காப்பிகுடித்தால் 100 ஆண்டுகள் வாழலாம்! (Post No.4608)

Einstein image in Coffee!

 

Written by London Swaminathan 

 

Date: 12 JANUARY 2018

 

Time uploaded in London  6-32 AM

 

 

 

Post No. 4608

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

பிரான்ஸ் நாட்டின் கல்வி நிபுணர், நூல் ஆசிரியர் பாண்டநெல் (Fontenelle) என்பவர் ஆவார். அவருடைய முழுப் பெயர் பெர்னார்ட் லெ பொவியர் தெ பாண்டநெல் என்பதாகும். அவர் 1657 முதல் 1757 வரை வாழ்ந்தார்.

 

பாண்டநெல் மிகவும் காப்பி குடித்ததால் டாக்டர்களுக்கு மிகவும் கவலை. அவருக்கு 80 வயதானபோது டாக்டர்கள் அவரைச் சந்தித்தனர். அவருக்குப் புரியும்  வகையில், மெதுவாக, அழகாக டாக்டர்கள் பேசினர்.

 

“அன்பரே, இந்தக் காப்பி இருக்கிறதே. அது ஒரு விஷம்– உமது உடலை மிகவும் பாதிக்கும்; விஷம் என்று சொன்னால் போதாது. அது ‘மெதுவாக’க் கொல்லும் விஷம்– என்றெல்லாம் விளக்கினர்.

 

அவர் இதைப் புரிந்து கொண்டாரா, இதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று அறிய டாக்டர்கள் அவருடைய முகத்தை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 

அவர் மெதுவாக வாய் திறந்தார்– சரியாகச் சொன்னீர்கள்; மெதுவாகக் கொல்லும் விஷம் என்று; கொஞ்சம் தப்பு விட்டு விட்டீர்கள். அது மெதுவாகக் கொல்லும் விஷம் இல்லை; ‘மிக மிக மிக மெதுவாகக் கொல்லும்’ விஷம்! பாருங்கள்! தினமும் எவ்வளவு காப்பி குடிக்கிறேன்;  80 வயது வரை நன்றாக இருக்கிறேனே! என்றார்.

டாக்டர்களுக்கு உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது. ஈதென்னடா, செவிடன் காதில் சங்கு ஊதிய கதை ஆகி விட்டதே என்று எண்ணி வெளியேறினர்.

 

டாக்டர்கள் சொன்னது பிழை ஆகிவிட்டது. அதற்குப் பின்னரும் பாண்டநெல் 20 ஆண்டுகள் வாழ்ந்தார். நூறு வயதை நெருங்க ஒரு மாதம் இருக்கையில் உயிர் நீத்தார்.

 

காப்பி குடிப்போருக்கு எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி!

 

காப்பி  குடியுங்கள்! நன்றாகக் காப்பி குடியுங்கள்! குடித்துக் கொண்டே 100 ஆண்டுக் காலம் வாழுங்கள்! நோய் நொடி இல்லாமல் வாழ்க!!

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

xxxx

நீண்ட காலம் வாழ சுருட்டு குடியுங்கள்!

 

பிரிட்டனில் பிரதமராக இருந்தவர் ஜோசப் சாம்பர்லைன் (Joseph Chamberlain): 70 வயதிலும் இளமை ததும்பும் எழில் மிகு தோற்றம்! அவர் மேனி அழகின் ரஹசியத்தை அறிய பலருக்கும் ஆசை. அவரை நெருங்கினர்; தைரியமாகக் கேட்டனர்.

 

“ஐயன் மீர்! உங்கள் மேனி அழகின் ரஹசியம் என்னவோ?”

 

இந்தக் கால நடிகைகளாக இருந்திருந்தால் அவர் என் மேனி அழகிற்கு நான் பாவிப்பது  xyz –  சோப்புதான் என்று சொல்லி இருப்பர்.

 

ஆனால் சாம்பர்லைனோ சற்றும் தயக்கம் இன்றி பதில் கொடுத்தார்.

 

இளமைத் துடிப்புடன் வாழ வேண்டுமா?

 

அதிகம் நடக்காதீர்கள்; எங்கெங்கெல்லாம்  காரில் செல்ல முடியுமோ அங்கெல்லாம் காரிலேயே செல்லுங்கள் நடந்து தொலையாதீர்கள்!!!

சுருட்டு குடிக்கும் வழக்கம் இருந்தால் இரண்டு சுருட்டுகளில் எது சக்தி வாய்ந்ததோ, எது நீளமானதோ அதைக் குடியுங்கள்; அது மட்டுமல்ல அனாவசியமாக நடக்காதீர்கள்; எங்கெங்கெல்லாம் காரில் போக முடியுமோ அங்கெல்லாம் காரில் செல்லுங்கள்– என்றார்.

கேட்க வந்தவர்களுக்கு ஏனடா கேட்க வந்தோம் என்பது போல ஆயிற்று!

 

xxx

மாக்ஸிம் கார்க்கி

சோவியத் ரஷ்யாவின் புகழ் பெற்ற  எழுத்தாளர் (Maxim Gorky) மாக்ஸிம் கார்க்கி. அவர் சோஷலிஸ அறிஞர். அவரை அமெரிக்காவுக்கு அழைத்த நண்பர்கள் அவரை (Coney Island) கோனி தீவிலுள்ள ஒரு கேளிக்கைப் பூங்காவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே வீர தீர சாஹசச் செயல்கள் நடந்தன. இவருக்கு எல்லாவற்றையும் நன்கு காட்டிவிட வேண்டும் என்று எண்ணி பாதாள அறை, நிலத்தின் மேலுள்ள மண்டபம் ஆகியவற்றுக்கு எல்லாம் அவரது நண்பர்கள் அழைத்துச் சென்றனர்.

 

 

அவர் பார்க்காத சர்கஸ் காட்சிகளே இல்லை; அந்தர் பல்டி, குட்டிக்கரணம், வேகப் பாய்ச்சல், மேலிருந்து கீழே குதித்தல் தாவுதல் எல்லா வற்றையும் நண்பர்கள் காட்டினர். கார்க்கியின் நண்பர்களுக்குப் பரம த்ருப்தி.

கார்க்கிக்கு????????

 

எல்லோரும் ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கியது. மாக்ஸிம் கார்க்கியிடம் அவருடைய நண்பர்கள் வினவினர்.

அன்புடையீர், எங்களுக்கு எல்லாம் இன்று உங்களுடன் இருந்தது மிகவும் பிடித்து இருந்தது; உங்களுக்கும் மகிழ்ச்சிதானே?

 

அவர் உடனே பதில் தராமல் சற்று நேரம் யோசித்தார்; பின்னர் சொன்னார்.

 

அட தோழர்களே; நீங்கள் எல்லோரும் எவ்வளவு துயரத்துடன் வாழ்கிறீர்கள்!!

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

சுபம் —–

Leave a comment

2 Comments

  1. ஜோசப் சேம்பர்லைன் என்ன காரணத்தினால் சொன்னாரோ, தெரியாது. ஆனால் இன்று டில்லி, சென்னை, ஹைதராபாத், பெங்களூர் போன்ற நகரங்களில் வீதிகளில் நடப்பது சாத்தியமில்லை, பாதுகாப்பானதும் அல்ல! காரில் போவதே பிழைக்கும் வழியாகும்! முன்பு பம்பாயில் மட்டும் இந்த நிலை இருந்தது- இன்றோ, வாகனங்கள் பெருகிவிட்டதாலும், அதை ஓட்டுபவர்களிடையே கட்டுப்பாடு அருகிவிட்டதாலும், நடந்துசெல்பவர்களுக்குத் தொல்லைதான்.
    60 ஆண்டுகளுக்கு முன் ஹிந்தி திரைக்கவிஞர் மஜ்ரூ ஸுல்தான்புரி பம்பாயைப் பற்றி எழுதினார்:

    ऐ दिल है मुश्किल जीना यहाँ
    ज़रा हट के, ज़रा बच के
    ये है बॉम्बे मेरी जाँ
    இது இன்று அனேகமாக எல்லா ஊர்களுக்கும் பொருந்தும்! வாகனத்தில் செல்வதே பாதுகாப்பு என்று ஆகிவிட்டது!

    காப்பியைப் பற்றி என்ன சொல்ல! டாக்டர்கள் , சாதுக்கள் என்ன சொன்னாலும் காப்பிப் பழக்கம் விடவில்லை! யோகாசார்யா (பெங்களூர் ) சுந்தரம் எழுதிய யோகப் புத்தகத்தில் காபிக்கு எதிராக ஒரு குறள் எழுதினார்:
    காப்பிச் சனியன் கருப்புச் சனியன்
    விரட்டிச்சனியன் ஒழி.
    ஆனால் காப்பிப் பழக்கம் குறையவில்லை!
    பல வருஷங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் பஞ்சாபிகேச ஐயர் என்பவர் “டிகிரி காஃபி ” என்பதை அறிமுகப்படுத்தினார். பொறுக்கியெடுத்த தரமான கொட்டையை [ robusta, peaberry, plantation] மண் சட்டியில், விறகு அடுப்பில் நிதானமாக வறுத்து, ( 100 gm raw seeds should be reduced to 80 grams on roasting- that was the standard) அவ்வப்போது சிறிய அளவில் கைமெஷினில் பொடியாக்குவார். தானேவளர்த்த பசுமாடுகளில் தினமும் மூன்றுமுறை பால் கறந்து, தண்ணீர் கலக்காமல் அவ்வப்போது தேவையான அளவில் காய்ச்சி புதிதாக இறக்கிய டிகாக்ஷனுடன் கலந்து டிகிரி காப்பி தயார் செய்வார்! இன்று எல்லாம் மாறிவிட்டது! மண்சட்டியில் விறகு அடுப்பில் நிதானமாக வறுப்பது சாத்தியமில்லை; பாலும் பசும் பாலோ, தூய பாலோ இல்லை- reconstituted packet milk. மாடுகளுக்கும் தீவனம் முன்புபோல் (இயற்கையாக) இல்லை; அதனால் பாலின் ருசியும் மாறிவிட்டது
    டிகிரி காப்பியை விடுங்கள். சாதாரண காப்பியே அரிதாகிவிட்டது, நாம் காப்பியை விடாவிட்டாலும் காப்பி நம்மை விட்டுவிடும் போலிருக்கிறது!
    காபிக்கொட்டையின் தரம் குறைந்துகொண்டே வருகிறது. இந்திய காஃபி போர்டு காப்பி பொருளாதாரத்தை சீரழித்தது. Borer தாக்கியதால் காப்பி பயிர் நசித்தது.. மல்டி நேஷனல் கம்பெனிகள் சிக்கிரி கலந்த காப்பியை பிரபலப்படுத்தி விட்டன., . கலப்படமில்லாத காப்பி கிடைப்பது அரிது; தூய காப்பிக்கு மணம், குணம் முன்புபோலில்லை! ( may be due to chemical inputs) போதாததற்கு, சீதோஷ்ணமாறுபாட்டால் இந்திய காப்பிப் பயிருக்கு நெருக்கடி! இன்னும் 50 ஆண்டுகளில் இங்கு காஃபி விளையும் சூழ்நிலையே இருக்காது என்கின்றனர். பாலும் தூய பால் இல்லை!
    45 வருஷங்களுக்குமுன், டெல்லியில் ஒரு ஹரிகதை நிகழ்ச்சியில் ஒரு பாகவதர் “ஶுக்லாம் பரதரம் ” சுலோகத்திற்கு காப்பி விளக்கம் தந்தார்:
    ஶுக்லாம் பரதரம் ( வெள்ளைப் பாலுடன் ) விஷ்ணும் ( கருப்பு டிகாக்ஷனைக் கலக்க), சதுர்புஜம் ( அதை டபரா-டம்ளரில் அவசரமாக ஆற்றும்போது நான்கு கைகள் இயங்குவது போலிருக்கும்) ப்ரசன்ன வதனம் ( பருகியவுடன் /பருகினால்தான் முகம் மலரும்!) ஸர்வவிக்னோப சாந்தயே ( இத்தகைய காப்பி காலையில் அருந்தியவர்களின் நாள் விக்னமின்றிக் கழியும்)
    அந்தப் பிள்ளையார்தான் நம் காப்பிக்கு குந்தகம் வராமல் காக்கவேண்டும்!
    Coffee- that adds such innocent pleasure to innumerable lives!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: