அழகிய மனம் – கணித மேதை ஜான் நாஷ்! (Post No.4342)

Written by S.NAGARAJAN

 

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 6-19 am

 

 

Post No. 4342

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

27-10-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 36வது) கட்டுரை

 

 

ஒரு அழகிய மனம் – கணித மேதை ஜான் நாஷ்!

 

 ச.நாகராஜன்

 

 

உலகின் பிரபல கணித மேதையான ஜான் நாஷின் (பிறப்பு 13-6-1928; மறைவு 23-5-2015)) வாழ்க்கையச் சித்தரிக்கும் ‘எ பியூட்டிஃபுல் மைண்ட் (A Beautiful Mind) என்ற படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.

 

2001 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நாஷாக ரஸ்ஸல் க்ரோ நடித்திருக்கிறார்.

 

சில்வியா நாஸர் எழுதி 1998இல் வெளியான புத்தகத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் வெளியானது.

மிக அற்புதமான ஒரு விஞ்ஞானியின் சோகமான வரலாறு அழகிய முறையில் இதில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க கணித மேதையான் நாஷ் கேம் தியரியில் பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தார். அன்றாட வாழ்வில் பல விஷயங்களில் முடிவெடுப்பது குறித்த இவரது கொள்கைகள் உலகின் அன்றாட நடப்புகளை நல்ல முறையில் அறிந்து கொள்ள உதவியது.

 

1994இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை இன்னும் இருவருடன் இவர் பகிர்ந்து கொண்டு பெற்றார். இத்துடன் ஏபல் பரிசையும் இவர் பெற்றார்.

 

21ஆம் வயதிலேயே தனது அருமையான் ஆய்வுக் கட்டுரையை அவர் எழுதி விட்டார். ஆனால் பின்னால் தான் அதை உலகம் அறிந்து மதித்தது. சிறு வயதில் அவருக்கான செல்லப் பெயர் “பெரிய மூளைக்காரன்

 

ஆலிஷா என்ற பெண்மணியைச் சந்தித்து அவர் மீது காதல் கொண்டு அவரையே மணந்தார் நாஷ்.

 

இவர் பற்றிய ஒரு முக்கியமான விஷயம் இவர் புத்தி பேதலித்தவராக இருந்தது தான்! (paranoid Schizophrenia வியாதியால் இவர் பாதிக்கப்பட்டிருந்தார்)

 

 முக்கியமான ஒரு சொற்பொழிவை நிகழ்த்த இருந்தவர் அதற்குச் சம்பந்தமில்லாமல் ஏதோ பேச ஆரம்பிக்கவே இவருக்குள்ள வியாதி வெளிப்படையாகத் தெரிந்தது. உடனடியாக மனோவியாதிக்காக சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

 

 

     திடீரென்று டெலிபோன் மணி அடிப்பது போல அவரது மூளையில் இடைவிடா ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது.

அத்துடன் சிவப்பு டை கட்டிக் கொண்டிருந்த அனைவரும் பயங்கரமான கம்யூனிஸ சதிகாரர்கள் என்று அவர் நம்பினார்.

 

    நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அயல்கிரக்வாசிகளிடமிருந்து வரும் செய்திகளைப் பெற்று பிரசுரிப்பதாக அவர் நம்பினார். அந்த செய்திகளைத் தன்னால் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் நம்பினார்.

  தனது மாணவர்களின் ஒருவருக்கு எல்லா கிரகங்களிலும் வண்டி ஓட்டுவதற்கான லைசென்ஸைக் கூட அவர் வழங்கினார்!

  

    சிகாகோ பல்கலைக்கழகம் அவருக்கு பெறுதற்கு அரிய ஒரு பதவியை வழங்க முன் வந்தது. ஆனால் அவர் அதை மறுத்து விட்டாஎ. ஏன் தெரியுமா? அண்டார்டிகாவின் சக்கரவர்த்தியாகும் வாய்ப்பு தனக்கு இருப்பதாக் அவர் நினைத்ததால் தான்.

 

பெரிய சக்கரவர்த்தியாக ஆகப் போகிறவர் “சின்ன பதவிகளை ஒப்புக் கொள்ளலாமா?

 

  தன்னை மிக முக்கியமான ரகசியம் வாய்ந்த ஒரு நபராக அவர் நம்பி அதற்கேற்ப நடந்து கொள்ள ஆரம்பித்தார்.

    குறிப்பிட்ட சில எண்களைப் பார்த்தவுடன் அது சொர்க்க்த்திலிருந்து ஒரு பெரிய ரகசியத்தைத் தெரிவிக்க வந்திருப்பதாக அவர் நம்பினார்.

 

 

இப்படி பல விதமான மனச் சித்திரங்களால் அவரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட ஆரம்பித்தது.

எதையும் மனதில் பேட்டர்னாகப் பார்ப்பது இவருக்கு கை வந்த கலை.

 

    எதிரியின் சங்கேத குறியீட்டுச் செய்திகளை மனதில் சித்திர வடிவங்களாகப் பார்த்து அந்தப் புதிரை இவர் அவிழ்ப்பதை ஹாலிவுட் படம் திறம்படச் சித்தரித்துக் காட்டும்.

 

    நார்வே சென்று ஏபல் பரிசை வாங்கிக் கொண்டு மனைவியுடன் மீண்டும் நியூ ஜெர்ஸி திரும்பினார் நாஷ். .அப்போது அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழக்கவே அவர்கள் இருவரும் விபத்தில் சிக்கி இறந்தனர்.

 

     சாதாரணமாக இருந்திருந்தால் இவ்வளவு கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்திருப்பேனோ என்னவோ, இப்படி இருந்ததால் தான் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று நாஷ் பின்னால் ஒரு சமயம் கூறினார்.

ஒரு விஞ்ஞானி உடலிலும் மனதிலும் குறைபாடு கொண்டிருந்தாவராக இருந்தாலும் கூட அதிலிருந்து மீண்டு சாதிக்க முடியும் என்பதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் நாஷ்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

எக்ஸ் ரே மெஷினைக் கண்டு பிடித்த மேடம் க்யூரி அதை முதலாம் உலகப் போரில் போர்க்களத்தில் பயன்படுத்த முற்பட்டது ஒரு சுவையான செய்தி!

 

போர் மூண்ட போது அந்தக் கால கட்டத்தில் எக்ஸ் ரே எடுப்பது மருத்துவ மனைகளில் மட்டுமே முடியும்!

ஆகவே அவர் ஒரு “ரேடியாலஜிகல் காரை உருவாக்கினார். அதில் எக்ஸ்ரே மெஷினை நிறுவினார். அதை இயக்க  மின்சக்தி வேண்டுமே! அதற்காக ஒரு டைனமோவையும் காரில் நிறுவினார்.

 

பிரெஞ்சு ராணுவத்திடமிருந்து இதற்கென எந்த உதவியும் கிடைக்கவில்லை.

 

மிகவும் ஏமாற்றமடைந்த கியூரி பிரான்ஸில் இருந்த பெண்கள் சங்கத்தை நாடினார். அந்தச் சங்கமும் தேவையான பணத்தைக் கொடுத்தது.அதை வைத்து முதல் காரை உருவாக்கினார்.

 

     அதற்கு லிட்டில் க்யூஇ என்று பெயரிட்டார். அது 1914ஆம் ஆண்டு முதன் முதலாக போர்க்களத்தில் செயல்பட ஆரம்பித்தது. அவரே இதை ஓட்டினார். இதற்காக வண்டியை ஓட்டவும் அவர் கற்றுக் கொண்டார்.

    ஒரு முறை அந்தக் காரின் டிரைவர் அதை ஒரு குழியில் விடவே கார் கவிழ்ந்தது. க்யூரி சளைக்கவில்லை. காரை நிமிர்த்தி சேதமான காரின் பாகங்களை சரி செய்து காரை ஓட்டிச் சென்ரார்.

 

 

   போர்க்களத்தில் காயமடைந்த வீரர்கள் எக்ஸ் ரேயின் உதவியினால் அறுவைச் சிகிச்சையை உரிய விதத்தில் மேற்கொண்டு உயிர் பிழைத்தனர்.

போர்க்களத்தில் 200 எக்ஸ்ரே மெஷின்களை நிலையான இடங்களிலும் அவர் நிறுவினார்.

 

செயல் திறம் மிக்க அபூர்வமான பெண்மணியாக அவர் திகழ்ந்தார்.

****

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: