இந்தியா 250,000 ஆண்டு பழமையானது (Post No.5146)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 25 JUNE 2018

 

Time uploaded in London –  15-11 (British Summer Time)

 

Post No. 5146

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

இந்தியாவின் வரலாற்றை அழகாக தேதி வாரியாக பட்டியலிட்டுள்ளார்  ஆசிரியர்—ஜார்ஜ் பௌர்ஸ்டேய்ன். இந்த ஆசிரியர் 14 வயதான போது ஒருவர் பால் ப்ரண்டன்  (A Search in Secret India by Paul Brunton) எழுதிய ‘மர்ம இந்தியாவில் ஒரு தேடுதல்’ என்ற புஸ்தகத்தை ஒருவர் பரிசளித்தார். அது முதல் ரமண மஹரிஷி போன்ற இந்தியப் பெரியோர்களின் ஆன்ம தேடுதல் பணியில் நாட்டம் கொண்டு யோகம் பயின்றார். அமெரிக்காவில் இவரது யோகா ஆராய்ச்சிக் கழகம் உளது. பல நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவின் புராதன வரலாறு குறித்து கிடைத்துள்ள பல புதிய தகவல்களைச் சேகரித்து நமது பழமை கி.மு 8000 என்று நிரூபித்துள்ளார்.

கி.மு 250,000 – இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய மனிதர் தடயங்கள்

 

40,000- மத்திய இந்தியாவில் பிம்பெட்கா முதலிய இடங்களில் மக்கள் வரைந்த ஓவியங்கள்

 

கி.மு. 8000 – 5000 ஸரஸ்வதி- சிந்து நதி தீர நாகரீக இடங்கள் கார்பன் கணக்கீடுகள் கி.மு 8000 என்று காட்டுகின்றன. ஆப்கனிஸ்தான் மெகர்காரில் தெளிவான தடயங்கள் உள.

கி.மு 3000 பாலகோர், ஹக்ரா, அம்ரி முதலிய இடங்களில் ஹரப்பா நகர நாகரீகத்துக்கு முந்திய கிராமங்கள்.

 

 

கி.மு 4000- 2000 – ரிக் வேதம், பின்னர் மற்ற மூன்று வேதங்கள், அதையடுத்து புராணங்களின் தோற்றம்.

 

ரிக் வேத தேதியைக் கணக்கிட அதிலுள்ள வானியல் குறிப்புகள் உதவுகின்றன.

மநு வைவஸ்வதர் (கி.மு.3100) எனப்படும் முதல் மநு, சப்த ரிஷிகள், சூர்ய வம்ச- இக்ஷ்வாகு அரசாட்சி துவக்கம்.

 

 

கி.மு-3210 வேனன் என்னும் கொடுங்கோலனை மந்திரங்கள் மூலம் ரிஷிகள் கொன்ற ஆண்டு; முதல் மன்னன் பிருது ( பிருத்வீ= பூமியின் பெயர்க் காரணம்)

 

பிப்ரவரி 18, 3102 கலியுகம் துவக்கம்

.

கி.மு 3000 ஸரஸ்வதி- சிந்து நதி நகரங்கள் உருவாதல்- மொஹஞ்சதாரோ, ஹரப்பா

 

2950– எகிப்தில் முதல் மன்னர் ஆட்சி துவக்கம்

 

 

2600-1900 சிந்துவெளி நகரங்களின் ஆட்சி

 

2600- 1400 யாக யக்ஞங்கள் பற்றிப் பேசும் பிராஹ்மண இலக்கியம் உருவாதல்.

 

2510- சகர மன்னர்- கபில முனி காலம் ரிக் வேதம் சொல்லும் பிரதர்தனன், திவோதஸன் காலம்

 

2450- பரத மன்னன் (பாரதம் எனப் பெயர் காரணம்) ஆண்ட காலம்

 

2371- 2316 பாபிலோனியாவை ஆண்ட ஸர்கோன், இந்திய சகர மன்னன் என்று வாடல் (Waddel)  கூறுகிறார். (Sargon of Babylonia= Sagaera of India)

2050– தஸரதன் ஆட்சி, ராமர் காலம், இலங்கையில் ராவணன் ஆட்சி

1970– சுதாஸ் எனப்படும் ரிக் வேத மன்னன் காலம்

 

 

1900- ஸரஸ்வதி நதி வறண்ட காலம்; ரிக்வேத மன்னன் துர கவசேயன் காலம்

 

1550– ரிக் வேத மன்னன் தேவாபி காலம்- இதுதான் ரிக்வேதத்தின் கடைசி துதி

1500 –பாரத யுத்தம்- மஹா பாரத யுத்த காலம்

 

கி.மு.570 பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் குறிப்பிடப்படும் கடைசி ஆசிரியர் பௌதிமசிபுத்ர. அவருக்கு முன்னர் 50 ஆசிரியர்கள் 1000 ஆண்டுகளுக்கு  உபநிஷத்தைப் பரப்பினர்.

 

563-483 கௌதம புத்தர்- புத்த மத ஸ்தாபனம்

 

550 ஆஜீவக மதப் பிரிவு- ஸ்தாபகர் கோசால மாஸ்கரிபுத்ர + பாணினி+ கானட முதலியோர் காலம்

 

கி.மு 500-400 பகவத் கீதையின் புது வடிவம்

அலெக்ஸாண்டருக்கு முன்னதாக இந்தியாவில் 138 அரசர்கள் ஆண்டதாக கிரேக்கர்கள் எழுதி வைத்துள்ளனர்

 

–SUBHAM–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: