விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 3 (Post No.4851)

Date: MARCH 26, 2018

 

 

Time uploaded in London- 6-26 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4851

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பாக்யா 16-3-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு மூன்றாம் கட்டுரை

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள்ஒரு அரிய தொகுப்பு! – 3

by .நாகராஜன்

 

முதல் விண்வெளி நடைகள்

முதன் முதலில் விண்வெளியில் நடந்தவர் அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov). 1965, மார்ச், 18 அன்று வோஷ்காட் 2 இல் 12 நிமிடம் நடந்தார். அவர் விண்கலத்திற்குள் திரும்பிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதாகப் பின்னர் தெரிவித்தார்.ஆனால் பத்திரமாகப் பூமிக்கு வந்து சேர்ந்தார்.

1965, ஜூன் 3ஆம் தேதி அமெரிக்கரான எட் வொயிட் முதன் முதல் விண்வெளியில் நடந்த அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் பின்னர் 20 வருடங்கள் எந்தப் பெண்மணியும் விண்வெளியில் நடக்கவில்லை. ஸ்வெட்லானா சவிசட்ஸ்கயா 1984, ஜூல 25ஆம் தேதி விண்வெளியில் நடந்தார். சல்யுட் 7 ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் அவர் நடந்தார். விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண்மணி காதரின் சல்லிவன்.ஸ்பேஸ் ஷட்டில் சாலஞ்சரில் 1984, அக்டோபர் 11ஆம் தேதி அவர் விண்வெளி சென்றார்.

கயிறு கட்டப்படாமல் ப்ரூஸ் மக் காண்ட்லெஸ் 1984 பிப்ரவரி 7ஆம் தேதி நடந்து அரிய சாதனை நிகழ்த்தினார்.

 

அதிக விண்வெளிநடைகள்

ரஷிய விண்வெளி வீரரான அனடோலி சொலொவியவ் 1980 முதல் 1990 முடிய 5 தடவைகளில் 16 முறை விண்வெளி நடைகளை மேற்கொண்டார். இதில் 82 மணி நேரம் அவர் விண்கலத்திலிருந்து வெளியில் இருந்திருக்கிறார். இது ஒரு சாதனையாகும்.

அமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ் -அல்ஜீரியா 10 முறை விண்வெளியில் நடந்தார். மொத்த நேரம் 67 மணிகள் 40 நிமிடங்கள். இவரைத் தொடர்ந்து அமெரிக்க வீராங்கனையான பெக்கி விட்ஸன் 10 விண்வெளி நடைகளை மேற்கொண்டார். மொத்த நேரம் 60 மணிகள் 21 நிமிடங்கள்!

நீண்டநேரம் நடந்த ஒரே விண்வெளிநடை

2001,மார்ச் 11ஆம் தேதி நாஸா விண்வெளி வீரர்களான ஜிம் வோஸ் மற்றும் சூசன் ஹெல்ம்ஸ் டிஸ்கவரி கலத்தின் வெளியே மற்றும் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் வெளியே STS 102 மிஷனின் போது 8 மணி நேரம் 56 நிமிடங்கள் கழித்தனர். சில பராமரிப்பு வேலைகளையும் இவர்கள் செய்தனர்! இதையே நீண்ட நேர விண்வெளி நடையாக வரலாறு பதிவு செய்கிறது.

அதிக மனிதர்கள் விண்வெளியில்..

நாசாவின் STS 127 மிஷனில் 13 வீரர்கள் 2009இல் எண்டவர் கலத்தில் இருந்தனர்! 2009 ஜூலையில் எண்டவர் கலம் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுடன் பொருத்தப்பட்டது. அதில் உள்ள 7 பேர்கள் லேபுக்குள் சென்றனர். அங்கு ஏற்கனவே 6 பேர்கள் இருந்தனர். ஒரே சமயத்தில் 13 பேர்கள் இருந்தது ஒரு பெரிய ரிகார்டாகும்!

அதிக பெண்கள் ஒரே சமயத்தில் விண்வெளியில்!

நான்கு பெண்கள் விண்வெளியில் இருந்தது ஒரு சாதனையாகும். 2010 ஏப்ரலில் நாஸாவின் ட்ரேசி களாட்வெல் டைஸன் ரஷிய சோயுஸ் கலத்தில் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். அங்கு அவருடன் நாஸாவின் ஸ்டெப்னி வில்ஸன். டோராதி மெட்கால்ப் – லிண்டர்பெர்கர், ஜப்பானின் நயோகோ யமஸாகி ஆகியோர் இணைந்தனர். STS 131  மிஷனில் டிஸ்கவர் கலத்தில் இவர்கள் சென்றனர்!

அதிக செலவான விண்கலம்

இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒரு புட் பால் கிரவுண்ட் அளவு பெரியது. ஐந்து பெட் ரூம் வீடு போன்றது.இது 1998இல் நிலை. 2012இல் அது கட்டி முடிக்கப்பட்டபோது இன்னும் விரிவாக்கப்பட்டது.

இதற்கான செலவு 2011இல் 100 பில்லியன் டாலர்! இது இன்னும் கூடுதல் செலவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பெரிய விண்கலம்

இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் தான் பெரிய விண்கலம்! 15 நாடுகளின் பிரதிநிதித்வம் கொண்ட இது ஐந்து ஸ்பேஸ் ஏஜன்ஸிகளின் பொறுப்பில் உள்ளது. இதன் நீளம் 357.5 அடி.  சூரிய தகடுகள் இதில் உள்ளன. அதன் இறக்கை அகலம் 239.4 அடி!

இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனை பூமியிலிருந்து டெலஸ்கோப்பின் துணையின்றி வெறும் கண்களினாலேயே பார்க்கலாம்! இப்போது இதில் ஆறு வீரர்கள் உள்ளனர். உள்ளே உள்ள அறைகள் போயிங் 747 ஜம்போ ஜெட் அளவு பெரியது!

 

விண்வெளி வீரர்களின் சாதனைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. கலங்களின் பெருமைகளும் கூடிக் கொண்டே போகின்றன.

இனி வரும் காலம் விண்வெளிக் காலம் தான்!

(50 ஆண்டுக் கால சாதனைகளின் பட்டியல் முற்றும்)

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

உலகம் இதுவரை கண்டிராத ஜீனியஸ் லியனார்டோ டா வின்சி தான்!கலைஞர், விஞ்ஞானி, ஓவியர் என்று இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். பல அறிவியல் ஆய்வாளர்களும் இவரது வெற்றிக்குக் காரணம் என்ன என்பதை அறிய இவரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சியைச் செய்து கொண்டே இருக்கின்றனர் –  சில காரணங்கள் இதோ:-

 

டா வின்சி எதையும் கூர்மையாகக் கவனிப்பவர். உடனடியாக எதையும் நோட்ஸ் எடுத்துக் கொள்ளும் இயல்பினர்.ஒரு நாள் கலை, மறு நாள் ஸயின்ஸ் – இப்படித் தன் வாழ்க்கையை அவர் வகுத்துக் கொண்டார். இரண்டும் அவருக்கு ஒன்று தான். இன்னும் 7200 பக்கங்கள் கொண்ட இவரது நோட் புக்குகள் அதிசயிக்க்கத் தக்கவை. இதைப் போல மூன்று மடங்கு அவர் குறிப்பெடுத்து வைத்திருந்தார்! எனக்குத் தெரியாதவற்றைக் கேள்விகளாக்கி அவற்றுக்கு விடை கண்டுபிடிப்பதை வாழ்நாள் பணியாகக் கொண்டிருக்கிறேன் என்கிறார் அவர்!

ஓவியம் என்று எடுத்துக் கொண்டால் அது பெஸ்ட் என்று கூறும்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்படியே வைத்து விடுவார்! சிலவற்றைப் பல வருடங்கள் கழித்தே அவர் முடித்தார். மோனாலிஸாவை முடிக்க மட்டும் அவர் 10 முதல் 14 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். உலகின் மாஸ்டர்பீஸ் நம்பர் ஒன்றாக அது ஆகிவிட்டது!

கேள்விகள், பதில்கள், கூர்ந்து கவனித்தல், க்யூரியாஸிடி, பெர்ஃபெக் ஷன் _ இது தான் லியனார்டோ டா வின்சி என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சரி தானே!

****

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: