குரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்! (Post No.5136)

Written by S NAGARAJAN

 

Date: 22 JUNE 2018

 

Time uploaded in London –  5-23 am  (British Summer Time)

 

Post No. 5136

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

குரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்!

 

ச.நாகராஜன்

1

பாரதத்தின் வரலாற்றை சரியாக எழுத வேண்டிய அவசியம் முன் எப்போதையும் விட இப்போது அவசியமாகிறது; இது அவசரத் தேவையும் கூட.

செகுலரிஸம் என்ற போர்வையில் கிறிஸ்தவ பாதிரியின் கல்லறையில் அவர் தமிழ் மாணவன் என்று பொறித்திருக்கிறார் என்று சிறு பிள்ளைகளின் பாட புத்தகத்தில் பொய்யும் புரளியுமாக எழுதி வைப்பது; குரு தேக் பகதூரின் ஒப்பற்ற அற்புதமான தியாகத்தைக் கொச்சைப் படுத்துவது அதை NCERT மூலமாகப் பரப்புவது போன்ற பல அபாயகரமான அசிங்கமான பல நூறு “செகுலரிஸ வித்தைகளைப்” பார்த்து விட்டோம்.
(“தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு” இந்தியாவில் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குழு ஆகும். இது மத்திய, மாநில அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கும் குழுவாக செயல்பட்டு வருகிறது. –

The National Council of Educational Research and Training (NCERT) is an autonomous organisation set up in 1961 by the Government of India to assist and advise the Central and State Governments on policies and programmes for qualitative improvement in school education.)

செகுலரிஸ போர்வையில் கம்யூனிஸ்டுகளும், வெறிபிடித்த மதமாற்றப்  பாதிரிகளும், இஸ்லாமிய தீவிரவாதிகளும், ஐந்தாம்படை வேலை பார்க்கும் போலி ஹிந்துக்களும் உலவுவதும் அறிஞர்கள் போல ஆய்வு என்ற பெயரில் விஷக் கருத்துக்களைத் திணிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

குரு தேக்பகதூரைப் பற்றி Guru Tegh Bahadur’s martyrdom

– Satish Chandra என்ற சதிஷ் சந்திராவின் கட்டுரையும் அதற்கு உரிய பதிலடிக் கட்டுரையாக , An untenable attempt என்று Gurtej Singh எழுதிய அழகிய கட்டுரையையும் ஹிந்து நாளேடு பிரசுரித்தது.

இணையதளத்தில் கீழ்க்கண்ட தொடுப்புகளில் அன்பர்கள் கட்டுரைகளை முழுதுமாகப் படிக்கலாம். (16-10-2001 மற்றும் 13-11-2001 இதழ்களில் வெளியானவை)

http://www.thehindu.com/2001/10/16/stories/05162524.htm

 

http://www.thehindu.com/thehindu/op/2001/11/13/stories/2001111300020100.htm

 

 

2

நமது நாட்டின் சேவையில் சீக்கியர்களின் சேவை மகத்தானது.

இவர்களைத் தரம் தாழ்த்திப் பேசுவதும், இவர்களின் பணியை கொச்சைப் படுத்துவதும் இவர்களை தேசீய நீரோட்டத்திலிருந்து பிரித்து பிரிவினையை ஏற்படுத்தும் தீய எண்ணத்தின் அடிப்படையிலானது.

இந்திய சுதந்திரப் போரில் பிரிட்டிஷ் பாதக அரசால் தூக்கிலிடப்பட்ட 124 வீரர்களில் 71 பேர்கள் சீக்கியர்கள். ஒரே ஒருவர் தான் முஸ்லீம். அவரும் கூட கைபர் பிராந்தியத்தைச் சேர்ந்த பத்தான். ஆயுள் தண்டனை தரப்பட்ட 3500 சுதந்திரப் போர் தியாகிகளில் 2200 பேர்கள் சீக்கியர்கள்.

1919ஆம் ஆண்டு புனிதத் தலமான அமிர்தசரஸில் நிராயுதபாணிகளாக இருந்தவர்களை பிரிட்டிஷ் அரசு வக்கிரமாக ஈவிரக்கமின்றி வதை செய்தது; அதில் 1301 பேர்கள் பலி ஆயினர். அவர்களுள் 799 பேர்கள் சீக்கியர்கள். ஒருவர் கூட முஸ்லீம் இல்லை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆக வரலாறு நெடுக ஹிந்துக்களும் சீக்கியர்களும் தங்கள் இன்னுயிரைத் தேசத்திற்காக தியாகம் செய்ததில் சளைத்ததே இல்லை.

 

3

குரு தேக் பகதூர் (Guru  Tegh Bahadur) பத்து சீக்கிய குருக்களில் ஒன்பதாம் நானக் குருவாவார். (தோற்றம் 1-4-1621 மறைவு 24-11-1675). சீக்கிய குருக்களில் முதல் குருவான குரு நானக் அவர்களின் ஆவி இவர் மீது ஆவிர்பவித்ததாக நம்பப் படுகிறது.

குரு கிரந்த் சாகிப்பில் இவரது 115 கவிதை நடையிலான இறைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இவரது பெருமை அளப்பரியது.

பல்கலை வித்தகர் இவர். வில்வித்தை, கத்திச் சண்டையில் நிபுணர். குதிரையேற்றத்தில் வல்லவர். பழைய இதிஹாஸ நூல்களில் அவற்றின் ஆழம் கண்டவர்.

பதினான்காம் வயதிலேயே முகலாயரை போரில் எதிர்கொண்ட அஞ்சா நெஞ்சர் இவர்.

பகலா என்னும் இடத்தில் 26 வருடங்கள் 9 மாதங்கள் 13 நாட்கள் இவர் தவத்தில் இருந்தார். குடும்ப பொறுப்பை விட்டு விட்டு அதிகமாக தவத்தில் ஈடுபட்ட காலம் இது.

காஷ்மீரி ஹிந்து பண்டிட்களை கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றும் அநியாயத்தைத் தட்டிக் கேட்டார் இவர்.

ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் இஸ்லாமிற்கு மாற்றும் முகலாய அரசின் போக்கை வன்மையாகக் கண்டித்து தைரியமாகப் போர்க்கொடி உயர்த்தினார்.

அனந்தபூர் சாஹிப் என்னும் அழகிய நகரை பஞ்சாப் மாகாணத்தில் நிறுவினார். பிலாஸ்பூர் ராணியான சம்பாவிடமிருந்து 500 ரூபாய் கொடுத்து இதற்கான இடத்தை இவர் வாங்கினார். பாடியாலா நகரையும் இவரே தான் நிறுவினார்.

ஜிஹாங்கீர் அநியாயமாக ஐந்தாம் சீக்கிய குருவான அர்ஜுன் சிங்கைக் கொலை செய்ததன் காரணமாக, இவருக்கு பலத்த பாதுகாப்பை இவரது மெய்காப்பாளர்கள் தந்தனர்.

ஆனால் ஔரங்கசீப் இவரைப் பிடித்து வந்து இஸ்லாமிற்கு மாறு; இல்லையேல் உயிரை எடுப்பேன் என்று கூறிய போது ஒருக்காலும் இஸ்லாமிய மதத்தை ஏற்க மாட்டேன். சாவதே மேல் என்று முழங்கினார்.

 

அனைவருக்கும் முன்பாக 1675-ல் இவர் தலை துண்டிக்கப்பட்டது. இவர் இறந்த இடம் குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப். இவர் உடல் எரிக்கப்பட்ட இடம் குருத்வாரா ராகெப் கஞ்ச் சாஹிப்.

தனது இன்னுயிரை ஈந்து தன் மானத்தைக் காத்த மாபெரும் வீரரான இவரைக் கொச்சைப் படுத்துவதும் ஔரங்கசீப்பை புகழ்வதும் தேசப்பற்றில்லாதவர்கள் மட்டுமே செய்யக்கூடிய செயலாகும்.

இவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் உள்ளன. நாடு முழுவதும் இவர் சுற்றி வந்ததால் மக்களின் அளவிலா அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தார்.

குரு தேக் பகதூரைப் போற்றுவோர் பாரத தேச பக்தர்கள்; இவரது வரலாற்றை மாற்றத் துணிவோர் இந்த தேசத்தின் துரோகிகள்!

குரு தேக் பகதூரை வணங்குவோம்; போற்றுவோம்!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: