அழகியின் அழகு தரும் அனுபவம்! (Post No.4290)

Written by S.NAGARAJAN

 

 

Date:11 October 2017

 

Time uploaded in London- 6–43 am

 

 

Post No. 4290

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

 

வீ ணா நாதமோ, பேச்சோ, கலசமோ, மார்பகமோ, வாழைத் தண்டோ, தொடையோ, – அழகியின் அழகு தரும் அனுபவம்!

 

ச.நாகராஜன்

 

 

சம்ஸ்கிருதப் பாடல்களில் தனிச் சுவை கொண்டது சிருங்கார ரஸப் பாடல்கள்.

இப்படி சிங்கார ரஸப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

எடுத்துக்காட்டாக இரு பாடல்களை இங்கு பார்க்கலாம்.

 

அச்சின்னாம்ருதபிந்துவ்ருஷ்டி சத்ருஷீம் ப்ரீதிம் ததத்யா வ்ருஷாம்

யாதாயா விகலத்பயோதரபாராத் த்ருஷ்டவ்யதாம் காமபி I

அஸ்யாச்சந்த்ரமசஸ்தநோரிவ கரஸ்பர்ஷாஸ்பதத்வம் கதா

நைதே யன்முகுலிபவந்தி ஸஹஸா பத்யாஸ்த தேவாத்புதம் II

 

சுபாஷித ரத்னாகார பாண்டாகாரம் நூலில் உள்ள இந்தப் பாடல் அமைந்துள்ள சந்தம் சார்தூலவிக்ரிதம்.

இதன் பொருள்:

இடைவிடாது பொழியும் அமுத தாரையைப் போல  இன்பம் தருவது,

மார்பகங்கள் அசைவதால் விவரிக்கமுடியாத அழகைக் கொண்டிருப்பது, (அல்லது மழை பொழிவது)

காதலன் கை பட்டதால் ( அல்லது சந்திரனின் கிரணங்களால்)

இந்த தாமரை மார்பகங்கள் திடீரென்று சுருங்கவில்லை.

இது ஒரு ஆச்சரியம்!

 

இதை ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்துள்ளார் ஏ.ஏ.ராமநாதன் இப்படி:

 

Giving  pleasure to the eyes similar to a continuous shower of nectar, possessing an indescribable beauty by the movements of the breasts (or : shower of clouds) and touched by the hand of the lover (or: rays of the moon) these lotuses of breasts do not become contracted suddenly. This is a wonder.

Translation by  A.A.Ramanathan

 

இன்னொரு பாடலைப் பார்ப்போம்:

 

அதந்திரி வாக்வீணா ஸ்தனயுகலமக்ரீவகலஸா

வனப்ஜம் விருடதிலோத்பலதலமத்ரோருகதலி I

அகாண்டா தோர்வல்லி வதனமலகலங்க ஷஷதரஸ்

ததஸ்யாஸ்தாருண்யம் புவன விபரீதம் கடயதி II

 

இது  ஸ்ரீதரதாஸரின் சத் உக்தி கர்ணாம்ருதம் என்ற நூலில் வரும் ஒரு பாடல்.

இது அமைந்துள்ள சந்தம் ஷிகாரிணி.

ஸ்ரீதரதாஸர் என்ற கவி வதுதாஸர் என்பவரின் புதல்வர்.

வங்கத்தை ஆண்ட மன்னனான லக்ஷ்மணசேனன் என்பவன் இவரை ஆதரித்தான்.

இவர் வாழ்ந்த காலம் கி.பி. 1205ஆம் ஆண்டாகும்.

 

பாடலின் பொருள்:

அவளது பேச்சோ தந்தி இல்லாத வீணா நாதம் போல இருக்கிறது.

அவளது மார்பக கலசங்களோவெனில் கழுத்தில்லாத கலசம் போல உள்ளது.

அவளது தொடைகளோ இலைகளற்ற வாழைத் தண்டு போல இருக்கிறது.

அவளது கைகளோ கிளை இல்லாத கொடி போல உள்ளது.

அவளது முகமோ களங்கமற்ற சந்திரன் போல உள்ளது.

ஆக இப்படி அவளது இளமை பொதுவாக அனுபவிக்கும் விஷயங்களுக்கு மாறாக எதிராக புவன விபரீதமாக அல்லவா இருக்கிறது!

 

இதை அழகுற ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ஏ.ஏ.ராமநாதன் இப்படி:

 

Her speech is sweet as from a lute but without strings, her bosom-pots without necks, her eyes lilies  but not grown in water, her thighs plantain stems without leaves, her hand creepers  without branches, her face the moon without  the black spot – thus  does her youth bring together things which are opposed to common experience.

 

Translation by  A.A.Ramanathan

 

சாதாரண வாழ்வில் நாம் பார்க்கும் வீணை, கலசம், வாழைத் தண்டு, கொடி, சந்திரன் ஆகியவற்றைக் கொண்டு பெண்ணழகை வர்ணிக்கும் பாணியில் ஒரு புதிய உத்தியைக் காண்பிக்கும் கவிஞரின் திறன் தான் என்னே, என்னே!

 

சம்ஸ்கிருதத்தில் உள்ள பெண்களை வர்ணிக்கும் பாடல்களை ஒப்பிட வேறு மொழியில் சுவையான பாடல்கள் உண்டா, என்ன?

 

***

Leave a comment

1 Comment

  1. இந்தியாவில்இளைஞா்கள் ”பிரம்மச்சாியம்”காக்க மறந்ததுதான் சீா்கேடுகள் மலிந்ததற்கு காரணம் என்று சுவாமி விவேகானந்தா் அறைகின்றாா்.ஆனால் இப்படி பெண்களை தாய் என்றும் சகோதாி என்று கண்ணியமாக நினைக்காமல் அவளது உடல் உடலை மட்டும் அது இது என்று வா்ணனை செய்து ஆபாச பாடல்களை எழுதிக் குவித்து கலா்சாரதம் பண்பாட்கடு நாசம் செய்து நம்மை வலிமை இழந்தவா்களாக்கி பாழாக்கிய பாடல்கள்.குப்பைக்கு போக வேண்டிய குப்பகைளை ஏன் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: