ரிக் வேதத்தில் நகைச்சுவை நடிகன் (Post No.4366)

Written by London Swaminathan

 

Date: 4 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-48

 

 

Post No. 4366

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நாடகங்களில் விதூஷகன் என்று ஒரு கதாபாத்திரம் உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முன் நாடகங்கள் எழுதிய காளிதாசனின் படைப்புகளிலும் அதற்கு முன்னரும் பின்னரும் விதூஷகன் இல்லாத நாடகம் கிடையாது. இப்போது திரைப்படங்களில் வரும்  நகைச் சுவைக் காட்சிக்கு மூலமே சம்ஸ்கிருத நாடகங்கள்தான். எகிப்து, கிரேக்கம் போன்ற பழைய நாகரீகங்களிலும் கூத்து உண்டு. ந்தக் காலத்தில் நாடகம் என் றாலே சங்கீத அல்லது நாட்டிய நாடகம்தான். இதன் மூலம் வசனங்களை எளிதில் நினைவு வைத்துக் கொள்வதும் மக்களைக் கவர்ந்திழுப்பதும் எளிதாகும்.

ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் முதலியோர் ரிக் வேதத்துக்குக் கற்பித்த தேதிகளைக் கணக்கிற்கொண்டால் எகிப்திய நாடகங்களுக்கும் முன்னோடி நாம்தான்.

ரிக் வேதம் பாரத நாட்டின் கலைக்களஞ்சியம்; அதில் இல்லாத விஷயங்களே இல்லை. அண்மையில் பழைய மலர் ஒன்றைப் படித்தேன். அதில் ரிக் வேதத்தில் கோமாளி பற்றிய குறிப்பு கூட இருப்பதை ஒருவர் எழுதியுள்ளார். நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாடகத்தின் தோற்றம் பற்றிய கட்டுரையில் ரிக் வேதத்திலுள்ள உரையாடல்களில் நாடக மூலக்குறுகளைக் காணலாம்.

உலகின் மிகப் பழைய நூலான– கவிதைத் தொகுப்பான — ரிக் வேதத்தின்  உரையாடல்கள் பத்தாவது மண்டலத்தில் உள்ளன:–
RV 10-51: அக்னி- வருணன்
RV 10-10 யமன்  – யமி

RV 1-179 அகஸ்தியர்– லோபாமுத்ரை

RV 10-95 புரூருவஸ்- ஊர்வஸி

RV 10-86 இந்திரன் — வ்ருஷகபி

மேலும் பல உரையாடல்கள் RV 10-135; 10-124; 4-26; 10-108; 10-28 உள்ளன.

புருஷமேத யாகத்தில் 200 பேருக்கு மேலாக “நரபலி கொடுக்கும்” பட்டியலில் காரி என்பவர் சிரிப்புக் கடவுளான ஹாசனுக்கு பலியிடப்படுவதாக உள்ளது. உலகில் சிரிப்புக்கும் ஒரு கடவுள் வேத கலத்திலேயே இருந்திருக்கிறது; (வாஜசநேயி சம்ஹிதை, தைத்ரீய சம்ஹிதை;VS 30-6 and T S 3-41.)  நாடகத்தில் கோமாளி என்னும் கதாபத்திரம் இருந்தனர் என்றால் அவர்களுடைய கலை ரசனை, முன்னேற்றத்துக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

 

வண்டி இழுக்கும் குதிரை லேஸான பாரத்தை விரும்பும்; அது போல நகைச்சுவையுண்டாக்கும் கோமாளிகள் நல்ல சிரிப்பை உண்டாக்கும் லேஸான சொற்களை விரும்புவர்; காதலன் காதலியை நாடுவது போல; தவளைகள் உணவுக்காக ஏங்குவது போல –ரிக் வேதம் 9-112-4

 

சிலர் ரிக் வேதப் பாடல்களை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்:–

சமயப் பாடல்கள்

தத்துவப் பாடல்கள்

சமயத் தொடர்பற்ற பொதுப் பாடல்கள்

 

சமயம் தொடர்பான துதிப் பாடல்கள்தான் இதில் அதிகம்; நான் யார்? எங்கிருந்து வந்தேன்? பிரபஞ்சத்தின் காரணம் என்ன? என்ற சில தத்துவப் பாடல்களும் உள்ளன.

 

சமயத் தொடர்பற்ற பாடல்கள் பல சுவையான விஷயங்க ளைச் சொல்லும்; இதில் திருமணப் பாடல்களும் ஈமக் கிரியை தொடர்பான பாடல்களும் அடக்கம்.

 

சூரியன்-  சந்திரன் திருமணம் தொடர்பான ஒரு துதி (10-85) சுவையான துதியாகும். கணவன்  – மனைவி இருவர் இடையே உள்ள உறவு சூரியன், சந்திரன் போல இருக்க வேண்டுமாம்:

 

காலையில் ஒன்றும் இரவில் ஒன்றும் வெளிச்சம் தருவது போல வேலைக ளைப் பகிர வேண்டும்

இரண்டும் பூமியில் உயிரினங்கள் தழைக்க உதவுகின்றன (உயிருடன் உள்ளவரின் ஆரோக்கியத்துக்கு சூரியன் உதவும்; தாவரங்கள் வளருவது சந்திரனால் என்பது இந்துக்களின் நம்பிக்கை

 

 

நான் இன்று உன் கையைப் பிடிக்கிறேன் (பாணிக் கிரஹணம்) (மணமகன் தனது வலது கையால், மணமகளின் வலது கையைப் பிடித்துக்கொண்டு சொல்லும் மந்திரம்); உன்னுடைய கைகளைப் பற்றுவதால் நல்லதிர்ஷ்டம் வாய்க்கட்டும்; நாம் இருவரும் முதிய வயது வரை ஒன்றாக வாழ்வோம். என் வீட்டின் ராணியாக இருக்க உன்னை அர்யமன், பக, சவித்ரு, புரந்த்ரி ஆகியோர் அனுப்பியுள்ளனர்.

 

இந்த மந்திரத்தின் (10-85-36) கடைசி மந்திரம் முத்தாய்ப்பு வைத்ததாக இருக்கிறது:

 

என் வீட்டில் ஆட்சி செய்

கணவனின் பெற்றோர்கள்

சஹோதரன், சஹோதரி மீதும்தான்

எல்லோரும் உனக்குட் பட்டவர்களே10-85-46

திருமண துதிகளைப் படிக்கையில் பெண்களை எவ்வளவு உயர்த்தி வைத்து இருக்கிறார்கள், எவ்வளவு புகழ்கிறார்கள் என்று அறியலாம்.

 

சுபம், சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: