Date:12 FEBRUARY 2018
Time uploaded in London- 11-26 am
Written by London swaminathan
Post No. 4734
PICTURES ARE TAKEN from various sources.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
Kaka Vahana from Tirunallaru Temple; Lalgudi Veda Picture
காகத்திடம் நல்ல குணங்களும் உண்டு; தீய வழக்கங்களும் உண்டு; அவரவர் பார்வையில் எது தென்படுகிறதோ அதை வைத்து அதனைப் பாராட்டவும் செய்வர்; இகழவும் செய்வர்; காகம் எல்லாரையும் அழைத்து உண்பதையும், மறைவாக செக்ஸ் செய்வதையும் தமிழ்ப்புலப்வர்கள் பாடினர். ஆனால் சாண்க்கியனோ அதிரடிட் தாக்குதலில் இறங்கிவிட்டார். இது 2300க்கு முந்தைய பாடல்; தமிழர்கள் பாடியதோ அவருக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர்!
எனது முந்தைய காகக் கட்டுரைகளில் நிறைய பாடல்கள் உள்ளன. அவற்றையும் காண்க.
சாணக்கியன் உரைப்பான்
நராணாம் நாபிதோ தூர்த்தஹ பக்ஷீணாம் சைவ வாயஸஹ
சதுஷ்பதாம் ஸ்ருகாலஸ்து ஸ்த்ர்ரீணாம் தூர்த்தா மாலினீ
ஸ்லோகம் 21, அத்யாயம் 5, சாணக்கிய நீதி
பொருள் என்ன?
மனிதர்களில் தந்திர சாலி நாவிதன்
பறவைகளில் தந்திர சாலி காகம்
மிருகக்ங்களில் தந்திர சாலி நரி
பெண்களில் தந்திர சாலி தோட்டக்காரி
XXXX
கெட்ட பறவை! சண்டாளன்!
இன்னொரு ஸ்லோகத்தில் காகத்தை சண்டாளன் என்று சாடுகிறான் சாணக்கியன்:
பக்ஷீணாம் காகஸ் சாண்டாளஹ பசூனாம் சைவ குக்குரஹ
கோபீ முனீனான் சாண்டாளஹ சர்வேஷாம் சைவ நிந்தகஹ
பொருள் என்ன?
பறவகளில் தாழ்ந்தது காகம்
மிருகங்களில் தாழ்ந்தது நாய்
முனிவர்களில் தாழ்ந்தவர் கோபக்காரர்
மனிதர்களில் தாழ்ந்தவன் பிறரைத் தூற்றுபவன்
அத்யாயம் 6, ஸ்லோகம் 2
XXXX
கவிஞர்களும் காகமும்
கவயஹ கிம் ந பஸ்யந்தி கிம் ந குர்வதி யோஷிதஹ
மத்யபாஹா கிம் ந ஜல்பந்தி கிம் ந பக்ஷந்திவாயஸாஹா
அத்யாயம் 10, ஸ்லோகம் 4
பொருள்
கவிஞர்கள் கண்களுக்குப் புலப்படாதது ஏதேனும் உண்டா?
பெண்கள் செய்யாதது ஏதேனும் உண்டா?
குடிகாரர்கள் உள றாதது ஏதேனும் உண்டா?
காகங்கள் சாப்பிடாதது ஏதேனும் உண்டா?
xxxxx
காகம் கருடன் ஆகுமா?
க்ணருத்தமதாம் யாதி நோச்சைராஸன ஸம்ஸ்திதஹ
ப்ராஸாத ஸிசிகரஸ்தோபி காகஹ கிம் கருடாயதே
அத்யாயம் 16, ஸ்லோகம் 6
ஒருவன் குணத்தினால் உயர்கிறானே தவிர பதவியாலோ அந்தஸ்தினாலோ அல்ல;
அரண்மனையின் உச்சியில் உட்காருவதால், காகம் கருடன் ஆகி விடுமா?
MY OLD ARTICLES
கா கா பராசக்தி பாடல் | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/கா-கா-பராசக்தி-பாட…
கா கா கா (பாராசக்தி திரைப்படப் பாடல்) !!!!!! காகம் பற்றிய பழமொழிகள்: நாங்கள் பட்டிக்காட்டு ஜனங்கள்தான் .எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆனால் நாங்கள் புழக்கத்தில் விடும் பழமொழிகள் நிறைய விஷயங்கள் உடைய பொக்கிஷம்.ஈதோ பாருங்கள்: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் …
https://tamilandvedas.com/tag/காகம்/
5 May 2017 – 5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை). 6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல். மாலை குளித்து மனை புகுதல் – சால.
பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் …
https://tamilandvedas.com/…/பிரிட்டனில்-கா-கா-…
27 Feb 2015 – காகம் என்னும் பறவை குறித்து இதற்கு முன் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடிய கா….கா…. பாடல் முதல் சங்க இலக்கியத்தில் காகத்துக்கு ஏழு பிண்டம் வைத்தல் வரை, வள்ளுவன் குறள் முதல் பாரதி பாடிய காக்கை, குருவி …
https://tamilandvedas.com/…/காகத்திடம்-கற்க-வே…
5 May 2017 – எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). … பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது …
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
–Subham —
R.Nanjappa (@Nanjundasarma)
/ February 12, 2018காகம் என்றதும் ஆர்.கே. லக்ஷ்மண் வரைந்த நூற்றுக்கணக்கான காக்கை வரைபடங்கள் நினைவுக்கு வருகின்றன! What expressions they carried!