சம்ஸ்கிருத காதல் கவிதைகள் (Post No.4593)

Date: 8 JANUARY 2018

 

Time uploaded in London- 6-00 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4593

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

சம்ஸ்கிருத காதல் கவிதைகள் : ராகத்திலே அநுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா!!!

 

ச.நாகராஜன்

 

1

1955ஆம் ஆண்டு, பொங்கல் தினத்தன்று வெளியான படம் தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கியது.

மிஸ்ஸியம்மா.

அதில் ஒரு பாடல் காட்சி. மக்களை ஆட வைத்தது.

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும்

பொது சொந்தமன்றோ….

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் உள்ளமே

ஜில்லெனத் துள்ளாதா?

ராகத்திலே அநுராக மேவினால்

ஜகமே ஊஞ்சலில் ஆடாதா!

பாட்டுடன் மக்கள் ஆடினர்.

பாடலை ஜெமினி கணேசன் பாட ஜமுனா ராணி ஆடுகிறார்.

அதை ரங்காராவ் மனைவியுடன் ரசிக்கிறார். சாவித்திரியோ நடு நடுவில் வந்து பார்த்துக் குமுறுகிறார்.

தஞ்சை ராமையா தாஸின் பாடலுக்கு ராஜேஸ்வர ராவ் இசையமைத்துள்ள இந்தக் காட்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

சரி, ஒரு கேள்வி.

ராகத்திலே அநுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா?

ராகத்திலே அநுராக மேவினால் என்றால் அர்த்தம் என்ன?

உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

 

2

காதலை 64 வ்கையாக போஜ மன்னன் பிரித்தார். அதில் ராகமும் உண்டு; அநுராகமும் உண்டு.

இந்த அநுராகத்தை விளக்கும் பாடல்கள் ஆயிரக் கணக்கில் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

வித்யாகரர் என்று ஒரு தேர்ந்த கவிதா ரஸிகர்.

நல்ல பாடல்களாகத் தொகுக்க ஆரம்பித்தார்.

சுமார் 275க்கும் மேற்பட்ட கவிஞர்களைத் தேர்ந்தெடுத்தார்.

அவர்களின் சிறந்த பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தார்.

1738 பாடல்கள் அவர் தேர்வில் வெற்றி பெற்றன.

அதை சுபாஷித ரத்னகோசம் என்ற பெயரில் நூலாகத் தொகுத்தார்.

அதில் 50 தலைப்புகள்.

அதில் ஒரு தலைப்பு: The Blossoming of Love. காதல் அரும்புதல்!

இந்த தலைப்பில்  மட்டும் 70 பாடல்கள் உள்ளன.

1738 பாடல்களும் அருமை என்றாலும் இந்தத் தலைப்பில் உள்ள சில பாடல்களை இங்கு பார்ப்போம்.

 

3

 

வித்யாகரரின் காலம் சரியாகத் தெரியவில்லை.அவரைப் பற்றிய விவரங்களையும் ஆதாரபூர்வமாக அறிய முடியவில்லை.

இருந்தாலும் இவரது பாடல்களை அரும்பாடு பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள டேனியல் ஹெச்.ஹெச்.இங்கால்ஸ் என்ற அறிஞர், இவர் புத்தமதத்தைச் சேர்ந்த பேரறிஞர் என்றும். பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இவர் வங்காளத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.

4

இங்கால்ஸின் An Anthology of Sanskrit Court Poetry என்ற நூலிலிருந்து The Blossoming of Love – காதல் அரும்புதல்

என்ற பகுதியிலிருந்து சில கவிதைகள்:

The glances of your eye,

Which stretches to your ear, darker than waterlily

Were enough to steal a heart.

What needs it, pretty lass,

With such ado pretending to bind up your loosened braid

To show your armpit, camphor dusted

And, marked with lover’s nail?

அடடா, உன் கண் பார்வை!

செவி வரை நீண்டிருக்கும் அது, அல்லி மலரை விடக் கறுத்திருக்கிறதே!

அது ஒன்று போதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள!

ஓ, அழகிய இளம் பெண்ணே,

பரபரப்புடன் தளர்ந்திருக்கும் உன் கேஸப் பின்னலைத் தூக்கி

முடிப்பது போலப் பாசாங்கு செய்கிறாயே!

அதன் தேவை தான் என்ன?!

வாசனை தூவப்பட்ட உனது அக்குளையும்

அங்கிருக்கும் காதலனின் நகக்குறியைக் காண்பிக்கவா?

*

Her body is a pond

Her face thereof a lotus and her arms the lotus stems,

Her loveliness the water and her triple fold the wave.

Therein a strong young elephant,

No other than my heart, has plunged,

But caught fast in love’s quicksand will never rise again.

 

அவள் மேனி ஒரு குளம்

அங்கிருக்கும் அவளது முகமோ தாமரை. அவளது கரங்களோ தாமரைத் தண்டுகள்.

அவளது பேரழகு தான் நீர்; அவளது மூன்று மடிப்புகளோ அலைகள்!

அங்கு ஒரு வலிமை வாய்ந்த யானை –

எனது இதயத்தைத் தான் சொல்கிறேன் – மூழ்கியது!

ஆனால் காதல் என்னும் புதைகுழியில் அது சிக்கி விட்டதால்

அது மீண்டும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது!

 

*

புதிதாக மணம் ஆகி விட்டது. கணவன் நெடு நாள் பிரிந்திருக்கப் போகிறான். வெளியூர் செல்ல இருக்கிறான். அவன் செல்ல வேண்டிய இடத்தை அடையவே நூறு நாள் பிடிக்கும்.

புது மணப்பெண்ணின் மனம் என்ன பாடுபடும்?

பார்க்கலாமா?

“You will return in an hour?                                                                                               Or at noon? Or after?

Or at least some time today!”

With such words the young bride,choked with tears,

Delayed her love’s departure for a land

Distant at hundred days.

 

“ நீ இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவாயா?

அல்லது நடுப்பகலில் வருவாயா? அல்லது சற்று நேரம் கழித்தா?

இன்றுக்குள் திரும்பி விடுவாய், இல்லையா!”

கண்ணீர அரும்ப தொண்டை அடைக்க இளம் மணப்பெண்

தன் கணவனிடம் கூறும் சொற்கள்… இவை

அவன் கிளம்பும் பயணத்தை சற்று நேரம் தள்ளி வைத்தது.

அவன் போக வேண்டிய இடத்தை அடையப் பிடிக்கும்

நூறு நாட்கள்.

*

மூன்று முத்தான கவிதைகளைப் பார்த்தோம்.

1738ஐயும் படிக்க வேண்டும் என்கின்ற ஆவல் எழுகிறதில்லையா?

வித்யாகரரின் ரஸனை அற்புதமானது. சுந்தரமான சுபாஷித ரத்ன கோஸத்தை நாடுங்கள். படியுங்கள். ரஸியுங்கள்

***

நன்றி : An Antholoty of Sanskrit Court Poetry translated by Daniel H.H.Ingalls

Cambridge, Massachusetts Harvard University Press, 1965

குறிப்பு: இதைப் படிப்பவர்கள், ‘காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை; அதன் உட்பிரிவோ 12288!! அதிசயமன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்!!!’ என்ற கட்டுரையையும் படிக்கலாம்.

 

Leave a comment

2 Comments

  1. “பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ” பாடலைக் குறிப்பிட்டது பற்றி நன்றி. இது அக்காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய இனிய பாடல். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பிருந்தாவனம், நந்தகுமாரன் என்று வருகிறதே தவிர, இது முற்றிலும் தமிழ் சினிமா பாணியில் அமைந்த காதல் பாட்டு. சினிமா சூழ்நிலையிலிருந்து பிரித்துப்பார்த்தால் அவ்வளவு பொருள் பொதிந்தபாட்டு எனச்சொல்லமுடியாது, இதே படம் பின்னர் ஹிந்தியில் “மிஸ் மேரி ” என்ற பெயரில் வந்தது, இதுவும் ஹேமந்த் குமார் இசையமைப்பில் மிக இனிய பாடல்களைக் கொண்டது, தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலால் “பிருந்தாவனமும் நந்தகுமாரனும் ” பாடலின் மெட்டு மட்டும் ஹிந்தியிலும் அப்படியே தொடர்ந்தது. ஆனால் இதற்கு பாடல் எழுதிய கவிஞர் ராஜேந்தர் க்ரிஷன் [ Rajinder Krishan] உண்மையாகவே அருமையான கவிதை படைத்தார். இது வெறும் சினிமா பாடலாக இல்லாமல் ஒரு பஜன் பாடல் போலவும் அமைந்து இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. இந்த ஹிந்திப் பாடலை அப்படியே கீழே தருகிறேன்.
    वृन्दावन का कृष्ण कन्हैया
    सब की आँखों का तारा
    मन ही मन क्यों जले राधिका
    मोहन तो है सब का प्यारा
    वृन्दावन का कृष्ण कन्हैया …

    जमना तट पर नन्द का लाला
    जब जब रास रचाये रे
    तन मन डोले कान्हा ऐसी
    बंसी मधुर बजाये रे
    सुध-बुध भूली खड़ी गोपियाँ
    जाने कैसा जादू डारा
    वृन्दावन का कृष्ण कन्हैया …

    रंग सलोना ऐसा जैसे
    छाई हो घट सावन की
    ऐ री मैं तो हुई दीवानी
    मनमोहन मन भावन की
    तेरे कारण देख बाँवरे
    छोड़ दिया मैं ने जग सारा
    वृन्दावन का कृष्ण कन्हैया …

    ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் இந்தப் பாடலின் இலக்கிய நயத்தையும், பக்தி வளத்தையும் ரசிக்கலாம். இதற்கு ஈடாகத் தமிழ் சினிமா பாடல்களைச் சொல்லவேண்டுமென்றால் பழைய “ஜாதகம்” படத்தில் வரும் ” மதி குலவும் யாழிசையே கண்ணன் குழலிசை யாவாயோ ” என்ற பாடலும் “மாடுகள் மேய்த்திடும் பையன் தன்னை மதிப்பவர்க்கே மெய்யன்” என்ற பாடலும் சொல்லலாம். [ இரண்டையும் பாடியது எம்.எஸ்.ராஜேஸ்வரி. பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை.] ஏன், இதே தஞ்சை ராமையதாஸ் “மாயா பஜார்” படத்தில் எழுதிய “பலே பலே தேவா, இந்தப் பாரோர் அறியார் உன் மாயா” என்ற பாடலையும் சொல்லலாம்! [ இதற்கும் முன்பு பாபனாசம் சிவன் போன்றவர்கள் எழுதிய பாடல்களைச் சொல்லவில்லை.]

  2. super song. deep meaning. thanks for your comments. it is very difficult to get the lyrics. But u have given. the other songs which have been highlighted are also of the first order. thanks again s nagarajan

Leave a comment