Srimushnam Temple– Stone slab on the ancient statues.
Written by London Swaminathan
Date: 23 MARCH 2018
Time uploaded in London – 13-08
Post No. 4843
Pictures shown here are taken by london swaminathan
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
இந்த முறை இந்திய விஜயத்தில், முன்னர் பார்க்காத பத்து கோவில்களையும், முன்னர் பார்த்த மூன்று கோவில்களையும் தரிசித்தேன்; வைதீஸ்வரன்கோவில் எங்கள் குல தெய்வம் என்பதால் லண்டலிருந்து பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் குல தெய்வ தரிசனம் உண்டு; சிதம்பரம், மயிலை கபாலீஸ்வரரைத் தரிசிக்க நேரம் இருந்ததால் மீண்டும் சென்றேன்.
பார்க்காத இரண்டு கோவில்களில் பார்த்த இரண்டு தாக்குதல்களை மட்டும் இதில் சொல்வேன்; கோவிலின் சிறப்புகளைத் தனியாகப் பகர்வேன்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சிவன் கோவிலுக்குச் சென்றேன். அங்கு பிரகாரத்தில் பல ஓவியங்கள் மிகவும் பரிதாப நிலையில் இருந்தன. எல்லாவற்றுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேக நடையில் வந்தேன். அதில் ஒரு படம் என்னை SUDDEN STOP ஸடன் ஸ்டாப் – நிறுத்த– வைத்தது. படம் முழுதும் ஒரே எண்கள்.
உடனே நான் என் தம்பியிடம் சொன்னேன்:
அடக் கடவுளே! இவர்களுக்கு லாட்டரி டிக்கெட் நம்பர்களை எழுத வேறு இடமே இல்லையா? இப்படி எழுதினால், விழக்கூடிய பரிசுகளையும் ஆண்டவன் விழாமல் செய்து விடுவானே! என்றேன்
என் தம்பி- மதுரையில் கல்லூரி பிரின்ஸிபாலாக இருந்தவன். மாணவர்களின் நாடியைப் பிடித்துப் பார்த்தவன். அவன் சொன்னான்-
இல்லை, இல்லை- இவை அனைத்தும் ஹால் டிக்கெட் எண்கள் HALL TICKET NUMBERS என்று; பரீட்சையில் குறுக்கு வழியில் பாஸாக இப்படியெல்லாம் முயற்சி!
நிற்க- சாகர டயத்துல (இறக்கும் நேரத்தில்) சங்கரா, சங்கரா என்றால் கூட உதவுவான். ஆனால் படிக்காமலேயே ஹயக்ரீவர் படத்தில் எழுதினால் உதவுவானா?
பிரகாரத்தில் இருந்த ஹயக்ரீவர் படத்தில் இப்படி ஹால் டிக்கெட் HALL TICKET (பரீட்சை மண்டபத்தில் நுழைவதற்கான- அனுமதிச் சீட்டு) என்களை எழுதி இருந்தனர்.
சிவன் கோவிலில் ஹயக்ரீவர் இருந்தது அதிசயமே. ஆனால் அங்கு கண்டதெல்லாம் தற்கால ஓவியங்களே.
யார் அந்த ஹயக்ரீவர்?
விஷ்ணுவின் அவதாரங்கள் பத்து — என்பது பொதுவான கணக்கு; ஆனால் பாகவதம் முதலிய பரந்தாமன் புகழ் பாடும் நூல்களில் இருபதுக்கும் மேலான அவதாரங்களின் பட்டியல் உள்ளது. வான் புகழ் வள்ளுவனோ — திருவள்ளுவ ஐயங்காரோ–
(திருவள்ளுவர் ஐயரா, ஐயங்காரா? என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)
ஆயிரக்கணக்கான அவதாரங்கள் உண்டு என்கிறான்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 50 என்பான்.
யாரெல்லாம் அறவழியில் நின்றனரோ அவர்கள் எல்லோரும் ஆகாயத்தில் (உச்சியில்– நமக்கும் மேலே) இருக்கும் கடவுள் என்பான்.
ஆகையால்தான் இந்துக்கள் நட்சத்திரங்களுக்குக்கூட ஸப்தரிஷி, அகஸ்தியர், துருவன் என்று பெயர் சூட்டியுள்ளனர். நிற்க- SUBJECT-ஸப்ஜெக்டுக்கு வருவோம்.
குதிரை முகக் கடவுள் ஹயக்ரீவர் — விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர். அறிவுக்கும், விவே கத்துக்கும் உறைவிடமானவர். அவரை வணங்குவோருக்கு ஸரஸ்வதி தேவியின் பரிபூர்ண கடாக்ஷம் (கடைக்கண் பார்வை) இருக்கும்.
ஹயக்ரீவரை வழிபடுவது சாலச் சிறந்தது; ஆயினும் அவர் படம் மீது இப்படித் தாக்குதல் — கிறுக்கல்– நடத்துவது நலம் பயக்காது.
ஸ்ரீமுஷ்ணம் கோவிலிலும் இப்படி ஹயக்ரீவரைப் படாதபாடு படுத்தி இருந்ததாக நினைவு. நிற்க
பல கோவில்களில் மாணவ, மாணவியர் கூட்டம் கூட்டமாகக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர். அட! பக்தி பெருகிவிட்டதே என்று மெய் சிலிர்த்தேன். பிறகுதான் புரிந்தது இது பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் ‘’கர்மண்யேவாதிகாரஸ்தே, மா பலேஷு கதாசன’’- வகையறா அல்ல என்பது.
‘செயலைச் செய்; அதன் பலன் மீது பற்று வைக்காதே’ – என்பது பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் அருளிய முக்கியப் பொன்மொழி.
கோவிலிலோ குழந்தைகள், கருமத்தின் பலனை எதிர்பார்த்துத் தொழுதனர்– பரவாயில்லை- இது முதல்படிதானே- முன்னேறட்டும்.
Virudhachalam Sivan Temple
காதலர் தினமும் சிவராத்ரியும்
இத்தருணத்தில் வேறு ஒரு விஷயத்தையும் உங்களுடன் பகிர்வது சாலப் பொருந்தும். ‘’இடமாறு தோற்றப் பிழையாக இராது’’– என்றே எண்ணுவேன்.
எனது அண்ணன் குடும்பத்தின் இனிய நண்பர் ரமேஷ் ராமசாமி. அவருடன் பல்வேறு விஷயங்களைக் கதைத்தபோது ஒரு துணுக்கு வெளியானது.
“அண்ணா, எனக்கு ஒரே ஆச்சர்யம். ஆண்டுதோறும், சிவராத்ரி இரவில் சென்னையிலுள்ள எல்லா சிவன் கோவில்களுக்கும் செல்லுவேன்; இவ்வாண்டு சிவராத்ரியின் போது எல்லாக் கோவில்களிலும் கூட்டம் மிகமிகக் குறைவு. ஏன் என்றே தெரியவில்லை”.
நான் சொன்னேன்
“நீ பசி மயக்கத்தில் இருந்திருப்பாய். சிவராத்ரி உபவாசத்தில் கண்ணை மறைத்திருக்கும்:
இல்லை அண்ணா- எல்லா கோவில்களிலும் பிரசாதமும் கிடைக்கும்.
அடக் கடவுளே! இது தெரிந்தால் நானும் இரவு முழுதும் கண்விழித்து சிவராத்ரி ”உபவாஸம்” இருப்பேனே என்று JOKE ஜோக் அடித்துவிட்டு வேறு ஸப்ஜெக் SUBJECTSட்கள் பற்றிப் பேச ஆரம்பித்தோம்.
அவரிடன் சிங்கப் பெருமாள் கோவில், மயிலம், திருவக்கரை, ஸ்ரீமுஷ்ணம் போன்ற பல கோவில் தலங்கள் பற்றி யோஜனைகள் பெற்று மறுநாள் நானும் என் தம்பியும் காரில் ஏறினோம். எனக்கு திடீரென்று தூக்கிவரிப்போட்டது- புத்தர் போல ஞானோதயம் ஏற்பட்டது.
காரில் சென்றவாறே என் தம்பியிடம் சொன்னேன்;
அடக் கடவுளே ரமேஷ் சொன்ன விஷயத்தில் பெரிய தாத்பர்யம் இருக்கிறது. இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது. பிப்ரவரி 13 செவ்வாய்க் கிழமை சிவராத்ரி- பிப்ரவரி 14, 2018 புதன்கிழமை செயின்ட் வாலன்டைன் டே ST VALENTINE’S DAY– காதலர் தினம். அதனால்தான் சிவராத்ரிக்குக் கூட்டம் குறைவு. எல்லோரும் காதலர் தினத்துக்கு லீவு போட்டு டிக்கெட் புக் பண்ணியிருப்பர். ஆகையால் சிவ பெருமானை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டனர் போலும் – என்றேன்
இது எனக்கு திடீரென்று எப்படி ஞாபகத்துக்கு வந்தது என்றால்– வாரம்தோறும் லண்டன் நார்த் விக் பார்க் ஹாஸ்பிடலில் NORTHWICK PARK HOSPITAL, LONDON இந்துக்களுக்கு 20 நிமிடம் ஒதுக்கியுள்ளனர். புதன் கிழமை தோறும் பிராரத்தனை நடத்துவோம்; பிப்ரவரி 14 புதன் மட்டும் உங்கள் கூட்டத்தை ரத்து செய்துவிடுங்கள் என்று கிறிஸ்தவ குருமார் எங்களிடம் வேண்டிக்கொண்டார். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டோம்; அவர்களைப் பொருத்தவரை வாலன்டைன் ஒரு புனிதர். அதற்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை.
கோவில் மீது அதிகாரிகள் தாக்குதல்!
நாங்கள் சென்ற சில கோவில்களில், எலெக்ட்றிகல் பிட்டிங்க்ஸ், கற்பலகைகளை வைத்து, ஓவியங்களையும் அழகிய சிலைகளையும் மறைத்து எழுப்பி இருந்தனர்.
யார் டொனேஷன்/ DONATION கொடுத்ததில் இது வந்தது அல்லது யார் இதை என்று திறந்து வைத்தனர் என்றெல்லாம் கற்பலகை , எழுப்பி, சிமென்ட் பூசி உறுதியாகச் சிலைகளை மறைத்தனர். சில கோவில்களில் ட்யூப் லைட்டின் வெளிச்சத்தையும் மறை க்கும் அளவுக்கு உபயதாரரின் பெயர்கள் பிரகாஸித்தன!!
கடவுள் எல்லோருக்கும் நல்ல புத்தியைக் கொடுப்பாராக..
சென்ற ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு வந்தபோது தஞ்சை ஜில்லாவில் ஒரு பிரபல கோவிலுக்குச் சென்று இருந்தோம். பட்டர் எங்கே என்று கேட்டோம்; இதோ வீட்டுக்குப் போயிருக்கிறார்; சில நிமிடங்களில் வந்துவிடுவார் என்று கோவில் சிப்பந்தி உரைத்தார்.
சொன்னபடியே பட்டர் விரைந்து வந்தார்; கையில் பிளாஸ்க் FLASK- கூடவே ஒரு டம்ப்ளர். அழகாக சந்நிதியின் ஒரத்தில் சுவாமிக்கு முன்னால் சம்மணம் போட்டு அமர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாகக் காப்பியை– ஆவி பறந்தது– என் நாக்கிலும் ஜலம் ஊறியது– ரசித்து, ருசித்துக் குடித்தார். சுமார் பத்து நிமிடங்கள் உருண்டு ஓடின. கையைக் கொஞ்சம் ஜலம் வைத்துத் துடைத்துக் கொண்டார்.
யார் யாரெல்லாம் அர்ச்சனைக்கு வந்துள்ளீர்கள்? தட்டையும் அர்ச்சனை சீட்டையும் கொடுங்கோ என்றார். நாங்களும் பயபக்தியுடன் தட்டைக் கொடுத்தோம்
கடவுளே இவருக்கு நல்ல புத்தியைக் கொடு- என்றும் பிரார்த்தித்தோம்.
திராவிட ரவுடியுடன் சந்திப்பு
பல ஆண்டுகளுக்கு முன்னர் குல தெய்வ தரிசனத்துக்காக வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றபோது இதைவிடக் கொடுமையான சம்பவம் நடந்தது–
கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் ஒரு பெரிய “கும்பல்” வட்டமாக உட்கார்ந்து இருந்தது. பணம் எண்ணுவதை ஆவலோடு நானும் வேடிக்கைப் பார்த்தேன்; திடிரென்று பணம் எண்ணும் ஒருவர் வாயில் இருந்த ரத்தச் சிவப்பான வெற்றிலை எச்சிலைத் துப்பினார்- பிரகாரத்திலேயே–!!! பக்கத்தில் பார்த்தால் அவர் துப்பிய எச்சல் நிறையவே இருந்தது- அருவெறுப்பின் சிகரம்- அசிங்கத்தின் உச்சம்! ஒரு முறை…. முறைத்தேன். அவரும் பூனை முறைப்பது போல என்னைப் பார்த்து ஒரு முறை….. முறைத்தார். எனக்குப் பயம் வந்துவிட்டது நைஸாக நழுவிவிட்டேன். இது என்ன அக்கிரமம்? கடவுளுக்கு முன்னாலேயே இப்படித் துப்புகிறானே – என்று
அதைக் கேட்டுக் கொண்டிருந்த யாரோ ஒருவர் அஸரீரி குரல் கொடுத்தார்.
கண்ட கண்ட தோழான் துருத்தி, பள்ளன் பறையனை எல்லாம் கோவில் அதிகாரியாகப் போட்டால் இப்படித்தான் ஸார் நடக்கும் என்று.
என்று திராவிட ரவுடிகள் கோவிலில் புகுந்தார்களோ அன்றே கடவுள் வெளியேறிவிட்டார் போலும்; இல்லாவிடில் அவர்கள் கோவில் நகைகளை எல்லாம் மாற்றி, கோவில் சிலைகளை எல்லாம் விற்று, போலிகளை வைத்ததால் கடவுளுக்கு பவர் POWER போய்விட்டதோ என்னவோ.
“அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்ற தமிழ்ப் பழமொழியில் நம்பிக்கை கொண்டு விடை பெற்றேன்
–சுபம், சுபம் —