விஷக்கடிக்கு பௌத்த மத வைத்தியம் (Post No.5137)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 22 JUNE 2018

 

Time uploaded in London –  5-34 AM  (British Summer Time)

 

Post No. 5137

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாலி மொழி நூல்களில் புத்த மத விஷயங்களுக்கு இடையில் பல மருத்துவக் குரிப்புகளும் உள. சில விஷயங்கள் மிகவும் விநோதமனவை.

 

 

சூள வம்ஸம் என்னும் இலங்கை வரலாற்று நூல் விளம்புவதாவது:- கித்திஸிரிராஜஸீஹ,

(கீர்த்தி ஸ்ரீ இராஜ சிம்ஹன்) பௌத்த பிஷுக்களுக்காக இரண்டு டாக்டர்களையும் நர்ஸ்களையும் நியமித்தான். அரசாங்க கஜானாவிலிருந்து ஆண்டுதோறும் மருத்துவச் செலவை நல்கினான்.

 

 

உபாலி என்ற பௌத்த மத குருவுக்கு மூக்கில் வியாதி வந்தபோது நல்ல மருத்துவ வசதி அளித்தான்.

 

முதலாவது பராக்ரமபாஹு ஒரு பெரிய மண்டபம் கட்டி அங்கு நோயாளிகளைத் தங்கச் செய்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு விஷேச வேலைக்காரன், ஒரு வேலைக்காரியை அமர்த்தி இரவும் பகலும் உணவும் மருத்தும் அளிக்க ஏற்பாடு செய்ததாகவும் சூளவம்ஸம் எனும் சரித்திர நூல் பகரும்.

 

பராக்ரமபாஹு பல்வேறு மூலிகை மருந்துகளைச் சேகரித்து அவைகளை மாட்டு கொம்புக்குள் பாது காத்து வைத்தான். விஷ அம்புகளை எடுப்பதற்காக விஷேச சாமணங்களைச் செய்தான். விஷ அம்புகளை எடுத்து காயங்களுக்கு மருந்திட திறமையான டாக்டர்களை நியமித்தான்.

பாம்புக்கடிக்கோ அல்லது விஷத்தை இறக்கவோ சாணி சாம்பல், மூத்திரம், களிமண், கஷாயம் பயன்படுத்தப்பட்டன. ஒருவருடைய எல்லா உறுப்புகளிலும் விஷம் பாய்ந்து நீலம் ஏறிய பின்னரும் அவனைக் காப்பாற்றிய அதிசயச் செய்திகளை புத்தமத நூல்கள் நுவலும்.

 

அவர்கள் கருகிய அரிசியினால் ஆன கஷாயத்தைக் கொடுத்து விஷத்தை இறக்கிய செய்திகளும் சொல்லப்படுகின்றன.

 

 

மருந்துகளைப் பொறுத்த மட்டில் ஆயுர்வேத மருந்துகளைப் போலவே உள்ளன. ஆனால் கரடி மாமிசம், முதலை மாமிசம், மீன் முதலியவும் உள்ளன.

வியாதிகளின் பட்டியல் பின்வருமாறு:

 

மஞ்சள் காமாலை நோய்க்கு பசு மூத்திரம் கலந்த கஷயம் கொடுக்கப்பட்டது.

தோல் நோய்களுக்கு மூலிகை எண்ணை பயன்படுத்தப் பட்டது.

 

சமிதிகுத்த என்ற பிராஹ்மணனுக்கு குஷ்ட நோய் வந்து உறுப்புகள் அனைத்தும் உதிர்ந்து விழுந்தன.

மொக்கராஜ (மஹாராஜ) என்ற பிராஹ்மணனுக்கு  உடல் முழுதும் பருக்கள் வந்தன. வீட்டில் நோய்க் கிருமிகள் இருப்பதை அறிந்து குளிர் காலத்தையும் பொருட்படுத்தாது வயலில் வசித்தான்

 

ராஜ க்ருஹத்தில் இரண்டு பாங்கு அதிகாரிகள் வீட்டில் பிளேக் நோய் ஏற்பட்டது. முதலில் ஈ போன்ற பூச்சிகளும் பின்னர் பசு போன்ற மிருகங்களும் பின்னர் வேலைக்காரர்களும் பின்னர் வீட்டு எஜமானர்களும் நோயில் விழுந்தனர்.

 

நோய்களின் பட்டியலில் நீரிழிவு, வயிற்றுப் போக்கு, கண், காது, வாய், வயிறு, குடல் நோய்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. உறுப்பு வாரியாக நோய்கள் பட்டியலிடப்பட்டது விஞ்ஞான அணுகுமுறையைக் காட்டுகிறது.

 

 

Sota Roga = Disease of hearing
Jihva Roga = Disease of tongue
Kaya Roga = Disease  of body
Mukha Roga = Disease of mouth
Dant Roga = Disease of teeth
Kaba =cough
Sasa =asthma
Pinasa= cold in the head
Daha = burning
Kucchi Roga = Disease abdominal trouble.குடல் நோய்
Muchchaa = hysteria உணர்ச்சிக் கொந்தளிப்பு
Pakkhandika=  diarrhoea
Suula = acute pain
Visucikaa = cholera வாந்திபேதி
Kilaasa Roga = a cutaneous Disease
Apasmaara = epilepsy வலிப்பு
Daddu=  ringworm
vitachchikaa=  scabies
Madhu meha=  diabetes சர்க்கரை வியாதி
Lohitapitta=  bile with blood
Bhagandala = fistula இரத்தக்குழாய், குடல் போன்ற உறுப்புகளின் இணைப்பில் கோளாறு
Sannipaatikaa = union of humours
Utuparinaamajaaabaadhaa = change of season disease

சித்த, ஆயுர்வேத முறை  போலவே வாத, பித்த, கப  சமத்தன்மை இழப்பதால் நோய்கள் வருவதாக நம்பினர்.

 

–SUBHAM—

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: