பாரதி போற்றி ஆயிரம் – 54 (Post No.4753)

Date: 17 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-00 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4753

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 54

  பாடல்கள் 367 முதல் 376

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

 முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

செந்தமிழ் நந்தமிழ் பைந்தமிழ் வண்டமிழ்

   தண்டமிழ் எனவே புலவோர்கள்

சிந்தைதான் மகிழ்ந்திடச் சந்ததம் எந்தன்மேல்

   சிந்துகள் பாடியே மகிழ்ந்தார்கள்

வந்தனை செய்தெனை அன்னையென் பாரிளமை

   மாறாத கன்னி என்றுரைப்பார்

எந்தன்மேல் கொண்டுள்ள அன்பினால் சொல்வதால்

   யாவையும் சமமாய் ஏற்றுவந்தேன்

 

என்றுயான் தோன்றினேன் எங்குதான் தோன்றினேன்

   என்பதை எவரும் அறிந்ததில்லை

இன்றதைச் சொல்லவே எண்ணற்ற ஆய்வுகள்

   ஏற்றுளோர் கூட உணர்ந்ததில்லை

அன்பினால் உரைத்திடும் முதற்சங்க வரலாற்றை

   ஆய்வாளர் என்போர் ஏற்கவில்லை

முன்னவர் மொழிந்தகல் தோன்றிமண் தோன்றாத

   முன்பிறந் தேனதில் மாற்றமில்லை

 

கல்லுடனே மண்கூடத் தோன்றாத காலத்தே

   கழறுமொழி தோன்ற லுண்டோ?

சொல்லுதற்கே பொருத்தமில்லை என்றுரைப்போர் சற்றதனை

   சிந்தித்தால் பொருள்வி ளங்கும்

எல்லையில்லா புவியதனில் மலைகள்தான் முதன்முதலில்

   எங்கணுமே தோன்றிற் றென்பார்

செல்லரித்தல் போலவைதான் தேய்ந்துதேய்ந் தல்லவோ

   செய்யமண்ணாய் ஆன தென்பார்

 

கல்தோன்றி மண்தோன்றாக் காலமெனில் கல்மண்ணாய்க்

   கரைந்தயிடைக் கால மன்றோ?

சொல்லுதற் கரிதான அந்நாளில் மனிதகுலம்

   தோன்றியது வரலா றன்றோ?

நல்லதொரு மொழியாக நாவினிக்கப் பேசிடவே

   நானன்னாள் பிறந்தே னன்றோ?

வல்லவர்கள் பலகாலும் ஆய்வுபல செய்தன்றோ

   வன்மையுடன் தேர்ந்து ரைத்தார்

 

இவ்வகையில் ஆய்ந்து பார்த்தால் – அந்நாள்

   இவ்வுலகில் தோன்றி வந்த

செவ்விய முதன்மை மொழியே – இந்த

   செய்யதமிழ் மொழியாம் யானே!

எவ்வகையில் பார்த்த போதும்  – இதனை

   எவருமே மறுத்தற் கில்லை

உவ்விடக் கதிரவன் போல் – அன்றோ

   உயர்வினைப் பெற்றே னன்றோ?

 

அகத்திய முனிவ நென்பான் – எனக்கு

   அரியநல் இலக்க ணத்தை

அகமெலாம் நிறைந்து போற்ற – அன்று

   ஆக்கினான் என்று ரைப்பார்

தகவறு நூல்க ளெல்லாம் – புலவோர்

   சங்கங்கள் அமைத்துத் தந்தார்

இகத்தினில் எனக்கு ஈடாய் – இயம்ப

   எவருமில்லை என்று வாழ்ந்தேன்

 

பிரளயம் பிரளயம் பிரளயமே – அதில்

   பூமியின் ஒருபகுதி தாழ்ந்ததுவே!

தரணியில் லெமூரியா கண்டமென்றே – சொல்லும்

   தனிப்பெரும் தென்குமரி மூழ்கியதே!

மரணத்தின் பிடியிலே உயிர்களெல்லாம் – சென்று

   மடிகையில் நூல்களை யார்காப்பார்?

பெருநிதி யாய்வந்த இலக்கியங்கள் – அந்தப்

   பிரளய வெள்ளத்தில் அழிந்தனவே!

 

என் செய்வேன் எவ்விதம் வாழ்ந்திடுவேன் – இனி

   எவ்விதம் தரணியில் நிலைபெறுவேன்?

என் தேகம் எனிலெந்தன் நூல்களன்றோ? – அவை

   எல்லாமே போயினுயிர் நிலைப்பதேது?

என்பெயர் சொல்லவும் யாருமின்றி – உலகில்

   எனக்கென அடையாளம் ஏதுமின்றி

என்னுயிர் அடங்கியே வீழுவேனோ? – அன்றி

   எவ்வித மேனுமுயிர் வாழுவேனோ?

 

காலமே எனையழிக்க நினைத்த போதும்

   காவலன் பாண்டியன் காத்து நின்றான்

சீலமாய் தென்மதுரை சென்று சேர்ந்தான்

   சீருடன் தமிழ்ச்சங்கம் மீண்டும் கண்டேன்

வாலறிவன் அருளாலே கடலை வென்றான்

   வடிம்பலம்ப நின்றபாண் டியனாய் நின்றான்

சாலவே அவனாலே எழுச்சி பெற்றேன்

   சங்கயிலக் கியங்களால் உயர்வு பெற்றேன்

 

நக்கீரன் கபிலனொடு பரண னென்றே

   நற்புலவர் என்மைந்தர் பலரும் வந்தார்

முக்கண்ணன் கவிதையாய் இருந்திட் டாலும்

   மொழிந்தது குற்றமெனில் துணிந்து சொன்னார்

எக்காலும் ஓய்வின்றி நடந்து சென்று

   எங்குமுள வாழ்க்கையினைப் பதிவு செய்தார்

இக்காலம் வரையந்த சங்க நூல்கள்

   ஏற்றத்தால் நானுயர்ந்து வாழ்கின் றேனே..

       

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, அவரே தொலைபேசியில் 5-2-2018 அன்று தொடர்பு கொண்டு பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி.

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: