பழமொழிக் கதை- ‘சுழியா வருபுனல் இழியாதொழிவது’ (Post No.4729)

 

Date:11 FEBRUARY 2018

 

Time uploaded in London- 13-49

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4729

 

PICTURES ARE TAKEN from various sources

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

வெற்றி வேற்கையில் வரும் இந்த வாசகத்தின் பொருள்:

சுழியா= சுழித்துக் கொண்டு

வரு புனல் = ஓடும் வெள்ளத்தில்

இழியாது = இறங்காது

ஒழிவது = நீங்க வேண்டும்.

 

 

தென்னாட்டில் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. திம்மப்பனும், ராமப்பனும் அதை வேடிக்கை பார்க்கச் சென்றனர். வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய கறுப்பு மூட்டை வெள்ளத்தில் போவதைக் கண்டனர்.

ஆசை யாரை விட்டது?

 

ராமப்பன்: ஏய், ஏய் திம்மப்பா! அதோ பார், அதோ பார்; ஒரு பெரிய கம்பளி மூட்டை;அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருள் இருக்கலாம்; நீ போய் எடுத்து வா; பங்கு போட்டுக் கொள்ளலாம்—என்றான்.

திம்மப்பன்:– ஆமாம், அண்ணே! இன்று நாம் நரி முகத்தில் முழித்திருப்போம். நமக்கு இன்று அதிர்ஷ்டம்தான்; இதோ நான் நீந்திப் போய் அதை எடுத்து வருவேன்; 60 சதம் எனக்கு; மூட்டையில் 40 சதம் உனக்கு என்று சொல்லிக் குதித்தான் தண்ணீரில்!

 

உயிரையும் பொருட்படுத்தாது அந்த கறுப்பு மூட்டையைக் கைப்பற்றினான். ஆனால் அது கம்பளி மூட்டை அல்ல; வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கரடி! அதுவும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததால் திம்மப்பனை இறுகப் பிடித்துக் கொண்டது. திம்மப்பன் பலத்தை எல்லாம் பிரயோகித்து விடுவிக்க முயன்றான்; இயலவில்லை.

 

கரையில் இருந்த ராமப்பன் கத்தினான் – திம்மப்பா! மூட்டை ரொம்ப கனமாக இருந்தால் விட்டுவிடு; பரவாயில்லை;நீ ஜாக்கிரதையாக வா! என்றான்.

 

திம்மப்பன் சொன்னான்: நான் விட்டு விட்டேன்; அதுதான் என்னை விட மாட்டேன் என்கிறது!; இது ஒரு கரடி – என்றான்.

ராமப்பன் கரையில் திருதிருவென  முழிக்க கரடியும் திம்மப்பனும் நதி வழிப் பயணத்தைத் தொடந்தனர்.

 

ஆசைக்கு அளவே இல்லை; மேலும் ஆசை கண்களை மறைக்கும்;

 

ஆசையை ஒரு முறை நாம் பற்றிக் கொண்டால் அது நம்மை விடாது; அது நம்மைப் பற்றிக் கொண்டு அலைக்கழித்துவிடும்.

 

–சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: