Part 2 க்ராஸ் டாக்கில் உதயமானது அர்த்தமுள்ள இந்துமதம் (Post No.4820)

Date: MARCH 16,  2018

 

 

Time uploaded in London- 3-45 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4820

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்; ராஜாஜியின் தூண்டுதலால் உதித்தது கடைசிப் பக்கம்! -2

 

Part-1 was posted on 14th March, 2018

 

ச.நாகராஜன்

 

கல்கியின் உதவி ஆசிரியர் ரா.வீழிநாதன் மிகுந்த தயக்கத்துடன் கவிஞரின் இல்லம் சென்றார். அங்கு அவரது உதவியாளர் இராம.கண்ணப்பனைச் சந்தித்தார்.

 

“கல்கியின் சார்பாகக் கவிஞரைச் சந்திக்க வேண்டும். அவர் கல்கியில் எழுதுவதற்குச் சம்மதிப்பாரா?” என்றும் கேட்டார்.

“கவிஞரோ குழந்தை உள்ளம் கொண்டவர். நீங்கள் தாராளமாக அவரைச் சந்திக்கலாம்” என்றார் கண்ணப்பன்.

சந்திப்பு நிகழ்ந்தது.

 

மறுநாள் மாலையில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்களை கவிதா ஹோட்டல் மண்டப்பத்திற்குக் கூட்டி வந்தார்.

கடைசிப் பக்கம் என்ற தலைப்பில் வாரந்தோறும் எழுத கவிஞர் ஒப்புக் கொண்டார்.

 

கடைசிப் பக்கம் கல்கியில் வாசிக்கப்படும் முதல் பக்கமாக ஆனது.

 

அர்த்தமுள்ள இந்துமதம் எதையெல்லாம் தெரிவித்ததோ அதை கடைசிப் பக்கமும் தெரிவித்தது.

 

இதில் அவ்வப்பொழுது அருமையான கவிதைகள் வேறு.

பின்னர் கடைசிப் பக்கம் முதல் பக்கம் ஆனது.

பின்னர் கல்கியில் ஏதோ ஒரு பக்கத்தில் கவிஞரின் எழுத்துக்கள் இடம் பெற்றன. வாசகர்கள் அமோகமாக கவிஞரின் எழுத்துக்களை வரவேற்றுப் படித்தனர்.

 

அன்பார்ந்த நேயர்களுக்கு என்ற தனது பகுதியில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் 1976ஆம் ஆண்டு ஒரு கல்கி இதழில் இப்படி எழுதினார்:

 

“கண்ணதாசனைப் பொறுத்தவரை அவர் தமது பேனாவைச் செங்கோலோச்சித் தமிழை இலக்கிய உலகில் அரியாசனத்தில் அமர்த்தி விடும் ஆற்றல் வாய்ந்தவர் என்பது பற்றி யாருக்கும் ஐயமிராது. தமிழை அவர் ஆள்கிறாரா தமிழ் அவரை ஆள்கிறதா என்று புரியாத அளவுக்கு இன்றைய தமிழகத்தின் மிகச் சிறந்த சிந்தனையாளருள் ஒருவரான கண்ணதாசன் எழுத்தில் எழில் கொஞ்சுகிறது; நடையில் நயம் மிகுந்திருக்கிறது. ஆத்ம திருப்தி இல்லாமல் வருவாயைக் கருதி மட்டுமே அவர் சிலவற்றை எழுதியிருக்கலாம். அவரே அதை ஒப்புக் கொள்வார். ஆனால் தமிழுக்கு அவர் அளித்திருக்கும் சிறப்புக்கள் இதனை நாம் மறந்து விடச் செய்கின்றன.”

 

பின்னர் “சேரமான் காதலி” தொடரை அவர் எழுத ஒப்புக் கொண்டமையை அவர் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.

இப்படியாக ராஜாஜியின் தூண்டுதலால் கல்கியின் நல்ல தொடர்பு கவிஞருக்குக் கிடைத்தது.

 

அதை ஒட்டு மொத்த தமிழர்களும் வரவேற்றனர்.

க்ராஸ் டாக்கும் நன்மை பயக்கும்; ராஜாஜி போன்ற பெரியோரின் நுட்பமான கவனமும் தமிழுக்கு நலம் தரும் என்பதை அர்த்தமுள்ள இந்து மதம் மற்றும் கடைசிப் பக்கம் ஆகியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

இந்தத் தொடர் இத்துடன் முற்றும்.

 

–Subham–

 

Leave a comment

2 Comments

  1. கண்ணதாசன் ராஜாஜியை விமர்சித்துக்கொண்டிருந்த நேரத்திலும், அவருடைய எழுத்தால் கவரப்பட்டு அவரைக் ‘கல்கி’க்கு எழுதவேண்டும் என்று ராஜாஜி நினைத்தார் என்று இக்கட்டுரையின் முதல் பாகத்தில் எழுதியிருக்கிறீர்கள். இது உண்மையிலேயே ராஜாஜியின் விசால மனதைக்காட்டுகிறது,
    இதேபோல் இன்னொரு நிகழ்ச்சியும் இருக்கிறது, ஸ்ரீ என்.மாதவ ராவுக்குப் பிறகு மைசூர் திவானாக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தபோது, மைசூர் மஹாராஜா ராஜாஜியின் கருத்தை நாடினார். தயக்கமில்லாமல் ராஜாஜி ஸர் ஏ,ராமஸ்வாமி முதலியாரின் பெயரைச் சிபாரிசு செய்தார். ஸர் ராமஸ்வாமி முதலியார் பிராமணர்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்டு செயல்பட்ட ;ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். இந்த நிலையில், காங்கிரஸுக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாகவும் நடந்து வந்தார். இருந்தாலும், ஒரு சமஸ்தானத்திற்கு திவான் என்று வந்தபோது, அவரைச் சிபாரிசு செய்ய ராஜாஜி தயங்கவில்லை. இவர்களல்லவோ மேலோர்!

  2. thanks
    super information nagarajan

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: