Date: 5 FEBRUARY 2018
Time uploaded in London- 13-14
Written by London swaminathan
Post No. 4705
PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST
WITH YOU.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
AYURVEDA EXHIBITION – PART 3
Model of Heart
லண்டன் யூஸ்டன் ஸ்கொயர் (Euston Square) ஸ்டேஷன் அருகில் உள்ள வெல்கம் சென்டரில் (Wellcome Centre) ஏப்ரல் 8-ம் தேதி வரை ஆயுர்வேத கண்காட்சி நடைபெறும். ஹென்றி வெல்கம் என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்த மருத்துவ பொக்கிஷங்கள் இங்கே உள்ளன. அரிய சம்ஸ்கிருத நூல்களும், இந்தி யாவிலிருந்து எடுத்து வர முடியாத ஓலைச் சுவடிகளின் மைக்ரோ பில்ம் (Microfilm) முதலியனவும் இங்கு ஆராய்ச்சியாளருக்கு எப்போதுமே கிடைக்கும்.
நான் சில ஆண்டுகளுக்கு முன் வரை லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்து வந்தேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் வெல்கம் சென்டரில் உள்ள ஒரு மருத்துவ மாணவர் யுனானி வைத்யத்தில் ஆராய்ச்சி செய்தார். அவர் என்னிடம் தமிழ் கற்றதோடு யுனானி (Unani) பற்றி 100, 150 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பத்திரிக்கைகளில் வெளியான விளம்பரங்களை மொழி பெயர்க்கவும் சொன்னார். அது முதற்கொண்டு எனக்கு இந்த வெல்கம் சென்டருடன் தொடர்பு உண்டு.
பாம்புக்கடி முதல் செக்ஸ் மருத்துவம் வரை எல்லா இந்திய பொக்கிஷங்களும் இங்கே ஒரே கூரையின் கீழ் அறியலாம். இந்தியாவில் ஒவ்வொரு விஷயத்துக்கும் வேறு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேலும் வெள்ளைக்காரர் என்றால் வாயைப் பிளந்து கொண்டு எல்லாவற்ரையும் தேடிக் கொடுக்கும் நம்மவர்கள், வேட்டி கட்டிக் கொண்டு போகும் நம்மவரை மதிக்கவும் மாட்டார்கள்; எள்ளி நகையாடவும் செய்வர். அவ்விஷயத்தில் பிரிட்டிஷ் லைப்ரரியும், வெல்கம் லைப்ரரியும் 100 மடங்கு மேல்.
இன்னொரு சிறப்பையும் சொல்லி ஆக வேண்டும். பிரிட்டிஷ் மியூஸியத்தில் மற்றவர்களுக்குக் காட்டாத அரிய பொக்கிஷங்களை அவ்வப்பொழுது ஸ்பெஷல் கண்காட்சி என்று வைத்து 20, 30 பவுன் கட்டணம் வைத்து விடுகிறார்கள் போட்டொ எடுக்கவும் அனுமதி இல்லை. ஆனால் வெல்கம் லைப்ரரி அனைவருக்கும் இலவசமாக தங்கள் பொக்கிஷங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. புகைப்படமும் எடுக்கலாம்.
Sex Book பாலியல்
இந்தக் கண்காட்சியில் அனங்கரங்க என்ற சம்ஸ்கிருத செக்ஸ் (sex) பாலியல் நூல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது 500 ஆண்டுகளுக்கு முந்திய நூல். இந்தப் புஸ்தகத்தை 18 ஆவது நூற்றாண்டில் படி எடுத்துள்ளனர். இது உலகின் முதல் செக்ஸ் புஸ்தகமான காமசூத்ரத்துடன் ஒப்பிடப்படுகிறது. காம சூத்ரத்தை ஸம்ஸ்க்ருதத்தில் எழுதியவர் வாத்ஸ்யாயன மஹரிஷி.
உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அரிய பெரிய பொக்கிஷங்கள் ஸம்ஸ்க்ருத மொழியில் மட்டுமே உண்டு. ஷேக்ஸ்பியர் நாடகங்களை எல்லாம் விழுங்கிச் சாப்பிட்டுவிடும் காளிதாசன், பாஷா, சூத்ரகன் போன்றோரின் நாடகங்கள், ஹமுராபியை விழுங்கிவிடும் உலகின் முதல் சட்ட நூலான மநு ஸ்ம்ருதி, உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரம், உலகின் முதல் தெஸரஸான (Thesarus) அமர கோஷ அகராதி, உலகின் முதல் இண்டெக்ஸான (Index) வேத அநுக்ரமணி, உலகின் முதல் தத்துவ நூலான உபநிஷத், உலகின் முதல் இலக்கண நூலனலான அற்புதம் நிறைந்த பாணிணீய வ்யாகரணம், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம், பரத முனியின் பரத நாட்டிய சாஸ்திரம் — இப்படி தத்துவம், தர்கம், காம சாஸ்திரம், கணிதம், விமானவியல் என்று ஆயிரக்கணக்கான புஸ்தகங்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சீனம், கிரேக்கம், லத்தீன், எபிரேயம் தமிழ் ஆகிய அவ்வளவு பழைய மொழிகளின் நூல்களை ஒரு தட்டில் வைத்து ஸம்ஸ்க்ருத நூல்களை மற்றொரு தட்டில் வைத்தால் ஸம்ஸ்க்ருதம் மிக மிக கனமானது என்பது விளங்கும்
அவ்வகையில் அநங்க சாஸ்திரம் 10 பக்கங்களில் செக்ஸ் படங்களைக் கொண்டுள்ள ஒரு நூலாகும். ஒவ்வொரு பக்கத்திலும் 37 படங்கள் உண்டு. 17ஆவது நூற்றாண்டு முதல் நேபாள மன்னர்கள் செக்ஸ் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டியதால் இந்த நூல் உருவானது. இதனால் இதில் ஸம்ஸ்க்ருத மற்றும் நேவாரி மொழிகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
காஷ்மீரில் வாங்கிய பொருள்கள் பட்டியல்
டாக்டர் பைரா மால் (Dr Paira Mall) என்பவர் இந்தியாவில் டாக்டர் படிப்பு படித்தவர். ஐரோப்பாவில் பயிற்சி பெற்றவர். ஆகையால் இவர் 1911ல் காஷ்மீருக்குச் சென்று லண்டன் வெல்கம் சென்டர் மியூசியத்துக்காகப் பொருள்களையும் புஸ்தகங்களையும் வாங்கினார். இந்தப் பட்டியலைப் பார்த்தால் ஹென்றி வெல்கமுக்கு எதில் எதில் ஆர்வம் இருந்தது என்பது புலப்படும், டாக்டர் பைரால் 11 ஆண்டுகளுக்கு இந்த வெல்கம் சென்டருக்காக இந்தியாவில் பணிபுரிந்தார். பாம்புக்கடி மருந்து முதல் முஸ்லீம் தாயத்து வரை பல பொருள்களை காஷ்மீரில் 229 ரூபாய்க்கு வாங்கி லண்டனுக்கு அனுப்பினார். இந்தப் பட்டியலை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். இதிலுள்ள சில சுவையான விஷயங்கள்:–
காசுகள், தாயத்துகள்
காஷ்மீர் தொப்பி
ஸர்ப்ப வழிபாட்டு படங்கள்
இந்து தெய்வங்களின் படங்கள்
பச்சைக் கல் மீது நோயைப் போக்க எழுதப்பட்ட தாயத்துகள்
அராபிய, பாரஸீக, ஸம்ஸ்க்ருத,
திபெத்திய, சாரதா மொழி பிரதிகள், ஓலை ச்சுவடிகள்
நாவிதர் கத்திகள்
குரான் வரிகள் பொறிக்கப்பட்ட நெற்றிச் சுட்டிகள்
வெள்ளி யந்திரம்
சிவப்பு லிங்கம்
முதலியவற்றை வாங்கி லண்டனுக்கு அனுப்பினார்.
ஹென்றி வெல்கமின் சேகரிப்புகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன.
டாக்டர் பைரா மால், இந்தியாவில் தங்கிய 11 ஆண்டுகளும் லண்டனில் இருந்த வெல்கம் சென்டர் அதிகாரி தாம்ஸனுடன் தொடர்புகொண்டு அவ்வப்பொழுது கடிதம் எழுதி வந்தார்.
–சுபம்–