத்துக்களை அங்கு புகுத்தும் என்று டியூக் ஆஃப் அர்ஜிலுக்குக் கடிதம் எழுதிய தேதி 16-12-1868 வயது 45
ஆக கையில் காசே இல்லாமல் தவித்த மாக்ஸ்முல்லரின் இளமைப் பருவமும் இந்தியாவைக் கிறிஸ்தவ மயமாக்கத் தன் வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக் இருந்த மாக்ஸ்முல்லரின் நடு வயதும் விவேகானந்தரிடம் என்னால் இந்தியாவிற்கு வர முடியாது; ஏனெனில் அங்கிருந்து நான் திரும்ப மாட்டேன். என்னை அங்கேயே எரிக்க வேண்டியிருக்கும் என்று நெகிழ்ந்து கூறிய மாக்ஸ்முல்லரின் முதுமைப் பருவமும் பல்வேறு உண்மைகளை உணர்த்துகின்றன.
ஆதாரத்துடன் இவை அமைவதால் அனைத்துமே உண்மைகளே!
இந்த காலவரிசை அட்டவணைப்படி அவர் வாழ்வையும் வாக்கையும் தொகுத்துப் பார்த்தால் மாக்ஸ்முல்லரின் மர்மம் ஓரளவு தெளிவாகக் கூடும்.
அவரை ஆட்டிப் படைத்த கிறிஸ்தவ சக்திகளும், அரசியல் சக்திகளும் அவரை எவ்வளவு தூரம் தம் செல்வாக்கிற்கு உட்படுத்தின என்பதையும் கால வரிசைப்படி உள்ள ஆவணங்கள் மூலம் ஆய்ந்து விடலாம்.
அவருக்கு சம்ஸ்கிருதமே தெரியாது; அதை அவருக்குச் சொல்லிக் கொடுத்தது சம்ஸ்கிருத எழுத்துக்களை மட்டுமே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு வயது இந்தியப் பையன் போன்ற திடுக்கிடும் தகவல்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பிழைகள் மலிந்த வேத மொழிபெயர்ப்பு என்று விமரிசனம் தந்திருக்கும் The Sacred Books of the Esat Sries – இன் ரஷியப் பதிப்பின் ஆசிரியரான போலாங்கர் (Boulanger) கூறுவதையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் சரியான நடுநிலைக் கண்ணோட்டத்துட்ன பார்த்தால் மாக்ஸ்முல்லர் கூறியதில் எது தவறு எது உண்மை என்ற முடிவுக்கு வந்து விடலாம்!
ஆய்வைத் தொடர்வோம்.
***