மாக்ஸ்முல்லர் மர்மம்! – 13 (Post No.4618)

Date: 15 JANUARY 2018

 

Time uploaded in London- 6–34 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4618

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 10 கட்டுரை எண் 4538 -வெளியான தேதி 24-12-17 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 11 கட்டுரை எண் 4563 -வெளியான தேதி 30-12-17 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 12 கட்டுரை எண் 4580 -வெளியான தேதி 4-1-18

 

இதனுடைய தொடர்ச்சியாக இந்தக் கடைசிக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 13

 

ச.நாகராஜன்

22

மாக்ஸ்முல்லரைப் பற்றிய பல முக்கிய விவரங்களை இது வரை பார்த்தோம்.

இப்போது மாக்ஸ்முல்லர் மர்மத்தின் பிரதான கேள்விக்கு வந்து அந்தப் புதிரை அவிழ்க்க முயல்வோம்.

மாக்ஸ்முல்லர் இந்தியாவின் நண்பரா அல்லது பிரிட்டிஷாரின் கைக்கூலியா?

மாக்ஸ்முல்லரின் வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

ஆதரவின்றி, கையில் காசின்றி, ஏதேனும் செய்து சற்று சம்பாதிக்க வேண்டும் என்கின்ற முதல் நிலை.இது அவரது இளமைப் பருவம்.

2 பிராங்க் செலவழிக்கக்கூட ‘வக்கில்லாத ஏழ்மை நிலையில், ஒரு சாக்லட்டை வாங்கிச் சாப்பிட்டு விட்டு இனி ஒருபோதும் சாக்லட் வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று தீர்மானித்தேன் என்று 10-4-1845 அன்று தன் டயரியில் எழுதியிருந்த அளவுக்கு ஏழ்மை நிலை.

இந்த காலகட்டத்தில் தான் இந்தியாவை முற்றிலுமாக, நிரந்தரமாக கபளீகரம் செய்ய நினைத்த மெக்காகே ஒரு வழியைக் கண்டுபிடித்தான்.

இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாகம் சீராக, நிரந்தரமாக இருக்க வேண்டுமெனில் ஹிந்துக்களின் சிலை கும்பிடும் உருவ வழிபாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அனைவரும் ஆங்கிலக் கல்வி வழி மூலம் கிறிஸ்தவராக ஆக வேண்டும் என்பதே மெக்காலேயின் திடமான நோக்கமாக இருந்தது.

அவன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இதை வலியுறுத்துகிறான் இப்படி:

In 1836, while serving as chairman of the Education Board in India, he enthusiastically wrote his father:

“Our English schools are flourishing wonderfully. The effect of this education on the Hindus is prodigious. ..It is my belief that if our plans of education are followed up, there will not be a single idolator among the respectable classes in Bengal thirty years hence. And this will be effected without any efforts to proselytize, without the smallest interference with religious liberty, by natural operation of knowledge and reflection. I heartily rejoice in the project.”

மாக்ஸ்முல்லர் மெக்காலேயை 1851ஆம் ஆண்டு ஒரு பார்ட்டியில் சந்தித்தார். ஆனால் அது சில நிமிடங்களே நீடித்தது. பின்னர் 1855இல் தான் அவர் மெக்காலேயை மீண்டும் சந்தித்தார். மாக்ஸ்முல்லரை மெக்காலேக்கு முதலில் பிடிக்கவில்லை.

மெக்காலேயின் மதமாற்ற எண்ணத்தைத் தன் எண்ணமாக மாற்றிக் கொண்டார் மாக்ஸ்முல்லர். பின்னர் தான் வழி பிறந்தது.

ஆங்கிலக் கல்வி மூலம் இந்தியரை நிரந்தர அடிமைகளாக் ஆக்க முயலும் மெக்காலே ஒரு புறம், எப்படியாவது மதமாற்றம் செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றத் துடிகும் பாதிரியார்கள் இன்னொரு புறம் – அவர்களின் மனப்போக்கை  நன்கு புரிந்து கொண்டார் மாக்ஸ்முல்லர். அதை அனுசரித்தார் அவர்.

 

ஒரு வழியாக வேலை கிடைத்தது. என்ன வேலை என்பதும் புரிந்தது.

அந்த வேலை கிடைத்த உற்சாகத்தினால் தன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா கிறிஸ்தவ மயமாகப் போகிறது என்று எழுதினார்.

வேதம் ஒரு குப்பை என்பது நிரூபணமாகி விடும் என்றார்.

வேத காலத்தை தனக்குத் தோன்றிய விதத்தில் “ஆராய்ந்து ஒரு காலத்தை நிர்ணயித்தார்.

பாதிரிகள் குஷியில் குதித்தனர்.

ஆனால் அவரது வாழ்க்கையின் இந்த முதல் பகுதி முடிவுக்கு வந்தது. ஐம்பது வயதுக்குப்  பின்னர் அவர் பார்வை மாறியது.

கண்களில் பாதிரிகளுக்காக மாட்டிக் கொண்ட மஞ்சள் கண்ணாடியை அவ்ர் கழட்டிப் போட்டார். ஒவ்வொரு வண்ணமும் தன் இயல்பான நிறத்தை அவருக்குக் காண்பித்தது.

பற்பல இந்திய அறிஞர்கள் வேதத்தை மொழி பெயர்த்து அவருக்கு அனுப்ப அனுப்ப வேதத்தின் மறுக்க முடியாத மிக உயரிய சிந்தனைகள் அவருக்குப் புலப்பட ஆரம்பித்தது. அதனால் வேத சிந்தனைகள்  உயரியதாக இருப்பதை உலகிற்கு உரிய முறையில் வெளிப்படுத்தினார்.

இந்த தீடீர் மாற்றம் பாதிரிகளைத் திகிலுறச் செய்தது. நோக்கத்தில் பிறழ்ச்சி என்று கண்டவுடன் மாக்ஸ்முல்லரை அவர்கள் கண்டிக்க ஆரம்பித்தனர். எதிர்த்தனர். கோபத்துடன் கூவினர். ஆனால் மாக்ஸ்முல்லர் இந்தியாவிற்கு உயரிய புகழாரத்தைத் தனது சொற்பொழிவுகளில் சூட்டினார்.

அது அவரதுIndia What It Can Teach Us –உரைகளாக மலர்ந்தது.

இதனால் அவரது பதவிக்கே வேட்டு வைக்கப் பார்த்தனர்.

 

   ஆனால் அவர் பணத்திற்காக யாரையும் அண்டி இருக்க வேண்டிய நிலையில் இப்போது இல்லை. அதாவது மெக்காலே பயம் அவர் இறந்த 1859ஆம் ஆண்டுடன் போனது. (மாக்ஸ்முல்லருக்கு வயது 36)

1883இல் தனது 60வது வயதில் இந்தியாவின் உன்னத நிலையை உள்ளது உள்ளபடி அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிலையிலிருந்து அடுத்த நிலையை அவர் அடைந்த போது தான் ஸ்வாமி விவேகானந்தர் அவ்ரை 28-5-1896 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருக்கு வயது 73. அதன் பின்னர் அவர் நான்கு ஆண்டு காலமே உயிருடன் இருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது இந்தியா பற்றிய மாக்ஸ்முல்லரின் எண்ணம் புகழும் நிலையிலிருந்து பரவசத்துடன் தொழுகின்ற நிலைக்கு மாறியிருந்தது.

அதைத் தான் ஸ்வாமிஜி கண்டு அப்படியே தனது கடிதங்களிலும், உரையாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆக மாக்ஸ்முல்லரை பிரிட்டிஷாரின் கைக்கூலி, ஏஜண்ட் என்று திட்டி அதற்கான ஆதாரங்களைக் காட்டுவோர் கூறுவது சரியே. அது அவரது வாழ்க்கையின் முதல் பகுதி. மோசமான் பகுதி. வேதங்களை இகழ்ந்த பகுதி.

அடுத்த நிலையில் அவர் தனது உரைகளில் மிக பிரமாதமாக இந்தியாவைப் புகழ்ந்ததைப் பரவலாக மேற்கோள் காட்டுவோர் கூறுவதும் சரியே. அது அவ்ரது வாழ்க்கையின் அடுத்த பகுதி. அதில் அவர் இந்தியாவைக் கண்டு வியக்கும் ஒருவராக – admirerஆக – மாறி இருந்தார்.

 

இறுதியாக ஸ்வாமிஜி அவரைச் சந்தித்த போது வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் அவர் இருந்தார். ஸ்வாமிஜி அவரைப் பற்றிய தனது கணிப்பைக் கூறியதும் சரியே. அந்த நிலையில் அவர் இந்தியாவை பக்தி பரவசத்துடன் பார்க்கும் நிலையில் இருந்தார்.இந்த நிலையைச் சுட்டிக் காட்டி ஸ்வாமி விவேகானந்தர் அவரைப் புகழ்ந்து கூறியதை மேற்கோள் காட்டுவோர் கூறுவதும் சரியே!

ஆக இந்த மூன்று நிலைகளில் மாக்ஸ்முல்லரைப் பார்க்கும் போது அவர் மாறுப்பட்ட நிலைகளில் இருப்பதை உணரலாம்.

வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவரைச் சந்தித்த ஸ்வாமிஜி அவர் மறுபிறப்பு உள்ளிட்ட அனைத்து ஹிந்து மதக் கருத்துக்களையும் ஏற்றுக் கோண்டிருப்பதாகக் கூறுகிறார்.

‘இந்தியா வந்தால் அங்கிருந்து திரும்ப மாட்டேன்; அங்கேயே என்னை எரிக்க வேண்டும் என்று கூறிய நிலையில் மாக்ஸ்முல்லர் இருந்தார் என்றும் ஸ்வாமிஜி தெரிவித்துள்ளார்.

 

ஒரு வியப்பான செய்தி.

இந்தச் செய்தியை நான் (இந்தக் கட்டுரை ஆசிரியர்) பிரபல எழுத்தாளர் மணியன் நடத்திய ஆன்மீக மாத இதழான ஞானபூமியில் படித்தேன்

குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகள் அவர்களின் உரையாடல் 1985 பிப்ரவரி இதழில் 28ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் பகுதி இது.

அந்தப் பகுதியை மட்டும் அவருடைய சொற்களிலேயே இங்கு பார்ப்போம்:

“ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த மாக்ஸ்முல்லர் என்ற பேரறிஞர் தனக்கென்று ஓர் உயில் எழுதி வைத்திருக்கிறார். அதில் அவர் “நான் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க விரும்பவில்லை. அப்படிப் பிறந்தாக வேண்டும் என்று ஆண்டவன் விரும்பினால் என்னை இந்தியாவில் இந்துவாகப் பிறக்கச் செய்யட்டும். அதிலும் தென்னிந்தியாவில் வேதம் பயிலும் ஒரு குடும்பத்தில் பிறக்கச் செய்யட்டும்! என்று எழுதி வைத்திருக்கிறார்.

 

இந்த மாக்ஸ்முல்லர் உயில் பற்றி மேலும் அறிய விரும்பி இணையதளத்தில் ஆராய ஆரம்பித்தேன்; இது பற்றி ஏதேனும் புத்தகம் உள்ளதா என்று தேடியும் பார்த்தேன். ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை. இந்தச் செய்தி உள்ளபடி உண்மையாக இருந்தால் மாக்ஸ்முல்லரின் இறுதி நிலையை ஊகித்து உணர்வது வெகு சுலபம்.

ஆக மாக்ஸ் முல்லர் பிரிட்டிஷாரின் கைக்கூலியாக இருந்து இந்தியாவின் நண்பராக மாறி கடைசியில் இந்தியாவின் பக்தராக ஆனார் என்ற முடிவுக்கு வரலாம்.

இது தான் மாக்ஸ்முல்லர் மர்மம்.

 

23

இனி அவர் ஆராய்ச்சிகளைப் பற்றியும் அது விளைவித்த சேதத்தையும் நினைக்கும் போது அதற்கென்ன பதில்?

மாக்ஸ்முல்லர் விளைவித்த சேதம் பெரிது.அதைக் கையில் ஏந்திக் கொண்ட கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதவாதிகள் வேதங்களை இழித்தும் பழித்தும் இன்று வரை கூறி வருகின்றனர்.

ஆனால் இதை மறுத்து ஏராளமான அறிஞர்கள் தங்கள மறுப்புக் குரலை உரிய ஆராய்ச்சிகள் மூலமாக வெளிப்படுத்தி உள்ளனர்; வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரே ஒரு எடுத்துக் காட்டை இங்கு தரலாம்:

Historical Gleanings from Sankrit Literature  – S.C.Banerji – 1979 (published by Oriental Publishers & Distributors, Daryaganj, New Delhi, India)

மேலே குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் பக்கம் 5இல் வரும் ஆராய்ச்சி உரை இது:-

Max Muller propounded the theory that Sanskrit literature had a hibernation during the early centuries of the Christian era. According to him, there was a literary interregnum in this period due mainly to continuous foreign invasions. This theory has been proved to be wrong on literary and epigraphical evidences. Also disproved is the hypothesis of a period of Prakrta literature out of which Sanskrit literature grew up.

இது போல மாக்ஸ்முல்லரின் தவறான பல முடிவுகளை வெளிப்படுத்தும் ஏராளமான அறிஞர்களின் உரைகள் உள்ளன. அதை விரிப்பின் ஒரு தனிப் புத்தகமாக  மலரும்.

24

இறுதியாக ஸ்வாமிஜியின் ஒரு கருத்துடன் இந்த மாக்ஸ்முல்லர் மர்மத்தை முடித்துக் கொள்வோம்.

இந்தியாவைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினாலும் அவ்வப்பொழுது ஒரு குறையையும் மாக்ஸ்முல்லர்  சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று ஸ்வாமிஜி குறிப்பிடுகிறார். ஆக அவருக்கு மாக்ஸ்முல்லரின் இந்தக் குறை தெரிந்தே இருந்திருக்கிறது.

நாளடைவில் அவர் இன்னும் திருந்துவார் என்று அவரது கருணை உள்ளம் நினைத்தது.

ஆனால் வேத காலம் பற்றி அவர் கூறிய உரையே முத்தாய்ப்பான ஒன்று..

உலகிலேயே மிகப் பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம் தான். இது எப்போது தோன்றியது  என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்; இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம்  வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.. ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன. ஏன், முன்னை விட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்

 (ஞான தீபம் மூன்றாம் தொகுதி பக் 219)

இக்கால ஆராய்ச்சியாளர் என்பதில் மாக்ஸ்முல்லரும் அடங்குகிறார். அவரது வேத காலம் பற்றிய கருத்துக்கள் தவறு என்பதை அழுத்தம் திருத்தமாக இப்படி ஸ்வாமிஜியே கூறி விட்டார்.

ஆகவே நமது இறுதி முடிவு இதுவாக இருக்கிறது:

மாக்ஸ்முல்லரில் தள்ளுவனவற்றைத் தள்ளி, கொள்வனவற்றைக் கொள்வோம்.

அவரது கைக்கூலி கருத்துக்களைக் கை கழுவி விட்டு விட்டு அவரது பக்திப் பரவசமான ஹிந்து மதம் பற்றிய கருத்துக்களை ஏற்போம்.

இந்த விஷயத்தில் இன்னும் அதிகம் ஆவல் கொண்டு மேலதிக விவரங்களை அறிய விரும்புவோர் மாக்ஸ்முல்லர் எழுதியவை, அவரைப் பற்றி எழுதியவைஸ்வாமி விவேகானந்தரின் அனைத்து நூல்கள் ஆகியவற்றைப் படிப்பதோடு மெக்காலே, ராஜா ராம் மோஹன் ராய் உள்ளிட்டவர்களைப் பற்றியும் படிக்க வேண்டும். அத்துடன் பாதிரிகளின் மதமாற்றப் பிரச்சாரம் பற்றிய ஏராளமான நூல்களையும் படிக்கலாம்.

இதுகாறும் இந்தத் தொடரைப் படித்து ஊக்குவித்த அன்பர்களுக்கு எனது நன்றி.

இதை வெளியிட்ட திரு . சுவாமிநாதன்www.tamilandvedads.com அவர்களுக்கு எனது நன்றி.

                  ச.நாகராஜன் பங்களூரு 10-1-2018

 

அன்பர்களின் கருத்தை வரவேற்கிறோம்.

Leave a comment

2 Comments

  1. மாக்ஸ்முல்லரைப்பற்றிய பல விவரங்களை இந்தத் தொடரில் படித்தோம். பல விஷயங்களை முதன்முறையாக அறிந்தோம்.
    ஒரு பக்கம் மாக்ஸ்முல்லரை “மோக்ஷ மூலர்” என்று சில பண்டிதர்கள் கூறிவந்தனர். (இதை நானே ஹரிகதையில் கேட்டிருக்கிறேன்) மறு பக்கம் அவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் கைக்கூலியாக, மெக்காலேயின் ஏஜென்டாக செயல்பட்டதையும் அறிந்திருந்தோம்.. மாக்ஸ்முல்லரின் சம்ஸ்க்ருத அறிவு தரமானதல்ல,அதை மற்ற ஜெர்மானிய அறிஞர்கள் ஏற்று அங்கீகரிக்கவில்லை, அதனாலேயே அவருக்கு ஜெர்மனியில் வேலை கிடைக்கவில்லை, அவர் அறிஞர்களிடையே சம்ஸ்க்ருதத்திலோ, அது பற்றியோ உரையாடப் பின்வாங்கினார், அவரால் ஸம்ஸ்க்ருதமொழிப்பேச்சை புரிந்துகொள்ள முடியவில்லை என்பது போன்ற விஷயங்களை என்.எஸ்,ராஜாராம் புத்தகத்தின் வாயிலாக அறிந்தோம். மேலாக, இண்டாலஜி, ஃபிலாலஜி என்ற போலி அறிவியல் போக்குகளைப் பற்றியும், மாக்ஸ்முல்லரின் அணுகுமுறை/விளக்கங்கள் ஆகியவை பற்றியும் ஸ்ரீ அரவிந்தர் ஆணித்தரமாக எழுதியிருப்பதையும் அறிவோம். [ ஸ்ரீ அரவிந்தர் சாயணரின் உரையையே ஏற்றுக்கொள்ளாதவர். அதன்மீது அமைந்த, வேதத்தையே கற்றறியாத ஒருவரின் உரையை அவர் எப்படி அங்கீகரிப்பார்?] இந்த நிலையில் ஸ்வாமி விவேகானந்தர் மாக்ஸ்முல்லரைப் புகழ்ந்து எழுதியதைப் புரிந்துகொள்ள முடியாமல்தான் இருந்தது! விவேகானந்தர் சில மனிதர்களை எடைபோடுவதில் தவறிவிட்டார்- மாக்ஸ்முல்லர் விஷயமும் அப்படித்தான் என்று தான் தோன்றியது,
    ஆனால் இந்தத் தொடரில் மாக்ஸ்முல்லர் வாழ்க்கையின் மூன்று நிலைகளை
    தெளிவாக எடுத்துக்காட்டி யிருக்கிறீர்கள். On the face of it, it looks reasonable. இவ்வளவு விஷயங்களை இதுவரை ஒரே இடத்தில் படித்ததில்லை. இது மேலும் படித்தறியத் தூண்டுகிறது.
    ஆனாலும், மாக்ஸ்முல்லரின் மொத்த விளைவு ஹிந்துக்களுக்கு எதிரானதே எனத் தோன்றுகிறது. மூன்று முக்கிய விஷயங்களைச் சொல்லலாம்:
    1. ஆரிய- த்ராவிட இன வாதக்கொள்கை. ஆரிய-த்ராவிட மென்பது இனவாதமல்ல, இது மொழிபற்றியது என்று மாக்ஸ்முல்லரே பின்னாட்களில் சொன்னாலும், இன வாதம் பூதாகாரமாகிவிட்டது. அரசியலாக்கப்பட்டு விட்டது.
    2. வேதத்தின் காலத்தை யாராலும் நிர்ணயிக்க முடியாது என்று பின்னர் சொன்னாலும், முதலில் அவர்சொன்ன கி.மு.1200-1500 என்பதையே இன்னமும் பெரிதும் பின்பற்றுகின்றனர். ( especially in the influential academic world.) இதன்படி உபனிஷதங்களின் காலம் இன்னும் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இது ஹிந்துக்களுக்குச் செய்த மிகப்பெரிய துரோகமாகும்.
    3. ஏதோ சில உயரிய கருத்துக்கள் இருந்தாலும், வேதம் பொதுவாக அர்த்தமற்ற உளறல்களின் தொகுப்பே என்பதுதான் மாக்ஸ்முல்லர் விட்டுச் சென்ற நிலை, இதை அவர் ஆணித்தரமாக எதிர்த்து எழுத்தில் மறுப்பு தெரிவித்ததாகத் தெரியவில்லை..
    ஆக. மாக்ஸ்முல்லர் பொதுவாக ஹிந்துக்களின் துரோகியாகத்தான் இருந்திருக்கிறார். சில சொந்தக் கருத்துக்களைச் சாதகமாகச் சொன்னாலும், பொதுவாக அவர் நிலை ஹிந்துக்களூக்குச் சாதகமாக இல்லை. அவர் வாழ்க்கையின் மூன்று நிலைகளையும் கருத்தில்கொண்டு பார்த்தாலும், அவர் ஹிந்துக்களுக்கு எதிராகச் செய்தவற்றின் தீமையே அதிகம்.
    மெக்காலே-மாக்ஸ்முல்லர் கூட்டுமுயற்சி மேன்மேலும் வலுவடைந்தே வருகிறது! They have destroyed Hindu India. India is not even a Hindu country now!

    The evil that men do lives after them;
    The good is oft interrèd with their bones.

    [Shakespeare in Julius Caesar]

  2. கருத்துக்களுக்கு நன்றி. ச.நாகராஜன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: