ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ள கருத்து விருந்தோம்பல்! (POST.5141)

WRITTEN by LONDON SWAMINATHAN

 

Date: 23 JUNE 2018

 

Time uploaded in London –  18-27  (British Summer Time)

 

Post No. 5141

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆரிய-திராவிட வாதம் தவிடு பொடி!

மநு நீதி நூல்- Part 21

 

மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி…………………………..

ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ள கருத்து விருந்தோம்பல்! (POST.5141)

3-83 ஐம்பெரும் வேள்விகளின் பகுதியாக, ஒரு பிராமணனுக்காவது அன்னமிட்டு முன்னோர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். ஆனால் விஸ்வே தேவர்களுக்கான சடங்குடன் இதைத் தொடர்பு படுத்தாதே.

 

3-84 தினமும் சாஸ்திரப்படி செய்த நைவேத்தியத்தை விஸ்வேதேவர்களுக்கு வீட்டிலுள்ள அக்னியில் பிராஹ்மணன் போடவேண்டும்.

 

3-85 முதலில் அக்னி, பின்னர் ஸோமன், பின்னர் இரு தேவதைகளுக்கும் சேர்த்து, கடைசியில் தன்வந்திரிக்கு அளிக்கவும்

 

3-86 பின்னர் அமாவாஸைத் தெய்வமான குஹு, பௌர்ணமி தெய்வமான அனுமதி பிரஜாபதி, பூமி, ஆகாஸம், கடைசியாக அக்னி ‘ஸ்விஸ்தக்ரது’ ஆகியோருக்கு அளிக்க வேண்டும்.

 

3-87 இவ்வாறு செய்த பின்னர் திக் தேவதைகளுக்கு பிரதக்ஷிணமாக இந்திரன் (கிழக்கு), அந்தகன் (தெற்கு), ஆ பதி/ வருணன் (மேற்கு) இந்துவுக்கும் (சந்திரன்/ ஸோமன் வடக்கு) தரவேண்டும்.

3-88 வாசலில் மருத் (காற்று) தேவதைகளுக்கும், ஜலத்தில் தண்ணீர் தேவதைக்கும், உரல் உலக்கைக்கும் படைக்கவேண்டும். தண்ணீரில் அளிக்கையில் மரங்களின் தேவதைகளுக்கு என்று சொல்லி அளிக்கவும்.

(மரங்களுக்கும் உரல் உலக்கைக்கும் தருவது புறச்சூழலின் மேலுள்ள மரியாதையை   காட்டுகிறது)

 

3-89 தலையில் செல்வ தேவதை ஸ்ரீக்கும், காலில் பத்ரகாளிக்கும், வீட்டின் நடுவில் வாஸ்தோஸ்பதிக்கும் அளிக்கவும். (வீட்டின் தலை , கால் என்பது திருமணப் படுக்கையின் தலை, கால் பகுதி என்று வியாக்கியானம் செய்கின்றனர்)

 

3-90 காற்றில் விஸ்வே தேவர்களுக்கும் இரவிலும் பகலிலும் திரியும் பேய்களுக்கும் பலி தரவேண்டும்

 

3-91 வீட்டின் மேல் பகுதியில் சர்வ உணவு தேவதைக்கும் (ஸர்வான்னபூதி) மிகுதியை தென் திசையில் உள்ள முன்னோர்களுக்கும் அளிக்க வேண்டும்

 

(பஞ்ச யக்ஞமும், தென் திசை முன்னோர் குறிப்பும் திருக்குறளில் உளதால் இந்துக்களின் வேதமே திருக்குறள் என்பது தெளிவாகிறது. ஆரிய- திராவிடம் பேசும் பேயர்களுக்கு அடிமேல் அடி கொடுக்கும் பகுதி இது. ஏனெனில் இங்கே குறிப்பிடும் சடங்குகள் தமிழிலும் ஸ்ம்க்ருதத்திலும் மட்டுமே உளது. பிற்கால நூல்களான சிலம்பு, கம்பராமாயணம் ஆகியவற்றிலும்    உறுதிப்படுத்தப்படுகிறது.)

 

3-92 நாய்களுக்கும், புலையர்களுக்கும், பறவைகளுக்கும், புழுக்களுக்குமான உணவை தூவ வேண்டும்

 

(பறவைகள், நாய்கள், புழுப்பூச்சிகளுக்கும் தினமும் உணவு தரவேண்டும் என்பது உலகில் எங்கும் காணாத அற்புத பண்பாடு. “காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று பாரதியைப் பாட வைத்த பாட்டு)

 

3-93 இவ்வாறு  பித்ரு தேவதைகளுக்கும் பூதங்களுக்கும் பலி கொடுக்கும் பிராஹ்மணன் மஹத்தான சக்தி பெற்று நேரடியாக மேல்நிலையை அடைவான்.

3-94 இவ்வாறு தேவதைகள் பூதங்களுக்குப் பலி கொடுத்த பின்னர் அவன் முதலில் விருந்தினருக்குச் சோறு படைக்க வேண்டும்; பின்னர் பிச்சை எடுப்போருக்கும், வேதம் படிக்கும் ஒரு பிரம்மச்சாரிக்கும் அன்னம் இட வேண்டும்

3-95 இவ்வாறு செய்யும் ஒரு கிரஹஸ்தன் (இல்வாழ்வான்) குருவுக்கு கோ (பசு மாடு) தானம் செய்த புண்ணியத்தை அடைவான்.

 

(ஆரிய திராவிடம் பேசும் அயோக்கியர்களுக்கு செமை அடி கொடுக்கிறது இந்தப் பாடல்.  உலகில் இப்படி பலி கொடுக்கும் வழக்கமோ அல்லது தானம் செய்யும் பண்பாடோ எங்குமிலை. அது மட்டுமல்ல; வேதங்கள் கோ தானம் பற்றி இந்துக்கள் பேசுகையில் ஏனையோர் பசுக்கொலை செய்து அதை நாள்தோறும் உண்ணுகின்றனர்)

 

3-96 வேதத்தை நன்கு கற்ற ஒருவருக்கு   தட்சிணையோ அல்லது மந்திரம் ஜபிக்கப்பட்ட ஒரு சொம்பு தண்ணீரையோ தர வேண்டும்

 

3-97 வேதம் படிக்காதவர்களுக்கு அளிக்கும் தானம் வீண்; வேதம் படிக்காதவர் செய்யும் கருமங்களும் வீண்.

3-98 படித்த, தவம் இயற்றிய பிராஹ்மணனாகிய அக்னியில் இடப்படும் ஆகுதி ஒருவனை கெட்ட தலை விதியிலிருந்தும், பெரும்  பாபங்களிலிருந்தும் விடுவிக்கும்.

விருந்தோம்பல்

3-99 தானாக வந்த ஒரு விருந்தாளிக்கு முதலில் ஆசனம், தண்ணீர் தந்து நன்கு, திறமைக்குத் தக,  சமைக்கப்பட்ட உணவு பரிமாறவும்

 

3-100 ஒரு விருந்தாளியைக் கவனிக்காவிடில், அவர் அந்த வீட்டிலுள்ள எல்லாப் புண்ணியங்களையும் எடுத்துச் சென்று விடுவார்.

அன்பான வார்த்தைகள்!!!

3-101 வந்த விருந்தாளிக்கு பாய், தங்கும் இடம், தண்ணீர், அன்பான வார்த்தைகள் — ஆகிய நான்கும் அளிக்கப்படும் இடம் நல்லவரின் வீடு ஆகும்

3-102 ஒரு நாள் தங்குபவரே விருந்தாளி; அதனால்தான் அவரை அதிதி என்று அழைக்கிறோம் அநித்ய ஸ்தித ( நிலையாகத் தங்காதவர்) என்பதே அ+திதி= அதிதி ஆகியது.

3-103 ஒரே கிராமத்தில் வசிப்பவன் இல்லறத்தான் வீட்டுக்கு வந்தால் அவன் விருந்தாளி அல்ல.

3-104 யாராவது ஒருவன் முறை தவறி விருந்து உண்டால், அந்த முட்டாள் அடுத்த ஜன்மத்தில் விருந்து கொடுத்தவன் வீட்டில் மாடாகப் பிறப்பான்.

3-105 மாலையில் வந்த ஒரு விருந்தாளியை திருப்பி அனுப்பக்கூடாது. அந்த நேரத்தில் வந்தான், இந்த நேரத்தில் வந்தான் என்று சாக்குப் போக்குச் சொல்லாமல் வீட்டில் தங்க வைத்து சோறு போட வேண்டும்

3-106 விருந்தாளிக்குப் போடுவதையே அவனும் உண்ணவேண்டும். யார் ஒருவன் விருந்தினரைக் கவனிக்கிறானோ அவன் புகழ், செல்வம்,  நீண்ட ஆயுள், சொர்க்கத்தில் இடம் ஆகியன பெறுகிறான்.

 

3-107 விருந்தினரின் தகுதிக்கு ஏற்ப உயர்ந்த, நடுத்தரமான, கடைத்தர வசதிகளை அளிக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஆசனம், நல்ல படுக்கை, நல்ல அறை, நல்ல பிரிவுபசாரம் ஆகியன கொடுத்தேயாக வேண்டும்

3-108 விஸ்வே தேவர்களுக்கு அளித்தபின்னர் வேறு ஒரு விருந்தாளி வந்தால் அவரையும் உபசரிக்க வேண்டும்.

 

3-109 குலம், கோத்திரம் சொல்லி உணவு பெறுதல் கூடாது; அப்படிச் சொல்லி பெறும் உணவானது வாந்தி எடுத்த உணவை சாப்பிடுவதற்கு சமமாகும்.

3-110  ஒரு அரசன், பிராஹ்மணன் வீட்டுக்கு வந்தால், அது விருந்தினர் வந்ததாகப் பொருள் கொள்ளலாகாது. அதே போலத்தான், குரு, வைஸ்யன், சூத்திரன், உறவினர், நண்பர் வருகையும்.

 

3-111 ஒரு க்ஷத்ரியன் வந்தால், அவன் சாப்பிட விரும்பினால், பிராஹ்மண போஜனம் முடிந்தவுடன் விருந்து படைக்கலாம்.

3-112 அதே போல வைஸ்யர்களோ சூத்திரர்களோ வந்தால் வீட்டிலுள்ள மற்றவர்களோடு அவர்களுக்கும் கருணையின் அடிப்படையில் விருந்து தரலாம்.

3-113 நண்பர்கள் வந்தால் அவர்களுக்கும் நல்லெண்ண அடிப்படையில் உணவு பரிமாறலாம்.

3-114 விருந்தினருக்கும் முன்னதாக, புதுமணத் தம்பதிகளுக்கும், கர்ப்பவதிகளுக்கும், சின்னப் பெண்களுக்கும், நோயளிகளுக்கும் விருந்து அளிக்கலாம்.

3-116 பிராஹ்மண விருந்தினர், குடும்பத்தினர், குடும்பத்தைச் சேர்ந்தார் எல்லோரும் சாப்பிட்ட பின்னர்தான் இல்லறத்தானும் மனைவியும் சாப்பிடலாம்.

 

3-117 தேவர்கள், ரிஷி முனிவர்கள், மனிதர்கள், முன்னோர்கள், வீட்டிலுள்ள (இல்லுறை) தெய்வங்கள் ஆகியோருக்கு விருந்து கொடுத்த பின்னர் மிச்சம் மீதியை இல்லறத்தான் சாப்பிடலாம்.

3-118  தனக்கு மட்டுமே சமைப்பவன், தவற்றைப், பிழையை உண்பவன் ஆவான்.  வேள்விக்குப் பின்னர் மிஞ்சிய உணவே நல்ல மனிதர்களின் உணவு.

 

(இந்தக் கருத்து பகவத் கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது.)

 

3-119 ஓராண்டுக்குப் பின்னர் வரும் அரசன், புரோகிதன், குரு, நெருங்கிய நண்பன், வேதம் படித்தவன், தாய் மாமன், மாமனார் ஆகியோருக்கு மதுபர்க்கம் (தேன்+ பால்) கொடுத்து மரியாதை செய்க.

3-120 யாகம் செய்யும்போது அரசனோ வேதம் அறிந்த புரோகிதனோ வந்தால் அவருக்கும் மதுபர்க்கம் கொடுக்கவும்.

 

எனது கருத்து

விருந்தாளி யார்?

ஒரு நாளைக்கு மேல் தங்குபவன் விருந்தாளி அல்ல. ஒரே கிராமத்தைச் சேர்ந்தவனோ விருந்தாளி அல்ல; பலனை எதிர்பார்த்துக் கொடுத்தால் அதைச் சாப்பிடவனும் விருந்தாளி அல்ல;  நான்கு ஜாதிக் காரர்களும் விருந்தாளியாக வரலாம் – இப்படிப்   புரட்சிகரமான கருத்துக்களை வீசி ஆரிய-திராவிடப் பேய்மானிகளின் கன்னத்தில் அறை மேல் அறை , வைக்கிறான் புரட்சி வீரன் மநு. உலகம் கானாத புதுமை இது; வெளி நாட்டார் அறியாத போற்றாத பண்பு இது. பாரத மண்ணில் தோன்றி பாரத மண்ணில் வளர்ந்த சமதர்மக் கருத்து இது!

 

மநு சொல்லும் மேற்கூறிய முறைகள் எங்கும் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. ஆக அவன் ரிக் வேத காலத்தவன் என்பது இதனாலும் சரஸ்வதி நதிக் குறிப்புகளினாலும் சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை மநு சொல்லாததாலும் வெள்ளிடை மலை என விளங்கும்; இதனால்தான் இவனை ஹமுராபிக்கும் (கி.மு.)2600 முந்தியவன் என்று யான் செப்புகிறேன்.

 

வெள்ளைக்கார அரை வேக்காடுகளும் மார்கஸீயப் பிதற்றல் பேர்வழிகளும் ஆரியப் பூச்சாண்டியைக் கிளப்பி, வேத கால ஹிந்துக்கள் வெளிலியிலிருந்து வந்ததாக விளம்புவர். அப்படிப்பட்ட பேர்வழிகள் இது போன்ற ஆயிரக்கணக்கான விஷயங்களுக்கு ஒரு ஆதாரத்தையும் இந்தியாவுக்கு வெளியில் காட்டவும் முடியவில்லை. மேலும் பல நூறு விஷயங்கள் தமிழ் வேதமான திருக்குறளிலும், பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்திலும் காணப்படுவதால் கயவர்களின் வாதம்– பிடிவாதம்– தூள் தூளாகப் போகின்றது.

ஓராண்டுக்குப் பின்னர் வருவோருக்கே சிறப்பு மரியாதை, தனக்கு மட்டுமே சமைப்பவன் பாவி என்ற கருத்து ஆகியன புரட்சிவீரன் என்ற பட்டத்தை மநுவுக்கு அளிக்கும்.

( விருந்தோம்பல் என்னும் பண்பைப் போற்றாத ஸம்ஸ்க்ருத, தமிழ் நூல்கள் இல்லை. இதனால் புண்ணியம் கிடைக்கும் என்பதையும் இரு மொழியும் இயம்பும். இப்படிப்பட்ட ஒரு பண்பு வேறு எந்த மத நூலிலும் கிடையாது இந்தியாபில் இந்துக்களாகப் பிறந்து புதிதாகக் கிளைவிட்ட சமண, பௌத்த, சீக்கிய மதங்களில் மட்டுமே இருக்கும். வெளிநாட்டில் இந்தப் பண்பு போற்றப்படாததால் ஆரிய- திராவிட போலி வாதம் மூச்சுத்திணறி சாகும். மநு ஸ்ம்ருதியில் இடைச் சொருகலாக வந்த 40 ஸ்லோகங்களை மட்டும் வைத்துக்கொண்டு கூச்சல் போடும் மார்கஸீயங்களும், திராவிடங்களும், மதப் பிரசாரகர்களும் விருந்தோம்பல் பண்பு வேறெங்கும் இல்லாதது கண்டு திணறிப் போகிறார்கள். சீதையும் கண்ணகியும் வந்த விருந்தினரைக் கவனிக்கும் வாய்ப்பு இல்லையே என்று வருந்துவதை வால்மீகி ராமாயணமும் சிலப்பதிகாரமும் செப்பும்.

 

மஹா பாரதத்தின் அடிப்படையே விருந்தோம்பல்தான்; விருந்தோம்பல் மூலம் கிடைத்த வரங்களால், குந்தி,  பஞ்ச பாண்டவரைப் பெற்றாள். புராணங்களிலும் அதையடுத்து வந்த கதைகளும் அன்ன தானச் சிறப்பை விதந்து ஓதும்.

வெளிநாட்டுப் பிடாரிகளுக்கு அடிமேல் அடி கொடுத்து ஆரிய-திராவிட வாதக் கயவர்களைக் குழி தோண்டிப் புதைக்கிறது மநு தர்ம சாஸ்திரத்தின் மூன்றாம் அத்தியாயம்!!

தொடரும்…………….

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: