ராமனின் கலர் என்ன? அனுமனின் கலர் என்ன? (Post No.4986)

Hanumar stamp released by U N O.

Written by London Swaminathan 

 

Date: 7 May 2018

 

Time uploaded in London – 13-39 (British Summer Time)

 

Post No. 4986

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) புத்தகத்தில் ராமாயணம் குறித்து பிரெஞ்சு வரலாற்று அறிஞர் மிஷலெ (MICHELET)சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்–

ராமாயணம் இந்து மஹா சமுத்திரம் போலப் பரந்து விரிந்தது. அங்கே நாம் ஒரு தெய்வீக நல்லிணக்கத்தைப் பார்க்க முடிகிறது. பிணக்குகளிடையே பேரமைதி, அளப்பறிய இனிமை, உயிர்கள் அனைத்துடனும் எல்லையற்ற சஹோதரத்துவம், கடல் போன்று பரந்த அன்பு, கருணை, மன்னித்து அருளும் அருங்குணம் நிறைந்தது இந்தப் பெருங் காவியம்”

 

என்ன அற்புதமான வருணனை!

 

ராமனின் வர்ணம் பச்சை; லெட்சுமணனின் நிறம் தங்க நிறம்; அனுமனின் நிறம் ஊதா; ராவணனின் கலர் கருப்பு!!! எங்கே என்று கேட்கிறீர்களா? தாய்லாந்து நாட்டில்!

 

இந்திய- தாய்லாந்து உறவு பற்றிய சில சுவையான செய்திகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

 

2300 ஆண்டுகளுக்கு முன்னர், மாமன்னன் அசோகன், புத்த மதத்தைப் பரப்புவதற்காக இரண்டு துறவிகளை அனுப்பினான். ஏற்கனவே இந்தியாவுடன் இருந்த தொடர்பு காரணமாகவே இப்படி அனுப்பினான்.

தாய்லாந்தின் பழைய பெயர் சியாம தேசம்’ அதுவே சயாம் (SIAM) என்று மருவியது. இந்திய வணிகர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்த காலத்தே, இப்பகுதியை சுவர்ண பூமி (தங்க நாடு) என்று அழைத்தனர்.

 

குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஆண்ட மன்னர்கள் தங்களை ராமா என்று அழைத்துக் கொண்டனர். அத்தோடு தலைநகரை அயோத்தியா (AYUTHTHAYA) என்றும் அழைத்தனர். அந்த அளவுக்கு ராமாயண காவியத்தின் தாக்கம் அங்கே இருந்தது.

 

தனபுரி என்னும் பகுதியை ஆண்ட மஹா தக்ஷின் என்பவர் ராமாயணக் கவிதைகளை எழுதத்துவங்கினார். பின்னர் முதலாவது ராமா (1782-1780) அதை 10,000 ஸ்லோகங்களாக எழுதி முடித்தார்.

 

முதலாவது ராமா ராமகியான் என்று அழைக்கப்படும் ராமாயணத்தை காவிய வடிவில் கொடுத்தார்; இரண்டாவது ராமா (1809-1824)  அதை . நாடகம் வடிவில் கொடுத்தார். ஆயினும் 1349 முதல்  ராமாயணம் சிறு சிறு பகுதிகளாக எழுதப்பட்டது. நாடகம், ஓவியம், கதைகளில் இடம்பெற்றது.

 

அருகிலுள்ள வியட்நாம், லாவோஸ், இந்தோநேஷியாவில் இந்து மத அரசர்கள் இருந்ததால் எல்லையோரப்   பகுதிகளில் ராமாயணம் பலவகை உருப்பெற்றது. வால்மீகி  ராமாயணத்துக்கும் தாய் மொழி ராமகியனுக்கும் பல வேறுபாடுகள் உண்டு.

 

இந்தோநேஷியாவில் இருந்து நிழல் நாடகம் (பொம்மலாட்டம்) இறக்குமதியானது. இதில் தோல் பயன்படுத்தப்படுவதால் ஹநாங் (தோல்) என்ற பெயரில் இது அறிமுகமானது. இதில் பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் கயிறு, நூல் இல்லாமல் கைகளினாலேயே ராமாயண கதாபாத்திரங்கள் செயலில் இறங்குவார்கள்.

இதில் ராமன் பச்சை வர்ணத்திலும், லெட்சுமணன் தங்க நிறத்திலும், ஹனுமார் ஊதா நிறத்திலும், ராவணன் கருப்பு நிறத்திலும் காட்டப்படுவர். பாமர மக்கள் கதையை அறிந்துகொள்ள இது உதவும். இவ்வாறு ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு வர்ணத்தில் இருப்பது தாய் பொம்மல்லாட்டத்தின் சிறப்பு ஆகும்.

தாய் ராமாயணத்தில் பல விநோதக் கதைகளும் உண்டு. ஹனுமார் லோப் பூரியை ஆண்ட கதையை, அடுத்த கட்டுரையில் சொல்கிறேன். லோப் பூரி என்பது லவ புரி என்பதன் மரு ஆகும். லவன், குசன் ஆகிய இருவரும் ராமனின் புதல்வர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே; லாவோஸ் என்னும் நாடே லவனின் பெயரால் வந்த நாடுதான் என்பர் அறிஞர் பெருமக்கள்!

 

வாழ்க தாய் ராமாயணம்!! வளர்க ராமன் புகழ்!!!

சுபம்–

Leave a comment

2 Comments

  1. ஹனுமாரின் நிறம் என்ன? இது பற்றி பள்ளியில் படிக்கும் நாட்களில் சர்ச்சை நடந்தது. ராமாயண பாராயணக்ரம த்யான ஶ்லோகத்தில் ஹனுமாரின் முகம் சிவப்பு என்று வருகிறது. [ஆஞ்ஜனேய மதிபாடலானனம்] ஆனால் உடல் வர்ணத்தைப் பற்றிய குறிப்பு தெரியவில்லை. 50 களில் நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம் நடத்திய ராமாயண நாடகத்தில் ஹனுமாரை பச்சை வர்ணத்தில் காட்டினார், [அவரே ஹனுமானாக வருவார்.] இதைக்கண்டு எங்கள் வகுப்பில் சர்ச்சை நடந்தது! கடைசியில் எங்கள் ஹிந்தி பண்டிதர் நவாபையே கேட்டுவிட்டார். ஹனுமார் அசோகவனத்தில் யார்கண்ணிலும் படாமல் இருக்கவேண்டுமாதலால், அங்கு பச்சைதான் camouflage க்கு வசதி என்று சொன்னாராம்! அவருக்கு உருவத்தையே மாற்றிக்கொள்ளும் சக்தி இருந்ததால், வர்ணத்தையும் மாற்றிகொள்வார் போலும்!
    வட இந்தியாவில் ஹனுமார் விக்ரஹத்திற்கு சிந்தூரம் பூசி சிவப்பாகத்தான் இருக்கும். இது பற்றி ஹனுமார்-சீதை சம்வாதமாக ஒரு கதையும் சொல்வார்கள். சீதை நெற்றியில் சிந்தூரம் இட்டதால் ராமருக்கு ஆயுள் பலம் என்று அறிந்து தானும் சிந்தூரமிடத் தொடங்கினாராம்!
    ஹனுமாரைப் பற்றி அனேகம் துதிகள் இருக்கின்றன. அதில் எங்காவது அவர் நிறம்பற்றி இருக்குமெனத் தோன்றுகிறது.

  2. “ஆஞ்ஜனேய மதிபாடலானனம்” என்ற இந்த ஶ்லோகத்திலேயே “காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்”என்று வருகிறது. இதற்கு ‘பொன்மலை போன்று கம்பீரமான தோற்றமுடையவர்’ என்று பொருள் சொல்வார்கள் [அண்ணா சுப்ரமண்ய ஐயர்.] அதனால் தங்க நிறம், மலைபோன்ற கம்பீரமான உருவம் எனலாம்!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: