மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 21 JUNE 2018

 

Time uploaded in London –  14-01  (British Summer Time)

 

Post No. 5135

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135)

 

சம்ஸ்க்ருதத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சரக ஸம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை போன்ற ஆயுர்வேத நூல்களை நாம் அறிவோம். ஆனால் பாலி மொழியில் உள்ள பௌத்த மத நூல்களில் இருக்கும் மருத்துவக் குறிப்புகளை உலகம் அறியாது. புத்தரோ பௌத்தர்களோ மருத்துவ நூல்களை எழுதவில்லை ஆயினும் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய மருத்துவக் குறிப்புகள் அந்த நூல் ல்களிலும் உண்டு.

சில சுவையான செய்திகளை மட்டும் தருவேன்

ஒரு முறை புத்தர் நோய்வாய்ப்பட்டார். உடனே தேவஹித என்ற பிராஹ்மணனிடம் சென்று சுடு நீர் வாங்கி வரும்படி உபவன என்ற சிஷ்யரை அனுப்பி வைத்தார். உடனே அந்தப் ப்ராஹ்மணன் , புத்தரிடம் வந்து அவரை வெந்நீரில் குளிக்கச் சொன்னார். புத்தர் குளித்தவுடன் அவருக்கு வெல்லப்பாகு கலந்த சுடு நீரை சாப்பிட அருளினார். அதைக் குடித்தவுடனே  வாத, பித்த, கப தோஷ வியாதி போயிற்று.

முதலில் மனிதர்களுக்கு ஆசை மூப்பு, பசி என்ற மூன்று நோய்கள் மட்டும் இருந்தன. பின்னர் இது காலப்போக்கில் 96 நோய்களாகப் பல்கிப் பெருகின என்று சுத்தனிபாத என்ற நூல் செப்பும். சிலர் 98 என்றும் பகர்வர்.

புத்தர் காலத்தில் மகத சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னன் பிம்பிசாரன். அவனிடம் புகழ்பெற்ற மருத்துவர் ஜீவகன் இருந்தார். அவர் தக்ஷசீல பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கினார். அப்போது மகத சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைத்த நோய்கள் குஷ்ட ரோகம், க்ஷய ரோகம் (டி.பி.) , இழுப்பு, ஜூரம் முதலியன ஆகும்

 

கொப்புளங்கள் வந்தால் அதன் மீது கடுகுத் தூளைத் தூவி கட்டுப் போட்டனர்.

தலைவலி தீர பலவித மூலிகை எண்ணைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் மூக்கு வழியாக குழாய் மூலம் மருந்து கொடுத்தனர். இரட்டைக் குழாய் வழியாக நாசியின் இரு த்வாரங்கள் வழியே மருந்து தந்தனர். குழாய் வழியாக மருந்துப் புகையும் செலுத்தினர்.

 

மஞ்சள் காமாலை நோய்க்கு பசுமாட்டின் மூத்திரம் கலந்த கஷாயம் தந்தனர்.

மூட்டுவலி முதலிய நோய்களுக்கு ஆவிச் சிகிச்சை தரப்பட்டது. ஆறு அடி குழி ஒன்றில் கரியை நிரப்பினர். அதன்மீது மணலைப் பர்ப்பி அதன் மீது மண்ணாலும் களி மண்ணாலும் பூசினர் அதன் மீது மூலிகைகள் போடப்பட்டன. அதிலிருந்து வரும் புகையில் கை, கால் முதலிய உறுப்பைக் காட்ட வைத்தனர். உடலின் எல்லா உறுப்புகளையும் காட்டி புகை பிடிக்க வைத்தனர்.

அசோகர் காலத்தில் ஒரு புத்த பிக்ஷுவுக்கு நோய் வந்தது. மருந்து கிடைக்காமல் அவர் இறக்க நேரிட்டது. உடனே பாடலிபுத்திர நகரத்தின் நான்கு வாயில்களிலும் நான்கு பெரிய தொட்டிகள் முழுக்க மருந்துகளை நிரப்பி அனைவருக்கும் மருந்து கிடைக்க அசோகர் வசதி செய்தார். புத்தகோசரின் சமந்தபாஸாதிக என்ற புஸ்தகம் இத்தகவலைத் தருகிறது. அவரது கல்வெட்டு ஒன்று மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தனித்தனியே ஆஸ்பத்திரிகள் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றன

–SUBHAM–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: