பக்திப் பாடல்கள் கேள்வி பதில் Quiz(Post No.4681)

Date: 30 JANUARY 2018

 

Time uploaded in London- 7-46 am

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4681

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

 

நீங்கள் பக்திப் பாடல்களைக் கேட்டிருந்தாலோ பாடியிருந்தாலா கீழ்கண்ட கேள்விகளுக்கு கட்டாயம்  பதில் சொல்ல முடியும்; முயன்று பாருங்கள். பக்திப் பாடல்களுடன் சில இலக்கிய நயம் மிக்க பாடல்களும் உள்ளன

Old books, Picture posted by A Sugumaran

  1. நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்

 

 

  1. நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
    வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்
    பேய்க்குண்டு நீறு

 

3.அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்

அன்பினில் போகுமென்றே – இங்கு

முன்பு மொழிந்துலகாண்டதோர் புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி

 

 

4.அப்பன் இரந்து உண்ணி; ஆத்தாள் மலை நீலி;ஒப்பறிய மாமன் உறி திருடி- சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன்

 

 

5.எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை! வாழிய நிலனே!

 

 

Picture of london pathmanabha iyer

6.அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்

ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே

என் அவலம் களைவாய்!

 

 

  1. துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற்
    பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்து ஒங்கும்
    நிஷ்டையுங் கைகூடும்,

 

 

  1. தீது இலா வடமீனின் திறம் இவள் திறம்

 

  1. காதன் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதங் கண்டேன்

 

  1. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தீயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராம என்ற இரண்டு எழுத்தினால்

 

  1. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவதுயாரும் அறிகிலார்

 

  1. அந்தணர் என்போர் அறவோர்

 

  1. அழகிய மயிலே!அழகிய மயிலே!

உனது தோகை புணையாச் சித்திரம்

ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்

 

  1. எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

 


  1. பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
    இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்
    குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
    திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

 xxxxx

 

ANSWERS

1.குமர குருபரர், சகல கலா வல்லிமாலை, 2. பட்டினத்தார் பாடல்கள், 3. பாரதியார் பாடல்கள், 4. காளமேகப் புலவர் பாடல்கள் , 5. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 6. பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 7.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 8. இளங்கோ, சிலப்பதிகாரம், 9. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10. கம்பன், கம்ப ராமாயணம், 11.திருமூலர் எழுதிய திருமந்திரம், 12. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 13. பாரதிதாசன் பாடல்கள், 14. தற்கால அவ்வையார், விநாயகர் அகவல்,  15. பட்டினத்தார் பாடல்கள்

 

–Subham–

 

 

 

 

 

 

 

Leave a comment

Leave a comment