Written by London Swaminathan
Date: 9 JANUARY 2018
Time uploaded in London 11-13 AM
Post No. 4599
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))
பிராமணர்கள் தீ போன்றவர்கள்; மிகவும் பக்கத்தில் போனால் சுடும்; மிகவும் விலகிச் சென்றால் குளிரும்; நீங்கள் கஷ்டப்படுவீர்கள்- என்று ஒரு தமிழ்க் கவிஞர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எச்சரித்தார்.
உலக மஹா புத்திமான், பேரறிவாளன், உலகின் முகல் பொருளாதார நூல் எழுதிய நிபுணன், சாணக்கிய நீதி, அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களை யாத்த பெரு மகன், மகத சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்னரும் குடிசையில் வாழ்ந்த உத்தமன், ஏழைப் ப்ராஹ்மணன் ஆகிய சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராஹ்மணாள் பற்றி இதை விட ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கிறான்.
இரண்டு பிராமணர்கள் நின்று கொண்டிருந்தால் குறுக்கே போகாதே!
பிராமணன் இருந்தால் அவனுக்கு எதிரே கால் நீட்டாதே.
இதோ தமிழ், ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!!
விப்ரயோர்விப்ரவஹ்ன்யோஸ்ச தம்பத்யோஹோ ஸ்வாமிப்ருத்யர்யோஹோ
அந்தரேண ந கந்தவ்யம் ஹலஸ்ய வ்ருஷபஸ்ய ச
சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 5
பொருள்—“இரண்டு பிராமணர்களுக்குக் குறுக்கே போகாதே; ப்ராஹ்மணனுக்கும் அக்னிக்கும் (தீ) குறுக்கே போகாதே போகாதே; அவ்வாறே கணவன்– மனைவி, எஜமானன்–சேவகன் (முதலாளி- தொழிலாளி), உழுகலன் (ஏர்)- காளை மாடு இவர்களுக்கு இடையிலும் செல்லாதே.
பாதாப்யாம் ந ஸ்ப்ருசேதக்னிம் குரும் ப்ராஹ்மணமேவ ச
நைவ காம் ந குமாரீம் ச ந வ்ருத்தம் ந சிசும் ததா
சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 6
பொருள்
அக்னி, ஆசிரியர், ப்ராஹ்மணன், பசு மாடு, இளம் பெண், முதியவர், குழந்தை ஆகியோருக்கு முன்னால் காலை நீட்டி உட்காராதே, படுக்காதே.
சாணக்கியன் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்து பார்க்கில் பல விஷயங்கள் நமக்கே புரியும்; உதாரணங்கள் மனக் கண் முன் சித்திரம் போலச் செல்லும்.
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு!
அந்தக் காலத்தில் ப்ராஹ்மணர்கள் தூய ஒழுக்கத்தின் சின்னமாக விளங்கினர்; அந்தக் காலத்தில் மூவேந்தர்களும் கூட ப்ராஹ்மணர்களைக் கண்டு அஞ்சினர். சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய கபிலரையும் பரணரையும் கண்டு சேர சோழ பாண்டியர்கள் மரியாதையுடன் கூடிய பயம் கொண்டனர். ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று தமிழ்ப் பார்ப்பான் கபிலனை சங்கப் புலவர்கள் புகழ்ந்து, தலைமேல் வைத்துக் கூத்தாடினர்.
‘’குணம் என்னும் குன்று ஏறி நிற்கும் பார்ப்பனர்கள் வெகுளி கணம் ஏயும் காத்தல் அரிது’’ என்பதால் பயந்தனர். அந்தக் காலத்தில், அவர்கள் வாயில் நல்ல சொற்கள் வந்தால் அது பலிக்கும்; சுடு சொற்கள் வந்தால் அது ஒருவனுடைய குலத்தையே வேர் அறுக்கும் என்பது உண்மையாக இருந்தது.
இதனால் வேளாண் குடி மக்களுக்கு திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார், ஒரு நல்ல புத்திமதி செப்பினார்:
சூதாட்டத்தில் பணம் கிடைக்க வேண்டும் என்று காத்திராதே; விரும்பாதே; பார்ப்பனர்களை தீ என்று கருது;
அகலாது அணுகாது குளிர் காய்பவர் போல இரு;
உழவுத் தொழிலை கடனே என்று செய்யாமல், விரும்பிச் செய்.
வேளான்குடிக்கு அழகாவன
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல்- ஒழுகல்
உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு
–திரிகடுகம், நல்லாதனார்
முற்காலத்தில் இதே தீ உவமையை வள்ளுவர், அரசர் பெருமக்களுக்கு உவமித்தார். தமிழ் வேதமாகிய திருக்குறள் சொல்லும்:–
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்– குறள் 691
அரசர் கூட வேலை செய்வோர், ராஜாவை மிகவும் நெருங்காமலும், விலகிப் போகாமலும், குளிர் காய்பவன் போல, தம் கடமையைச் செய்ய வேண்டும்.
பிற்காலத்தில் நன்னூல் எழுதிய பவணந்தி போன்றோரும் இதைப் பயன் படுத்தினர்.
உண்மையில் இந்த தீக்காயும் உவமையை முதல் முதலில் பயன்படுத்தியவர் ஆதி சங்கரர் ஆவார். அவர் எழுதிய பாஷ்யங்களில் இந்த உவமை வருகிறது.
பகவத் கீதை 9-29 ம் ஸ்லோகத்துக்கு அண்ணா எழுதிய உரையில் இதை மேற்கோள் காட்டுவார்:
அக்னியைப் போல் நான் உளேன்; எட்டி நிற்பவர் குளிரை அக்னி போக்குவதில்லை; ஸமீபித்து வருவோர் குளிரைப் போக்குகிறது. இது அக்னியின் பாரபக்ஷமன்று. அது போலவே பக்தர்கள் என் அருள் பெறுவதும். மற்றவர் பெறாததும்- சங்கரர்
விஷ்ணுஸர்மன் எழுதிய பஞ்ச தந்திரத்திலும் இந்த தீ உவமையைக் காணலாம்.
–Subham–
R.Nanjappa (@Nanjundasarma)
/ January 9, 2018இது சுவையான விஷயம். ஆனால் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் வேறு ஒரு கோணத்தைக் காட்டியிருக்கிறார். பிராமணர்களுடனான நட்பு பாலும் நீரும் சேருவது போல என்று ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அதாவது, சேர்ந்தபின் பிரிப்பது கஷ்டம்! [ இது பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பில் கண்டது.]