த்ரிவிக்ரம பட்டரின் நள சம்பு முடியாதது ஏன்? (Post No.4873)

Date: 2 April, 2018

 

 

Time uploaded in London- 5- 59 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4873

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

த்ரிவிக்ரம பட்டரின் நள சம்பு முடியாதது ஏன்?

 

ச.நாகராஜன்

 

உலகின் முதல் காதல் சரித்திரம் நள- தமயந்தி கதை. இதை மஹாபாரதம் விரிவாகக் கூறுகிறது. ஆனால் உலகின் ஆதி நூலான வேதத்தில் நளனைப் பற்றிய குறிப்பைக் காணலாம்.

சுக்ல யஜுர் வேதத்தில் சதபத பிராமணத்தில் நளனைப் பற்றிக் கூறப்படுகிறது.

மஹாபாரதத்தில் கூறப்பட்ட நள – தமயந்தியின் அழகிய கதையை வைத்து ஏராளமான நூல்கள் இயற்றப்பட்டன.

இவற்றில் பல இன்னும் அச்சேறாமல் சுவடிகளாகவே இருப்பது வருந்தத் தக்கது.

 

ராஷ்ட்ர கூட மன்னனான மூன்றாம் இந்திரனின் அரசவையில் ஆஸ்தான புலவராக இருந்தவர் த்ரிவிக்ரம பட்டர். போஜ மஹாராஜன் அவரைப் பற்றித் தன் நூலான சரஸ்வதிகண்டாபரணம் என்ற நூலில் குறிப்பிடுகிறான்.

அவர் நள சம்புவை இயற்றிய காலம் உத்தேசமாக கி.பி.915 என்று நிர்ணயிக்கப்படுகிறது.

நள சம்பு அல்லது தமயந்தி கதா என்ற நூல் ஏழாம் அத்தியாயத்துடன் நிற்கிறது. நூல் முற்றுப் பெறவில்லை.

சம்பு காவியம் என்றாலே அது கவிதையும் உரைநடையும் கலந்த ஒரு நூல் என்று பொருள்.

 

இது ஏன் முற்றுப் பெறவில்லை என்பதற்குச் சுவையான கதை ஒன்று பாரம்பரியமாக வழங்கி வருகிறது.

 

கதை இது தான்:

தேவாதித்யா என்ற ஒரு பிராம்மணன் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த விற்பன்னராகத் திகழ்ந்தான். ஒரு முறை அவன் வெளியூர் செல்ல நேர்ந்தது.

 

அந்தச் சமயம் இன்னொரு நகரிலிருந்து வந்த புலவன் ஒருவன் தன்னை எதிர்கொள்ளும் ஒருவரை உடனடியாக அரசவைக்கு வருமாறு சவால் விடுத்தான். இல்லையேல் தானே சிறந்த அறிஞன் என்பதற்கான ஜயபத்ரம் தருமாறு மன்னனை வேண்டினான்.

மன்னனோ உடனடியாக தேவாதித்யாவை அழைத்து வருமாறு காவலர்களை அனுப்பினான். ஆனால் தேவாதித்யாவோ ஊரில் இல்லை.

 

அவரது மகனான த்ரிவிக்ரம பட்டர் தனது அறியாமையை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார்.

 

சரஸ்வதி தேவியிடம் மனதார வேண்டினார். சரஸ்வதி அவரிடம் ‘உனது தந்தை திரும்பி வரும் வரை உன் நாவில் நான் அமர்வேன், கவலைப்படாதே’ என்று அருளினாள்.

சரஸ்வதியின் அருளினால் சவாலுக்கு அழைத்த புலவரை எதிர்கொண்டு த்ரிவிக்ரம பட்டர் வென்றார்.

அவரைப் பாராட்டிய மன்னன் சகல வெகுமதிகளையும் கொடுத்து அவரை கௌரவித்தான்.

 

சரஸ்வதி தன் நாவில் இருக்க்ம் போதே ஒரு காவியத்தை இயற்ற த்ரிவிக்ரம பட்டர் எண்ணினார்.

 

“புண்ய ஸ்லோகோ நளோ ராஜா” என்று நள சரித்திரத்தைத் தொடங்கினார்.

 

ஏழாவது அத்தியாயத்தை முடித்த அன்று அவரது தந்தை தேவாதித்யா ஊர் திரும்பினார்.

 

உடனடியாக சரஸ்வதி அவரது நாவை விட்டு அகல நூல் முற்றுப் பெறாமல் அப்படியே நின்று விட்டது!

 

மிக அருமையான சிலேடையும் அரிதான செய்யுள்களின் அமைப்பையும் கொண்டுள்ளது நள சம்பு.

ஆகவே அதன் பல ஸ்லோகங்கள் பின்னால் வந்த கவிஞர்களால் எடுத்துக்காட்டப்படுவது வழக்கமானது.

நள சம்புவிற்கு சில உரைகள் உண்டு.

அனைவராலும் பாராட்டப்படும் நூலாக நள சம்பு இன்றளவும் திகழ்கிறது!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: