தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும் தோன்றினவா? (Post No 4790)

RESEARCH ARTICLE Written by London Swaminathan 

 

Date: 27 FEBRUARY 2018

 

Time uploaded in London – 14-15

 

Post No. 4790

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

This follows my earlier articles that shows t English and other languages came from the root words of Sanskrit and Tamil

 

 

தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும்  தோன்றினவா? (Post No 4790)

நான் 50 ஆண்டுகளாக மொழி ஆராய்ச்சி செய்கிறேன். சின்னப் பையனாக இருந்த போது காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) ஸம்ஸ்க்ருதம்- ஆங்கிலம் தொடர்பு பற்றிப் பேசிய உபந்யாஸத்தில் மாதா=மதர், ப்ராதா= ப்ரதர், ஹோரா= ஹவர் (MAATHAA-MOTHER, BRAATHAA- BROTHER, HORA- HOUR) இப்படிப் பல சொற்களை மேற்கோள் காட்டி மொழிந்த சொற்பொழிவு அது.

 

(அந்தக் காலத்தில் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நுல் கிடையாது; காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளின் பேருரைகளை மடத்தினரே சிறு சிறு புத்தகங்களாக வெளியிட்டனர்; பின்னர் கலைமகள் காரியாலயம் வெளியிட்டது. அவைகளில் அவர் சொன்ன ஸம்ஸ்க்ருத ஸ்லோககங்கள் அப்படியே ஸம்ஸ்ருதத்தில் இருக்கும்; இப்போதும் அந்தப் புஸ்தகங்கள் சில என்னிடம் உள்ளன)

உலகம் முழுதும் மொழியியலாளர்கள் (LINGUISTS) இன்று வரை ஒப்புக்கொண்ட ஒரு “உண்மை” — இந்திய ஐரோப்பிய மொழி (INDO- EUROPEAN )ஒன்றின் கிளையே ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய மொழிகள் என்பதாகும். பின்னர் மதுரைப் பல்கலைக் கழக லைப்ரரி உறுப்பினராக இருந்தபோது ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் சுமார் 1380 ஆங்கிலச் சொற்களுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் உள்ள தொடர்பை ஒருவர் மொழியியல்  ரீதியில் சமர்ப்பித்து காசி இந்து பல்கலைக் கழகத்தில் (BENARES HINDU UNIVERSITY) டாக்டர் பட்டம் வாங்கிய நூல் அது. அந்த நூலை அப்படியே

கைப்பட ஒரு கொயர் நோட்டுப் புத்தகத்தில் எழுதி லண்டனுக்கு கொண்டு வைத்து இருக்கிறேன்.

 

பின்னர் லண்டனுக்கு வந்து வசிக்கத் தொடங்கியபோது,  25 ஆண்டுகளுக்கு முன்னர்,  பி.பி.சி.யில் (B B C TAMIL SERVICE) சாத்தூர் சேகரன் (30-09-1991)என்ற மொழி ஆர்வலரைப் பேட்டி கண்டு ஒலிபரப்பினேன். தமிழோசை நேயர்கள் அதற்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர். ஆனால் அவர் உலகிலுள்ள 140-க்கும் மேலான மொழிகள்

தமிழ் மொழியில் இருந்து தோன்றியதற்கான சான்றுகள் இருப்பதாகச் சொல்லி பல புத்தகங்களை எனக்கும் தமிழோசை சங்கர் அண்ணாவுக்கும் வழங்கினார். அவர் சொன்ன கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை என்பதை தனிப்பட்ட உரையாடலில் விளம்பினேன்.

 

அதற்குப் பின்னர் லண்டனில் CHANNEL FOUR சானல் ஃபோர் (4) நிகழ்ச்சியில் ஒரு சுவையான நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. அதில் புதிய மொழிக் கொள்கையை முன்வைத்த ஒரு ரஷ்யயரையும் இஸ்ரேலியரையும் காட்டினார்கள். அவர்களின் கூற்றுப்படி பைபிளில் கூறப்படும் TOWER OF BABEL பேபல் கோபுரக் கதை உண்மையே என்றும் ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்ததால் ஒரு மொழிதான் பேசினர் என்றும் காலப்போக்கில் அவர்கள் பிரிந்து சென்ற பின்னர் மொழிகள் கிளைவிட்டுப் பரவின என்றும் பகர்ந்தனர்.

 

அண்மையில் லண்டன் பல்கலைக் கழக நூலகத்த்தில் இருந்து உலக மொழிகளின் அட்லஸ் (ATLAS OF WORLD LANGUAGES) என்ற புத்தகத்தைப் படித்தபோது நியூ கினி (NEW GUINEA) தீவில் ஆதி வாசி மக்கள் 750-க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், ஆஸ்திரேலியப் பழங்குடி (AUSTRALIAN ABORIGINES) மக்கள் 250 -க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், உலக மொழி இயல் அறிஞர்களுக்குப் புதிராக விளங்குகிறது; பழைய மொழியியல் கொள்கைகளுக்குச் சவாலாக அமைந்துள்ளது என்று செப்பியு ள்ளதை அறிந்தேன்.

 

எமனோ, பர்ரோ போன்ற அறிஞர்கள் திராவிட மூல சொற்கள் சுமார் 4500 மட்டுமே என்று எழுதிய (ETYMOLOGICAL DICTIONARY OF DRAVIDIAN LANGUAGES) புத்தகத்திலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். அரிசி,  நீர் என்பன மற்ற ஐரோப்பிய மொழிகளில் ஆதிகாலத்தில் இருப்பதைக் காட்டினேன். கிரேக்க மொழியில் பழைய (PALEO) தொலை (TELE) ஓடு (ODOMETER) கை (CHI), நீர் (NEREIDS=WATER NYMPHS)  முதலிய சொற்கள் அலக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கு முன்னரும் இருப்பதைக் காட்டினேன். யவன, ஹோரா (தொல்காப்பியத்தில் ஓரை) முதலிய சொற்கள் பற்றி மயிலை வேங்கட சாமி வையாபுரிப் பிள்ளை ஆகியோர் எழுதியவையும் தவறு என்று கண்டேன். யவன என்ற சொல் ஆதிகாலத்தில் இருந்தே மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ளது.

 

ஆக நான் கண்ட உண்மை இதுதான்:

உலகிலுள்ள பழைய மொழிகளில் சில சொற்கள் ஒன்றாகவே இருக்கும்; தமிழ் சொற்களான அப்பா. அம்மா உலகில் பல மொழிகளில் உள்ளன. இதை வைத்து மட்டும் அவை தம்ழில் இருந்த வந்ததாகச் சொல்ல முடியாது. இன்னும் சில சொற்கள் ஒலியை அடிப்படையாக வைத்து வரும் உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் பறவைகளின் பெயர்கள் கா, கீ, கு, கொ,கெ, கோ, கே என்ற சொற்களில் துவங்கும்; மனிதன் அவைகளின் ஒலியில் இருந்து உருவாக்கிய சொற்கள் இவை. இதில் வியப்பு எதுவும் இல்லை.

 

 

உலகிலுள்ள பழைய மொழிகளை ஆராய்ந்தால் அவைகளின் சொற்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்தோ தமிழில் இருந்தோ கிளைவிட்டுப் பரவியிருப்பதைக் காணலாம்.

 

சில அடிப்படை மொழி இயல் கொள்கைகளைப் பயன்படுத்தினால் அவை எப்படி மாறின என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் ஆர் (R=L) என்பதும் எல் என்பதும் இடம் மாறும்

எம் வி பி (M=V=P/B) என்பன இடம் மாறும்

ஆர் (R=D) டி என்பது இடம் மாறும்

T=S ( சீர், திரு) Sri= Ceres (Goddess of Wealth in the West)

மிர்ரர் இமேஜ் (MIRROR IMAGE) ஏற்படும்; கண்ணாடி விளைவு.

 

அதாவது யாளி  (YAALI= LEO) என்பதை எழுதி கண்ணாடியில் காட்டினால் லியோ என்று வரும் (LEO= சிங்கம், சிம்ம ராசி)

 

தமிழில் கூட இலக்கணப் போலி உண்டு வாயில் என்றாலும் இல்வாய் என்றாலும் ஒன்றே.

ஆக எனது கொள்கை இதுதான்.

 

ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் உண்டு. அவைகள் அனைத்திற்கும் ஸம்ஸ்க்ருத மூலம் கிடையாது .மொழியியல் அறிஞர்கள் ஆங்கிலம் என்பது ஸம்ஸ்க்ருதத்துடன் தொடர்புடையது, திராவிட மொழி என்பது வேறு என்று இயம்புவர். அது தவறு.

 

ஸம்ஸ்க்ருத மூலம் இல்லாத ஆங்கில ச் சொற்களில் தமிழ் மூலமிருப்பதை உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம். சில சொற்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தைவிட தமிழ் நெருக்கமாக இருப்பதையும் காணலாம்; ONE ஒன்று=ஒன், EIGHT எட்டு= எய்ட், COT கட்டில்=காட்

 

 

ஆகவே உலக மொழிகள் அனைத்தும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகல்வதைப் போல சிவனின் உடுக்கை ஒலியில் இருந்து (மாஹேஸ்வர சூத்ரம்) பிறந்தவையே; அது ஒரு புறம் தமிழாகவும் மறு புறம் ஸம்ஸ்க்ருதமாகவும் பரிணமித்தது. உலக மொழிகள் அனைத்தும் தமிழ்-ஸம்ஸ்க்ருத மூல ஒலிகளில் இருந்து தோன்றியவையே. அப்படிப் பார்க்கையில் ஆங்கிலமும் தமிழ் -ஸம்ஸ்க்ருத மூல மொழியில் இருந்து பிறந்ததே. கீழ்கண்ட சொற் பட்டியல் மாதிரிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எனது அகராதி மார்ஜினில் (MARGINAL NOTES) உள்ள சொற்கள் அனைத்தையும் போடுவது இயலாது; ஆதாவது ஆயிரக்கணக்கான சொற்கள் தமிழ் தொடர்புடையவை. 1991 ஆம் ஆண்டில் சாத்தூர் சேகரன் என்னிடம் பி பி ஸி தமிழோசைப் பேட்டியில் சொன்னது ஓரளவு உண்மையே. அவர் ஸம்ஸ்க்ருதத்தைச் சொல்லத் தவறிவிட்டார் (எனது முந்தைய மொழி இயல் கட்டுரைகளில் மேலும் பல உதாரணங்கள் உள்ளன. கிரேக்க- தமிழ் தொடர்பு ஆராய்ச்சிக் கட்டுரையிலும் பல எடுத்துக் காட்டுகளை முன் வைத்துள்ளேன். கண்டு மகிழ்க!

இந்த வகையில் நோக்கினால் ஒரு சொல் தமிழ் சொல்லா, அல்லது ஸம்ஸ்க்ருதச் சொல்லா என்று நீண்ட காலமாக நிகழ்ந்துவரும் சர்ச்சையும், வாதப் ப்ரதிவாதங்களும் முடிவுக்கு வரும்


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

COGNATE WORDS

 

சில சொற்கள் ஸம்ஸ்க்ருதத்திலும் காணப்படும்

Tamil/ Sanskrit                                          English

 

Deivam/ Deva                                     Deo தெய்வம்;

Kadavul                                               God கடவுள்

Periya/ Bruhath                                               Big பெரிய

Ondru                                                  One ஒன்று

Ettu /Ashta                                                      Eight எட்டு

 

Paraththai/ Para Stree                                    Prostitute பரத்தை

Veera                                                              Hero வீரன்

Manathu/ Manas                                            Mind மனது காம

Kama/ Kama                                       amorous காம

Patha=Adi                                                        Path, Pedestal, Foot பத, பாத, அடி

Dharma=aram                                    Moral அறம்

Neer                                                                Nereids= water nymphs நீர்

Puttil                                                                Bottle புட்டில்

Arukan/ Bargo                                    Argos (light, sun) அருகன்

Andira/ Aindra/Indra                          Andrew (English name) அண்டிரன் /ஐந்திர,  இந்திர

Pillai                                                                Fille (French) பிள்ளை

Tarai                                                                Terrain தரை

Tele (phone, scope, vision)                 Tolai தொலை

Pazaiya                                                            Paleo (ntology) பழைய

Piththu                                                 Fad பித்து

Kuuli                                                                Ghoul/Ghost கூலி

Vathuvai /Bride                                               Wed வதுவை

Paiyul (Purananuru)                            Paiyon (Greek)= song பையுள்

Aiyavi (smallest seed)                         Iota ஐயவி

Maaya                                                 Magic (g=y) மாய

Staanu/ Thun                                      Stand தாணு

AAndu                                                  Annum, annual ஆண்டு

 

Duusi                                                               Dust தூசி

 

LIST 2 OF COGNATE WORDS

TAMIL WORDS                        ENGLISH WORDS

ATHLETE -ATALAR அடலர் ஏர் உழுதல்;  AUGURY- ARIKURI அறிகுறி

ARABLE- ER UZAKKUUTIYA ஏர் உழுதல்;

APOLLO- PAKALAVAN (MIRROR IMAGE) பகலவன் AURUM/GOLD- AADAKAM (AOR/HEBREW WORD, MIRROR IMAGE RAYI SKT.WORD) ஆடகம்

 

ANTHEM/ANTHOLOGY – SANTHAM சந்தம்; ATHRO(POLOGY)- AAN=MAN ஆண்

MAN- AAN மனிதன்/மானுடன்; ARGOTER (BEG)- ERPATHU (IKAZSSI) ஏற்பது (இகழ்ச்சி); AVER(T)- THAVIR தவிர் ;A-VENGE- VANJI வஞ்சி; AWE- ACHCHAM அச்சம்; AXIS-ACHU அச்சு A-TTACK- THAAKKU தாக்கு ; ANCHOR- NANGUURAM நங்கூரம்; ATTIRE-AADAI ஆடை ;ARDENT, ARDOUR- AARVAM ஆர்வம் ;CUMULATE/ACUMULATE- KUVI, KUMITHTHU குவி/குமித்து;  AWARE- ARI (VEN) அறி ;ANTIQUITY- AATHI (KUTI) ஆதி ;ALL-ELLAA (MIRROR IMAGE) எல்லா;ATTAIN-ADAI அடை

ADAMANT- ADAAVADI அடாவடி ;AMPHORA- AMBARAA (SHAPE) அம்பறா (துணி- வடிவம்); BAY-VAAY வாய்; BURG- PURA, UUR புரம்/ஊர்; BOAT-PATAKU படகு

BETEL-VETTALAI வெற்றிலை; BIRD- PARAVAI, ANNAP’’PEDU’’SEVAR PEDU பறவை/ பேடு; BRIDE- VADUVAI வதுவை; BIRTH-PIRATHTHAL பிறத்தல்

BARRIER- VARAIYARAI வரையறை; BLAZING- PALAPALAPPU பளபளப்பு

BARN- ARAN/LOFT பரண்; BLUFF-ULARU உளறு; BOY- PAIYAN பையன்/பியூன்

 

BARE – VERUM வெறும் ;BARREN- VARANDA வறண்ட ;BURY-PUTHAI புதை;

BEAT- PUTAI- NAIYAP PUDAI புடை/ நையப்புடை; BLAST- PILA, VIlAASU பிள/விளாசு; FLAW- PIZAI பிழை ;BATTER- PAATARAI பட்டறை வேகு/வேக்காடு; BAKE- VEGU, VEKKAADU வேகு/வேக்காடு;

BABY- PAAPPAA பாப்பா ;BAG- PAKKU (SANGAM TAMIL) பக்கு

 

C

CONCH- SANGU சங்கு சரடு கயிறு; CORD- KODI, SARADU சரடு

COIR- KAYIRU  கயிறு; COWRY- SOZI சோழி; CHIRO- KAI/HAND கை கல் செறி, செழுமை, சீர், திரு; CAL- KAL (STONE), CALCULATE கல் ;CERES- SIIR, SRI, SEZUMAI, THIRU, செறி, செழுமை, சீர், திரு

 

CHAFF- SAAVI சாவி செப்பு/செம்பு; COPPER- SEPPU செப்பு/செம்பு

CRORE- KODI கோடி; CLAY- KALI (MAN) களி; COPRA- KOPPARAI கொப்பறை

CASH- KAASU காசு; CHOULTRY- SATTHTHIRAM சத்திரம் ; CHIT- SIITU (KKAVI), SITTAI சீட்டு/சிட்டை; CURRY- KARI கறி; CURL- SURUL சுருள் ; CUTE-SUTTI சுட்டி ;

CHAR- KARI கரி ;CUP- KOPPAI, KUVALAI  கோப்பை,குவளை; CROOKED- KURUKIYA குறுக்கு  குறுகிய

COLD, CHILL- KULIR குளிர் ; CURVE- SUZIVU சுழிவு ; COOPT- KUUTTU கூட்டு

CUDDLE-KATTU கட்டு ; CROWD- KUUTTAM கூட்டம்; CHAOS- KUZAPPAM குழப்பம்

CHEER – SIRI சிரி ; CELEBRATE- KALI (PPU) களி(ப்பு); COARSE- SORASORA(PPU) கரகர, சொர சொர; CHATEAU –KOTTAI கோட்டை; COASTAL- KADAL +ORA கடல் ஓர

CYST- KATTI  கட்டி; CRACK- KIRUKKU கிறுக்கு ; CODNEMN- KANDI, KANDANAM கண்டி/கண்டனம், ;COIL- SUZAL, சுழல்/குழல்

 

Words about genital organs are same In most of the languages with slight changes)

This is not a comprehensive list; only some examples are given.

 

–subham–

Leave a comment

1 Comment

  1. அரிய விஷயங்களை அடக்கிய கட்டுரை. சிந்தனைக்கு விருந்து.
    காஞ்சி மஹா பெரியவர் வேதத்திலேயே சில ஒலிகள் எப்படி மாறி வரும்-வரலாம் என்பதைக் காட்டியிருக்கிறார். சுமார் 32 விதமான பேதங்கள் உண்டு என்று சொல்லியிருக்கிறார். ஒருமுறை அவரைச் சந்தித்த யூத-ஹீப்ரூ அறிஞர்களுடன் பேசுகையில், அவர்களை அவர்கள் மத நூலிலிருந்த சில பகுதிகளைச் சொல்லவைத்து, பிறகு நமது வேத பண்டிதர்களை சம்பந்தப்பட்ட வேதப் பகுதிகளை ஓத வைத்து, அக்ஷர மாறுபாட்டின் படி இரண்டும் ஒன்றே என்பதை விளக்கினார். [ இதை திருவண்ணாமலை கௌரிசங்கர் அவர்கள் நேரில் பார்த்தவர்; யூடியூபில் கூறியிருக்கிறார்- ஆனால் இது நடந்த வருஷத்தையோ, வந்தவர்களின் பெயர்களையோ சொல்லவில்லை]
    ஆனால் அதற்கு முன்பே ஸ்ரீ அரவிந்தர் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். அவர் இரண்டு விஷயங்கள் தெளிவுபடுத்தினார், 1. மேலை நாட்டினர் கொண்டாடிவந்த மொழியியல் ( philology) உண்மையில் விஞ்ஞான அடிப்படை அற்றது என்றார். 2. மிகப்பழைய தமிழ். வேதத்தின் கருத்தை அறிய உதவுகிறது; இது ஆதி நாட்களில் இவ்விரண்டு மொழிகளுக்குமிடையேயான தொடர்பைக் காட்டுகிறது என்றார்.

    ” on examining the vocables of the Tamil language, in appearance so foreign to the Sanskritic form and character, I yet found myself continually guided by words or by families of words supposed to be pure Tamil in establishing new relations between Sanskrit and its distant sister , Latin, and occasionally, between the Greek and the Sanskrit. Sometimes the Tamil vocable not only suggested the connection, but proved the missing link in a family of connected words. And it was through this Dravidian language that I came first to perceive what seems to me now the true law, origins, and as it were, the embryology of the Aryan tongues……it certainly seems to me that THE ORIGINAL CONNECTION BETWEEN THE DRAVIDIAN AND ARYAN TONGUES WAS FAR CLOSER AND MORE EXTENSIVE THAN IS USUALLY SUPPOSED, and the possibility suggests itself that they may even have been two divergent families derived from one lost primitive tongue. [The Secret of the Veda]

    ஆரிய-திராவிட இன வாதத்தின் ஆணிவேராகவும் அதைப் பரப்பும் கருவியாகவும் ஐரோப்பியர் மொழியியலையே நாடினர். இதை ஸ்ரீ அரவிந்தர் தகர்த்தெறிந்தார்;
    நம் போன்ற சாதாரண ஹிந்துக்கள் ஸம்ஸ்க்ருதமும் தமிழும் சிவபெருமான் தந்தவை என்பதோடு அமைகிறோம். நம் பெரியவர்கள் இப்படிச் சொல்லித்தான் கேட்டிருக்கிறோம்.

    “ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
    காரிகை யார்க்குக் கருணை செய்தானே”.
    “தமிழ்ச்சொல் வடசொல் எனுமிவ் விரண்டும்
    உணர்த்தும் அவனை உணரலு மாமே ”
    என்ற திருமூலரின் வாக்கு போன்றவை நமக்கு ஆதாரங்களாக இருக்கின்றன.
    இந்த நிலையில் உங்கள் கட்டுரை அறிவுக்கு விருந்தாக இருக்கிறது. மிகவும் நன்றி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: