காந்திஜி : ஹரிலால், மணிலால்! (Post No.5148)

Written by S NAGARAJAN

 

Date: 26 JUNE 2018

 

Time uploaded in London –   7-00 AM (British Summer Time)

 

Post No. 5148

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

காந்திஜி : ஹரிலால், மணிலால்!

 

ச.நாகராஜன்

1

மஹாத்மா காந்திஜியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். உபசார வார்த்தைகளுக்காக சொல்லப்படும் கூற்று அல்ல இது. உண்மையிலேயே உலகமே கண்டிராத அளவு அவர் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில் அவரது சத்தியத் தேடல்கள், இறைவனுடன் பேசியது, உள்ளிருந்து எழுந்த குரலின் வாயிலாக தேச மக்களை உரிய வழியில் நடத்தியது, அந்தரங்கம், தவறுகள், ஒப்புதல்கள், முதலிய அனைத்தும் அடங்கும்.

 

அற்புதமான ஒரு சரித்திரம் மஹாத்மாவின் சரித்திரம்.

அவரின் வாழ்க்கையில் இணைந்து பிணைந்த அவரது மகன்களின் வாழ்க்கையும் கூட இதனால் திறந்த புத்தகம் ஆனது.

 

இது அவர்களை சற்று சங்கடப்படுத்தியது என்னவோ உண்மை!

 

அனைவருமே மஹாத்மா ஆக முடியாது, அல்லவா!

ஹரிலால் ஒரு சமயம் காந்திஜியிடம் கூறினார் இப்படி: “எல்லோருக்கும் தெரியும்படி இப்படிக் கண்டிப்பதை விட எங்களைத் தனியே கூப்பிட்டு பிரம்பால் அடிக்கலாம்

(Harilal remarked to Gandhi later in life that instead of “reprimanding us publicly–we would have preferred if you caned us privately” (p. 109 of the book – Gandhi’s Prisoner?: The Life of Gandhi’s Son Manilal).

 

 

ஹிந்து காந்தியாக இருந்த சனாதனி காந்தி ஹிந்து மதத்தின் பால் ஆழ்ந்த பற்று கொண்டவர். சிறந்த ஹிந்துவாக அவர் விளங்கியதாலேயே அவர் இதர அனைத்து மதங்களையும் சமமாக ஒப்புக் கொண்டார்.

 

     அவரது மகனான ஹரிலால் (1888 -1948) திடீரென்று இஸ்லாமிற்கு மாறி அப்துல்லா ஆனார்.

இதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை; ஒப்புக் கொள்ளவும் இல்லை.

 

இப்படி மதம் மாறுவது அவரது பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு ஆகாது என்று அவர் நம்பினார். அவர் சென்றதால் ஹிந்து மதத்திற்கு ஒரு நஷ்டமும் இல்லை; அவரை இஸ்லாமில் சேர்த்தது உண்மையில் பலஹீனமான ஒன்று என்று அவர் எழுதினார். சுத்தமில்லாத ஹ்ருதயம் உள்ள ஒருவன் மதம் மாறினால், அது கடவுளையும் அவனது மதத்தையும் மறுத்தது போல ஆகும் என்றார் அவர். எனது முஸ்லீம் நண்பர்களை நான் கேட்டுக் கொள்வது, அவர்கள் அவரது கடந்த காலத்தை

 

சோதித்துப் பார்க்கட்டும், அப்போது இந்த மதமாற்றம் ஆன்மா இல்லாத ஒன்று என்று அவர்களுக்குத் தெரிய வந்தால் அதை அப்படியே அவரிடம் சொல்லி அவரைத் துறந்து விட வேண்டும் என்பது தான் என்றார் அவர்.

 

அவரது எழுத்தை அப்படியே கீழே பார்க்கலாம்:

The statement issued to the Press on 2-6-1936, under the title “To My Numerous

Muslim Friends”, regarding Harilal’s conversion to Islam, was published in Harijan.

 

“Harilal’s apostasy is no loss to Hinduism and his admission to Islam is a source of

weakness to it if, as I apprehend, he remains the same wreck that he was before.

“Surely conversion is a matter between man and his Maker who alone knows His

creatures’ hearts. And conversion without a clean heart is, in my opinion, a denial of

God and religion. Conversion without cleanness of heart can only be a matter for

sorrow, not joy, to a godly person.

 

“My object in addressing these lines to my numerous Muslim friends is to ask them to

examine Harilal in the light of his immediate past and, if they find that his conversion is

a soulless matter, to tell him so plainly and disown him and if they discover sincerity in

him to see that he is protected against temptations so that his sincerity results in his

becoming a godfearing member of society. Let them know that excessive indulgence has

softened his brain and undermind his sense of right and wrong, truth and falsehood. I

do not mind whether he is known as Abdulla or Harilal if, by adopting one name for the

other, he becomes a true devotee of God which both the names mean.”

 

 

From :- ‘The Collected Works of Mahatma Gandhi’, published by Publication Division, Govt, of India.

Volume 63- Page no 7

பின்னால் கஸ்தூரிபாவின் வேண்டுகோளுக்கிணங்க மணிலால் தாய்மதம் திரும்பினார்.

2

காந்திஜியின் இன்னொரு புதல்வர் மணிலால். (1891 – 1956). அவரது வாழ்க்கை வரலாற்றை அவரது பேத்தி துபேலியா மெஸ்திரி எழுதியுள்ளார். (Uma Dhupelia-Mesthrie. Gandhi’s Prisoner?: The Life of Gandhi’s Son Manilal. Cape Town: Kwela Books, 2005. 419 pp. $27.00 (cloth), ISBN 978-0-7957-0176-4.). அவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெஸ்டர்ன் கேப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார்.

அவர் எழுதியுள்ள நூலில் தனது தாத்தாவைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார்.

மணிலால் ஃபாத்திமா கூல் என்ற பெண்ணை மணக்க விரும்பினார். ஆனால் காந்திஜியோ ஒரு முஸ்லீம் பெண்ணை மணிலால் மணப்பதை விரும்பவில்லை.

ஒரு உறையில் இரு கத்திகள் இருப்பது போல ஆகும் என்று அவர் கூறினார்.

இளம் வயது பாலினக் கவர்ச்சியிலிருந்து விடுபடு என்று அவர் மணிலாலுக்கு புத்திமதி கூறினார். மணிலால் பிரம்மசாரியாகவே இருக்கலாம் என்றார் காந்திஜி. ஆனாலும் மணிலால் தனது 34ஆம் வயதில் மணம் புரிந்து கொண்டார். ஆனால் மணப்பெண் வீட்டார் பார்த்த பெண் தான். 19 வயதான சுசீலா மஸ்ருவாலாவை அவர் மணந்தார். அவரும் பனியா தான். மணப்பெண்ணின் தந்தை காந்திஜியைப் பின்பற்றுவர்; பெரிய செல்வந்தர்.

மணிலாலின் பேத்தி புத்தகத்தில் தரும் செய்திகள் இவை: புத்தகத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அப்படியே பார்க்கலாம்.

Gandhi’s influential hand was also evident in Manilal’s decision to marry. He had wanted to marry Fatima Gool, a Muslim from the Cape, but Gandhi objected because she was not Hindu: “it will be like putting two swords in one sheath” (p. 175). This seems anomalous considering that Gandhi had brought up his children to believe all religions equal. However, the boys were “shaped primarily by Hinduism” even though Gandhi respected all religions (p. 40). Gandhi was concerned about the impact the marriage would have on Hindu-Muslim relations in India. He warned Manilal that if he proceeded with the marriage he would have to stop editing Indian Opinion and would not be able to return to India. Gandhi advised Manilal to get over the “infatuation” and “delusions” of love: “our love is between brother and sister. Whereas here the main urge is carnal pleasure” (p. 176). Whatever Manilal might have felt, “in the end, though, he could not forget whose son he was. He did not have the courage to face the consequences of defiance; there really was no future without his father’s blessing” (p. 176). Gandhi implored Manilal to remain celibate, but on this issue Manilal disagreed with his father and married in 1927, at the age of thirty-four. However, his wife was chosen by Gandhi. She was nineteen-year-old Sushila Mashruwala, also of the bania caste and daughter of a wealthy property-owner and fervent Gandhi supporter (p. 183).

3

காந்திஜி தனது வாழ்க்கையில் ஒரு அற்புதமான ஹிந்துவாகவே வாழ்ந்தார். ஆதர்ச ஹிந்துவாக இருந்தார்.

தனது மகன்கள் இஸ்லாமிற்கு மதம் மாறவும் அவர் விரும்பவில்லை; அங்கிருந்து ‘பெண் எடுக்கவும் அவர் அனுமதிக்கவில்லை.

‘எல்லா மதமும் சம்மதம்; அதற்காக எனது மதத்தை இழிவு படுத்தி மற்ற மதங்களின் பால் எனக்குள்ள மரியாதையைக் காண்பிக்க முடியாது என்பதை அவர் வாழ்க்கை தெரிவிக்கிறது.

இன்றைய போலி செகுலரிஸவாதிகள் நம்மை நோக்கிக் கூறுவது, ‘மைனாரிடி என்ன செய்தாலும் அது சரி என்று கூறு; உனது சொந்த மதத்தை அடிக்கடி இழிவு படுத்தி நீ மைனாரிடிகளுக்கு நல்லவன் என்பதை நிரூபி என்பதைத் தான்.

காந்திஜியின் கொள்கைகளுக்கு நேர் விரோதிகள் இவர்கள் என்பதை அனைவரும் உணர்ந்தால் போதும், அது பாரத தேசத்திற்கு நல்ல நாளாக அமையும்!

***

 

 

 

 

 

Comments are closed.
%d bloggers like this: