எது மிகுந்த நன்மையைத் தரும்? (Post No.4317)

Written by S.NAGARAJAN

 

 

Date:20 October 2017

 

Time uploaded in London- 6–42 am

 

 

Post No. 4317

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

சம்சார சாரம் என்ன? எது மிகுந்த நன்மையைத் தரும்?

 

ச.நாகராஜன்

 

சம்ஸ்கிருத சுபாஷித ஸ்லோகங்களில் கிம் என்று ஆரம்பிக்கும் ஸ்லோகங்கள் ஏராளம் உள்ளன.

 

கிம் என்றால் என்ன, எது (what) என்ற வினாச் சொல்லாகும்.

ஆகவே நமக்கு பல விஷயங்களைப் பற்றிய நல்ல விடைகள் கிடைக்கும்.

 

இரண்டு செய்யுள்களை இங்கு பார்ப்போம்.

 

கிம் சம்ஸாரே சாரம்

பஹுஷோபி விசிந்த்யமானமிதமேவ I

மனுஜேஷு த்ருஷ்டதத்வம்

ஸ்வபரஹிதாயோக்யதம் ஜன்ம II

 

ஆதிசங்கரர் அருளிய ப்ரஸ்னோத்தர ரத்னமாலாவிலிருந்து எடுக்கப்பட்ட சுபாஷித ஸ்லோகம் இது.

 

இது அமைந்துள்ள சந்தம் ஆர்யா.

 

இதன் பொருள்:

உலக வாழ்க்கையின் சாரம் என்ன? (சம்ஸார சாரம் தான் என்ன?)

-இதை அடிக்கடி சிந்திக்கவேண்டும்.

 

இப்படிப் பட்ட சிந்தனையிலிருந்து மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை, வாழ்க்கையானது மற்றவருடைய நன்மைக்காகவும் தனது நன்மைக்காகவும் வாழப்பட வேண்டும்.

இதை ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்துள்ளார் கே.வி.சர்மா இப்படி:

 

What is the essence of worldly life? – This is to be pondered over frequently. The truth that is found by men (through such ponderings) is that life should be lived for others’ good as well as one’s own. (Translation by K.V.Sarma)

 

இன்னொரு கிம் ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

 

கிம் சௌர்யேன சராகஸ்ய மதக்ஷீபஸ்ய தந்தின: I

பந்தகீலாமலோபேன ய: க்ஷிபத்யவடே தனும் II

 

இதன் பொருள்:

எளிதில் உணர்ச்சிவசப்படுபவனுக்கு வீரம் இருந்து என்ன பயன்?

மதம் பிடித்திருக்கும் யானையால் என்ன பயன்?

தூய்மையற்ற பெண்ணை விரும்பும் பேராசைக்காரன் தனது உடலைக் கிணற்றில் போடுகிறான்.

 

இதை ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்துள்ளார் திரு ஏ.ஏ.ராமநாதன்:

What is the use of valour to one who is passionate?

What use is an elephant that is in rut?

That man throws his body into a well, who is greedy for the gain of an unchaste woman.

(Translation by A.A.Ramanathan)

 

இதை இயற்றியவர் பிரசித்தி பெற்ற காஷ்மீரைச் சேர்ந்த கவிஞரான க்ஷேமேந்திரர். இவர் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

 

தர்ப தலனம் என்ற நூலை இவர் இயற்றியுள்ளார். 587 சம்ஸ்கிருத செய்யுள்கள் அடங்கியுள்ள நூல் இது.. விசாரம் அல்லது எண்ணங்கள் என்ற தலைப்பில் அழகுற அமைந்துள்ள ஏழு அத்தியாயங்களைக் கொண்ட கவிதைச் செல்வம் இது.

மனித நடத்தைகளை நையாண்டி செய்து எழுதப்பட்டுள்ள நூல் இது.

 

சம்ஸ்கிருதத்தில் இது போன்ற கேலி செய்யும் அல்லது நையாண்டி செய்யும் பாடல்கள் இல்லை என்று சொல்லும் மேலை நாட்டவர் முகத்தில் கரி பூசும் அளவு அழகுற அமைந்துள்ள நையாண்டிக் கவிதைகள் ஏராளம் உள்ளன.

இதைப் படித்து இதில் கேலி செய்யப்படும் தீமைகளின் பலன்களை அறிந்து அவற்றை நீ நல்வாழ்க்கை வாழ ஒருவன் தலைப்பட வேண்டும் என்பதே நூலின் நோக்கமாகும்.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: