பாரதி போற்றி ஆயிரம் – 39 (Post No.4674)

Date: 29 JANUARY 2018

 

Time uploaded in London- 5-47 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4674

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 39

  பாடல்கள் 222 முதல் 231

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கவிஞர் தமிழழகன் பாடல்கள்

கோகிலக் கவிஞன்!

தெய்வத் தமிழினில் செய்வதே பாட்டெனச்

      சிந்தை உயர்த்திடுவான் – அதைக்

கைவரும் மாகலை காட்டி நமையும்

      கனவில் பெயர்த்திடு வான்

 

ஞாலம் வியந்திடக் காலம் கடந்தும் மெய்ஞ்

        ஞான ரதம் விடுவான்; – அதன்

மூலம்  புதுயுகச் சீலம் நமக்குற

         மோன பதம் நடுவான்!

 

நாட்டொரு மைக்கெனக் கூட்டழைப் பிட்டு

        நவயுகம் காட்டிடு வான்; – இசைப்

பாட்டும் பனுவலும் பாரதத் தாயின்

        பணிக்குமே சூட்டிடுவான்!

 

எத்தொழிலையும் இகழ்ச்சி இல் லாமல்

      இயற்றுக முன்னம் என்பான்; – தவ

உத்தமர் தாம் அவர் உண்மைத்தெய் வங்களாகி

      ஓங்குக பின்னும் என்பான்!

 

பெண்அடி மையினை எண்ணிடும் மூடர் தம்

        பேச்சினைத் தூற்றுமென்பான்; – அவர்

மண்ணடி மை யற மாதா பராசக்தி

        மாறிய தோற்ற மென்பான்!

 

சாதிகள் ஏதென்றும் சண்டை ஏ தென்றும்

       சகோதர வாதிடுவான்; – யார்க்கும்

நீதிகள் சொல்வதில் நிச்சயம் மாறாத

       நேர்மையும் ஓதிடு வான்!

 

புல்லிலும் வைரப் புதுப்படை வாங்கி முன்

       போருக் கெனத் திமிர்வான்; – நெடு

வில்லிலும் வாளிலும் வெல்படை  வாணி

       விஜய னொடும் நிமிர்வான்!

 

பழமை உரத்தின் செழுமையி லே வேர்ப்

       பலாவின் புதுமை செய்வான்; – அவை

முழுமையும் பின்னர்ப் பழமையாய் மாற

       முனையும் விதமும் சொல்வான்!

 

தனி என வாழும் மனிதனுக் கும்சமு

       தாயத்தின் பங்கை இட்டான்; – அதற்(கு)

இனி ஓர் விதி செய்வம் என்றுமுன் கூறி

       இதயமும் நன்கு தொட்டான்!

 

பாரதி இவ்வரும் பண்புறு நாட்டின்

      பரவசக் கோகிலமாம்! – அவன்

பேர் எதி லும் நிற்கப் பேணுவோர் வாழ்வெலாம்

      பின்பும் குதூகலமாம்!

 

தமிழழகன்: சந்தக்கவிமணி என்ற பட்டம் பெற்றுள்ள இவர் ஏராளமான கவிதைகளைப் புனைந்துள்ளார். பாரதிதாசன் விருது பெற்றுள்ளார்.

தொகுப்பாளர் குறிப்பு: 7-12-1975 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.

நன்றி: கவிஞர் தமிழழகன்; நன்றி: தினமணி சுடர்

 

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: