Date: 26 JANUARY 2018
Time uploaded in London- 7-21 am
Written by S NAGARAJAN
Post No. 4663
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.
((SECOND PART WAS POSTED YESTERDAY))
பாடல்கள் 198 முதல் 205
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பண்டித ஜனாப் K.அப்துல் சுகூர் (1933) பாடல்கள்
பாரதியார் பா மணம்
தேனிருக்குது தினையிருக்குது தென்பழனியிலே என்ற மெட்டு
- பூ மணக்குது புகழ் மணக்குது
புண்ணியர் பாடலிலே
பா மணக்குது பயன் மணக்குது
பாரதி பாட்டுள்ளே
- இனிமை மொழி யினிசையிலங்குது
இன்பப் பாடலிலே
பனி மொழிச்சியர் கலைமணக்குது
பாரதி பாட்டுளே
- காவியக்கனி கனிந்திருக்குது
காமர்ப் பாடலிலே
பாவியலணி பரந்திருக்குது
பாரதி பாட்டுளே
- புண்ணிய நெறி பொலிந்திருக்குது
புதுமைப் பாடலிலே
பண்ணியல்களின் நடைநடக்குது
பாரதி பாட்டுளே
- தகைமைதத்துவந் தவழ்ந்திருக்குது
தண்ணார் பாடலிலே
பகைமை குன்றிய வாழ்க்கை தங்குவது
பாரதி பாட்டுளே
- தேஞ்சாரம் பசுந் தேறலிருக்குது
தேசப் பாடலிலே
பாஞ்சாலி நிறை படர்ந்திருக்குது
பாரதி பாட்டுளே
- ஜெயந்தொனிக்குது திறனொலிக்குது
திவ்யப் பாடலிலே
பயந்தொதுங்குது தீண்டாமைப் பேய்
பாரதி பாட்டுளே
- சாதிக்கொடுமைகள் தகர்ந்தழியுது
சங்குப் பாடலிலே
பாதகர் செயும் மோசமோடுது
பாரதி பாட்டுளே
(கவிதையின் இறுதிப் பகுதி அடுத்து வரும்)
– “பாரதி” – மாதப் பத்திரிகை
உத்தம பாளையம் 1933 ஆகஸ்டு
கவிஞர் குறிப்பு : தெரியவில்லை
தொகுப்பாளர் குறிப்பு : மகாகவி பாரதியார் பற்றிய பல அரிய விஷயங்களை மிகவும் சிரமப்பட்டு சேகரித்து தனது இதழான குமரி மலர் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார் திரு ஏ.கே.செட்டியார் அவர்கள். 1974ஆம் ஆண்டு இதழ்களைப் பார்த்தால் பல சிறப்பான செய்திகளை அறியலாம். அவற்றுள் ஒன்று இந்தப் பாடல்.
நன்றி: என்றென்றும் எம் நினைவில் இருக்கும் – திரு ஏ.கே.செட்டியார்; குமரி மலர்
***