சிரித்துக் கொண்டே பாகிஸ்தான்; சண்டையிட்டு ஹிந்துஸ்தான்! (Post No.5059)

 

Written by S NAGARAJAN

 

Date: 30 MAY 2018

 

Time uploaded in London –  8-16 am  (British Summer Time)

 

Post No. 5059

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சிரித்துக் கொண்டே பாகிஸ்தான்; சண்டையிட்டு ஹிந்துஸ்தான்!

 

ச.நாகராஜன்

 

1

காந்திஜியும் நேருஜியும் தான் கூறிய வார்த்தைகளைத் தவற விட்டதை சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

இந்தக் கட்டுரைக்கு உடனடி விமரிசனமாக திரு நஞ்சப்பா (மெத்தப் படித்த இவரின் விமரிசனக் கருத்துக்கள் அழகானவை; ஆழமானவை; இவர் யார், எந்த ஊர் என்பது எனக்கு இதுவரை தெரியாது) அவர்கள் பதிவிட்ட கருத்துக்கள் மிக்க மதிப்பு வாய்ந்தவை. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.

அதை விமரிசனப் பகுதியில் படிக்கத் தவறிய அன்பர்களுக்காக அதன் முக்கிய பகுதியை அப்படியே இங்கு தருகிறோம்:

 

  1. இரண்டாம் உலகப் போருக்குப்பின் , இங்கிலாந்து இந்தியாவிடம் கடன்பட்டது. இது காலனி ஆதிக்க முறைக்கே எதிர்மறையானது. இதை இங்கிலாந்து ஏற்கவில்லை.
  2. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவின் பாதுகாப்பு பெரிய பொறுப்பையும் செலவையும் இங்கிலாந்தின் மீது சுமத்தியது, இதை ஏற்க இங்கிலாந்து தயாராக இல்லை.

3.நேதாஜியின் இந்திய தேசியப் படையினால் நாட்டில் ஒரு புதிய உத்வேகம் பிறந்தது. ராணுவம், கடற்படை ஆகியவற்றில் இருந்த இந்தியர்கள் புதிய எழுச்சி பெற்றனர். பம்பாயில் கடற்படையினர் Mutiny யில் ஈடு பட்டனர்.ஆங்கில அரசினர் அரண்டுவிட்டனர். இனி இந்திய வீரர்களை அடக்கிவைக்க முடியாது என்ற கருத்து அவர்கள் மனதில் உதித்து நிலைத்தது. இந்தியாவிலிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதை பின்னாட்களில் அன்றைய பிரதமராக இருந்த அட்லி பிரபுவே கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் பற்றி ஜின்னா கூறியதை முழுதும் நம்ப முடியாது. ஜின்னாவை சர்ச்சில் மறைமுகமாக தூண்டிவந்தார். பாகிஸ்தான் பற்றி உறுதியாக இருக்குமாறு ஊக்குவித்து வந்தார். இது ஆதாரபூர்வமான விஷயம்.

இந்தியாவில் முஸ்லிம் பிரிவினை உணர்ச்சி வளர காந்தியே காரணமானார். 1857 புரட்சிக்குப் பிறகு இந்திய முஸ்லிம்கள் அடியோடு ஒடுக்கப்பட்டனர். முதல் உலகப் போரின்போது துருக்கிக்கு ஆதரவாக கிலாஃபத் இயக்கத்தை காந்தி ஆதரித்தார். துருக்கியே கைவிட்ட இந்த இயக்கம் இந்திய முஸ்லிம்களை ஒன்றுபடுத்தியது. முஸ்லிம்கள் எந்த நிலையிலும் எந்த நாட்டிலும் பிறருக்கு அடங்கி இருக்கமாட்டார்கள். இது குரானில் உள்ள நிலை. அதனால் பிரிவினை வாதம் முஸ்லிம்களின் அடிப்படை கோரிக்கையாகியது.
[மௌலானா ஆஸாத் போன்ற சிலர் பிரிவினையை ஆதரிக்காதது போல் இருக்கலாம்; ஆனால் இதன் அடிப்படை பிரிவினை வேண்டாம் என்பதல்ல, இந்தியா முழுதுமே முஸ்லிமாக மாறவேண்டும் என்பதே!]

 

காந்திஜியின் அரசியல் வாழ்க்கையை ஊன்றிப் படிப்பவர்கள் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேணும். 1921க்குப் பிறகு காந்திஜியின் எந்தப் போராட்டமும் வெற்றியடையவில்லை! அவர் எதையும் இறுதிவரை முழுமையாக நடத்தவில்லை! ( உப்பு சத்யாக்ரஹம் தனி நபர் போராட்டமாதலால் அது வேறுவிதமானது; ஆனால் அதன்பின் விளைவுகள் கடுமையாக இருந்தன). 1942 ஆகஸ்டு புரட்சியோ, அபத்தத்தின் உச்சம். ‘வெள்ளையனே வெளியேறு ‘ என்ற கோஷத்தைக் கொடுத்தார்; செய் அல்லது செத்து மடி என்றார்.ஆனால் தொண்டர்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்குமுன் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தலையில்லாத இயக்கம் ஆறு மாதத்திற்குள் முழுதும் ஒடுக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் , இங்கிலாந்து இந்தியாவை விட்டு வெளியேற அவசரமாக முடிவெடுத்தது; அவர்கள் நினைத்தவிட வேகமாகவே மௌன்ட்பேட்டன் செய்துமுடித்தார். இதற்குக் காரணம் காந்திஜியல்ல; இந்தியாவை வைத்திருப்பதால் தமக்கு ஆதாயமில்லை, விரயம் தான் என்பதை ஆங்கிலேயர் நன்கு உணர்ந்ததே ஆகும்.
பிரிவினைக்குப்பின் நடந்த வன்முறைக்கு பிரிவினை மட்டுமே காரணமாகாது.
பஞ்சாப், சிந்து, வங்காளம் ஆகிய பகுதிகளில், ஹிந்து-முஸ்லிம் கலந்து வசித்த பகுதிகளில் எந்த இடம் எப்படிப் பிரியும் என்பதை மவுன்பேட்டன் நிச்சயிக்கவில்லை; நமது தலைவர்களிடமும் கலந்துபேசவில்லை. 1947 ஜூலை மத்திய வாக்கில் [ இந்த விஷயத்தைப் பற்றி ஏதுமே அறிந்திராத ]ஒரு லண்டன் வக்கீலைப் பிடித்து வந்து, ஒரு தனி இடத்தில் அமர்த்தி , தேசப்படத்தைக்கொடுத்து நாட்டைப் பிரிக்கச் சொன்னார், மௌன்ட்பேட்டன். அவரும் படத்தில் பென்சிலால் கோடு போட்டு, ‘இது அங்கே, அது இங்கே’ என்று தன்னிச்சையாக முடிவுசெய்தார். சுதந்திர தினத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக வந்த இந்த வரை படத்தை இரும்பு பீரோவில் வைத்துப் பூட்டினார் மவுன்பேட்டன். ஆக, சுதந்திர தினத்தன்று எந்தப் பகுதி இந்தியா, எந்தப் பகுதி பாகிஸ்தான் என்பது பிரதமர் நேருவுக்கே தெரியாது! மவுன்ட் பேட்டன் பெரிய எம்டனாகி, நேருவை முட்டாளாக்கினார்! இது ஹிந்துக்களையே அதிகம் பாதித்தது. இதை காந்தியோ நேருவோ கண்டுகொள்ள வில்லை. முஸ்லிம்கள் ஏரியாவில் ஹிந்துக்கள் சிக்கிக்கொண்டனர், இதுவே வன்முறையின் வித்து.

 

ஆகஸ்டு புரட்சியைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் 4 ஆண்டுகள் சிறையில் இருந்தனர்.. அவர்களுக்கு தேசியப் போராட்டத்தில் இருந்த ஊக்கம் போய்விட்டது. உடல் நிலை காரணமாக வெளியே வந்த காந்திஜி, ராஜாஜியின் யோஜனைப்படி ஜின்னாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இதற்காக ஜின்னாவைச் சந்திக்க அவர் இருப்பிடத்திற்கே சென்றார். இந்த முட்டாள் தனமான செய்கை, ஜின்னாவின் மதிப்பை உயர்த்தியதுடன், அவர்தான் முஸ்லிம்களின் ஏகோபித்த பிரதிநிதி என்ற மாயையையும் உருவாக்கியது. இதன்பின் ஜின்னா பிடிகொடுக்கவில்லை. பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது ( காந்தி-ஜின்னா போட்டோவுடன்.)

1926க்குப் பிறகு எந்த இக்கட்டான நிலையிலும், எந்தப் பிரச்சினைக்கும் காந்திஜியால் ஒரு தீர்வோ, உருப்படியான யோசனையோ சொல்ல முடியவில்லை. 1946ல் சிறையிலிருந்து வெளிவந்த தலைவர்களுக்கு, ‘இன்னும் எத்தனை நாள் போராடுவது’ என்ற சலிப்பு உணர்ச்சி ஏற்பட்டது. பதவி யேற்போம் என்ற ஆசையும் தோன்றியது. நேருவும். படேலும் சுமுகமாக இல்லை; இருவருக்கும் காந்திஜியின் மேல் நம்பிக்கை யில்லை. [ அதாவது அவர் ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்வார் என்ற நம்பிக்கை இல்லை]. இந்த நிலையில் நேரு மவுன்ட் பேட்டனின் வலையில் சிக்கினார். அவர் சொல்வதற்கெல்லாம் சரியென்றார்.
‘பாகிஸ்தான் வேண்டும்’ என்பதில் ஜின்னா உறுதியாக இருந்தார்; பிரிவினை கூடாது என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக இல்லை.
At that stage, Gandhiji was unfit to command. Nehru & Co were unwilling to obey.

இது தான் நடந்தது. இங்கு சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆதாரமாக புத்தகங்களைச் சொல்லமுடியும். ஆனால் பட்டியல் நீண்டுவிடும். காந்திஜி-ராஜாஜியின் பேரரான ராஜ்மோஹன்  காந்தி எழுதிய காந்திஜி, படேல், ராஜாஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களிலேயே ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன.\

*

இந்த விமரிசனப் பகுதியைப் படித்த பின்னர் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க பல்வேறு உண்மைகளைத் தரும் புத்தகப் பட்டியலையும் அவர் விமரிசனப் பகுதியில் உடனே பதிவு செய்தார்.

மேலும் விஷயங்களை அறிய விரும்பும் பல அன்பர்கள் இந்தப் புத்தகங்களைப் படிக்கலாம். அவர் தந்த புத்தக விவரங்கள்:

 

I give below a short list of recent books which readily come to mind.

1.Land of the Seven Rivers by Sanjeev Sanyal. Penguin, 2013
Gives details of how the London lawyer divided India!

  1. Indian Summer: by Alex Von Tunzelman. Simon and Schuster, 2008.
Deals with the developments in the summer preceding Independence, esp ecially covers
Mountbatten-Nehru dealings.

3.Churchill’s Secret War: by Madhusree Mukerjee. Basic Books, 2010.
Clearly details how Churchill’s hatred of Hindus affected India during the Second World
War, and how Churchill encouraged Jinnah. This book is well researched.

4.Keeping the Jewel in the Crown: by Walter Reid. Penguin Random House, 2016.
It reveals British secret designs and how they thwarted and outwitted Indian efforts.

  1. History of the Freedom Movement In India : by R.C.Majumdar. It is difficult to find this book
as it has been suppressed by the Nehruvian establishment as it explodes many myths of
Gandhi-Nehru mystique.
  2. Biographies of Gandhiji, Rajaji, and Sardar Patel by Rajmohan Gaandhi. The first two are published by Penguin, and the last one by Navjivan Publishing House, Ahmedabad. These are detailed chronicles, and shed light on many subjects/issues from different standpoints. It makes for painful reading , as we realise how increasingly irrelevant Gandhiji became in the movement, especially towards the closing stages, how Gandhiji’s voice did not count, and even how he failed to find his voice!
  3. Mahatma Gandhi: The Last Phase, by Pyarelal,published by Navjivan, Ahmedabad.
Written by Gandhiji’s secretary, it is a painful chronicle of how Gandhiji struggled on all fronts in the last stages of his movement, how Congress leaders became power-hungry, how they increasingly disregard
ed Gandhiji, and became corrupt. I do not know whether this book is in print.
  4. Gandhi & Churchill by Arthur Herman , Arrow Books, 2008.
This is a voluminous book in small print. Well researched and detailed. It reveals how Churchill’s hatred for Gandhi made him support Jinnah secretly so that Gandhi would not succeed. Churchill supported and encouraged Jinnah even when he was out of office!

Among the British, Lord Wavell , the viceroy before Mountbatten alone appreciated the geographical integrity of India, and held that any division would jeopardise India’s security. But his bosses in London were in no mood to listen to him, and were impatient to drop India like a hot potato and thrust Mountbatten, a proven incompetent fellow as the viceroy to speed up their exit. It is ironical that an empire begun by a vagabond like Robert Clive was ended by one who carried Royal blood! But they destroyed the integrity of India. India is now surrounded by hostile neighbours, created by British malevolence matched, and perhaps exceeded by Indian incompetence.

மேலே கண்ட பகுதிகள் விளக்கமாக இருப்பதால் இதை இன்னும் அதிகமாக விளக்கத் தேவையில்லை.

 

2

உலக வரலாற்றை நன்கு ஊன்றிக் கவனித்தால் முஸ்லீம்கள் அதிரடியாகவோ அல்லது சமாதானமாகவோ வசிக்கச் சென்ற நாடுகளை அவர்கள் ஆக்ரமிப்பதோ அல்லது அங்குள்ளவர்களை மதமாற்றுவதோ வழக்கமாக இருப்பதைக் காணலாம்.

இப்போது பிரிட்டன் இதற்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவோ அரண்டு போய் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, “இங்கு இருக்கப் பிடிக்கவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று அதிரடியாகச் சொல்லி வருகிறது.

ஆயிரம் ஆண்டுகள் முகலாய ஆக்கிரமிப்பைத் தாங்கி, அதை விரிவு படுத்த விடாமல், வேரூன்ற விடாமல் செய்த ஒரே நாடு இந்தியா தான் என்பதை உறுதிபடச் சொல்லலாம்.

தனது உள்ளீடான சக்தியால் இந்து மதம் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் இந்த வெற்றியைத் தக்க வைப்பது ஹிந்துக்கள் கையில் தான் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

3

இனி பிரிவினையின் கதைக்கு வருவோம்.

ஆறு லட்சம் ஹிந்துக்களும் சீக்கியர்களும் அநியாயமாகப் பிரிவினையால் கொல்லப்பட்டனர்.

இவர்களைக் கொன்றவர்கள் முஸ்லீம்களே. இதை நேருஜியோ அல்லது மௌலானா அபுல்கலாம் ஆஜாதோ கண்டுகொள்ளவில்லை.

சில நூறு முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது ஆ, ஊ என்ற பல தலைவர்கள் அலறினர். ஆனால் லட்சக் கணக்கில் ஹிந்துக்களும், சீக்கியர்களும் கொல்லப்பட்ட போது இவர்களின் குரல் ஒலிக்கவில்லை.

இதே பாரம்பரியம் தான் இன்றும் நீடிக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய ஒரு விஷயம்.

பண்டிட் ஜவஹர்லால் நேரு (பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே)

2, செப்டம்பர், 1946இல் பிரதம மந்திரியாக ஆனார்.

அதைத் தக்க வைத்துக் கொள்வது அவரது பிரதான நோக்கமாக இருந்தது.

ஹிந்துக்கள் கொலையைப் பற்றி அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

எது இந்திய எல்லை, எது பாகிஸ்தான் எல்லை என்பதே நேருஜி உட்பட யாருக்குமே தெரியவில்லை.

இப்படியா ஒரு பிரம்மாண்டமான தேசத்தைப் பிரிப்பது?

தேசம் சுதந்திரம் அடைந்த இரு தினங்களுக்குப் பின்னரே நேருஜி எது இந்தியப் பகுதி, எது பாகிஸ்தான் பகுதி என்பதை அறிவித்தார்.

அதற்குள் விஷயம் எல்லை மீறி விட்டது.

இந்தியப் பகுதியில் இருக்கிறோம் என்று நினைத்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் சந்தோஷமாக இருந்த சமயத்தில் அவர்கள் இருப்பது பாகிஸ்தான் பகுதியில் என்று தெரிய வந்த போது அவர்களை அடித்துக் கொன்று, அவர்களிடமிருந்த சொத்து மற்றும் இதர உடைமைகளை பாகிஸ்தானிய தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

இவர்களைக் காப்பதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை அல்லது எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முன்பேயே கொலைகள் முடிந்து விட்டன!

என்ன ஒரு கோரம் இது!

இதனால் சந்தோஷப்பட்ட பாகிஸ்தானிய முஸ்லீம்கள்

சிரித்துச் சிரித்து பாகிஸ்தானைப் பெற்றோம் – இனி

சண்டையிட்டு ஹிந்துஸ்தானைப் பெறுவோம்

என்று கோஷமிட்டனர்.

ஹன்ஸ்தே ஹன்ஸ்தே லியே பாகிஸ்தான்

லட்தே லட்தே லேங்கே ஹிந்துஸ்தான்

என்பது அவர்களின் கோஷம்.

4

16, ஆகஸ்ட், 1946இல் கல்கத்தாவில் 5000 ஹிந்துக்களை முஸ்லீம் வெறியர்கள் கொன்றனர்.

இனி அரங்கேறப் போகும் காட்சிகளுக்குக் கட்டியமாக அது அமைந்தது.

பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களைக் கொல்வது, இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை மைனாரிடி உரிமையின் பேரில் பாதுகாப்பது என்ற நிலை உருவான போது காந்திஜிக்கே மிக்க கோபம் வந்தது.

கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களா தேஷ்) அவர்கள் ஹிந்துக்களை கொலை செய்த போது, இந்தியப் பகுதியில் அவர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் அலறி ஓடி வந்து மகாத்மாவின் காலில் விழுந்து பாதுகாப்புக் கேட்டனர்.

காந்திஜியோ, கிழக்கு பாகிஸ்தானில் கொலைகள் நிறுத்தப்படும் வரை நீங்கள் எந்த வித பாதுகாப்பையும் இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது என்று கண்டிப்பான குரலில் கூறினார்.

அடுத்து நடந்தது ஆச்சரியமான விஷயம்.

தந்திகள் பறந்தன. கிழக்கு பாகிஸ்தானில் கொலைகள் நின்றன!

 

இப்படி பல விசித்திர சம்பவங்களைக் கொண்ட இந்திய – பாகிஸ்தான் பிரிவினை போல உலக சரித்திரத்தில் இன்னொரு சம்பவம் இல்லை என்பது வேதனைக்கும் வியப்புக்கும் உரிய விஷயம்!

 

5

பழைய கதையைக் கிளறுவதால் வெறுப்பு உணர்ச்சி அல்லவா ஏற்படும் என்ற கேள்வி இதைப் படிப்பவர்க்கு எழலாம்.

இன்றைய அவல நிலைக்குக் காரணமே நமது தவறான கொள்கைகளே என்பதைச் சுட்டிக் காட்டவே இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது.

முஸ்லீம்களுக்கு மைனாரிடி உரிமைகள் இங்கு உண்டு; ஏராளமான பதவி சுகங்கள் உண்டு – ராஷ்டிரபதி பதவி உட்பட!

பாகிஸ்தானிலோ ஒரு அரசு பதவியைக் கூட ஒரு ஹிந்து பெற முடியாது!

இது இரட்டை நிலை – டபிள் ஸ்டாண்டர்ட்.

இதற்குக் காரணம் பிரிட்டிஷாரின் நயவஞ்சகத் தந்திரமும், அதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த ஜின்னா உள்ளிட்ட கோஷ்டிகளும், இதை எதிர்க்காமல் ஆமாம் சாமி போட்ட நமது கையாலாகாத ‘செகுலர் தலைவர்களுமே!

சுதந்திரம் பெற்றதில் அனைவருக்கும் சந்தோஷம் ஏற்பட்டது உண்மை தான்; அதை அனைவரும் வரவேற்றனர் என்பதும் உண்மை.

ஏனெனில் பிரிட்டன் என்னும் வஞ்சகக் குள்ளநரியை நாட்டை விட்டு ஓட்டினோம் அல்லவா.

ஆனால் அதற்காக நாம் கொடுத்த விலையும் வாங்கிக் கொண்ட தீராத தொடர் வியாதியும் (மைனாரிடி சலுகைகள்) தவிர்த்திருக்கக் கூடியதோ, என்னவோ!

காலம் தான் பதில் சொல்லும்!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: