அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி………Part 2 (Post No.5192)

Written  by London swaminathan

 

Date: 7 JULY 2018

 

Time uploaded in London –  15-58 (British Summer Time)

 

Post No. 5192

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

கட்டுரையின் முதல் பகுதியில் மிதிலை நகரம் பற்றிய சில கதைகளைக் கண்டோம். இப்போது மேலும் பல  சிறப்புகளைக் காண்போம்:-

 

மிதிலை, விதேஹ என்ற பெயர்களுடன், திரபுக்தி (இப்போது திர்ஹுத் மாவட்டம்) முதலிய பெயர்களும்

இந்தப் பகுதிக்கு உண்டு.

பீமனும் அர்ஜுனனும் கிருஷ்ண பகவானுடன் இந்திரப் பிரஸ்தம் (டில்லி) நகருக்குச் சென்று விட்டு ராஜக்ருஹம் நகருக்குத் திரும்புகையில் இங்கே வந்தனராம். கர்ண மாமன்னன் தனது திக் விஜயத்தில் மிதிலையையும் வென்றானாம். இதெல்லாம் மாபாரதச் செய்திகள்.

 

உலகிலேயே நீண்ட காவியமான மஹா பாரதத்திலுள்ள ஒரு வரி  மிகவும் பிரபல்யமானது.

 

காவலர்கள் ஓடோடி வந்து மன்னர் மன்னவா! மிதிலை நகரம் எரிந்து கொண்டிருக்கிறது என்று கூச்சலிட்டனராம். வேதப் பொருளை வினவிக் கொண்டிருந்த மாமன்னன் தத்துவ வித்தகன் ஜனகன் சொன்னானாம்:

 

“மிதிலாயாம் ப்ரதீப்தாயாம் நமே தஹ்யதி கிஞ்சன”–

“இதில் எரிவதில் என்னுடையது என்றும் எதுவும் இல்லை!” —

என்று அவர் விடை இறுத்தாராம்.

 

அவ்வளவு உயர் நிலையை அடைந்த ஜீவன் ஜனகன்.

 

ராமன் நடந்தே சென்றான்!

ராமாயணத்தில் ஒரு சுவையான செய்தி உண்டு. அயோத்தி நகரிலிருந்து ராம லக்ஷ்மணர்களை அழைத்துச் சென்ற விஸ்வாமித்ர மஹரிஷி நாலே நாட்களில் மிதிலைக்கு வந்ததாகப் படிக்கிறோம். தற்போதைய அயோத்திக்கும் ஜனக்பூருக்கும் இடையுள்ள தூரம் சுமார் 450 கிலோமீட்டர் (சுமார் 270 மைல்கள்) ராம லக்ஷ்மணர்கள் விசால நகரில் ஓரிரவு தங்கினராம். ஆக ஐந்து நாட்கள் என்றி வைத்துக் கொண்டாலும் அந்தச் சிறுவர்களும் கிழட்டு முனிவரும் ஒரு நாளைக்கு சுமார் 54 மைல்கள் நடந்திருக்க வேண்டும்.

 

ஒரு வேளை குதிரையில் சென்றிருந்தால் இன்னும் அதிகம் பயணித்து இருக்கலாம்!

பெண் கொடுக்க காசி மன்னன் மறுப்பு

 

காசி மன்னன் பிரம்மதத்தன் விதேஹ நாட்டு மன்னனுக்குப் பெண் கொடுக்க மறுத்து விட்டா னாம். அவனுக்கு நிறைய மனைவிகள் உண்டு. என் மகள் சக்களத்தி தொல்லைக்கு உள்ளாவள் என்பதே அவர் சொன்ன காரணம்.

 

 

மிதிலை நகரம் இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் எல்லோருக்கும் பயன்பட்டது. சமண மத்தின் கடைசி தீர்த்தங்கரர் ஆன மஹா வீரர் இந்த ஊரில் 30 ஆண்டுகள் வசித்தார். அவருடைய மாமா பெயர விதேஹ தத்தா. மஹாவீரரின் மாமா சேடகனும் மிதிலையை ஆண்டவர்களில் ஒருவர்.

நாலு புறமும் மார்க்கெட்!

 

மிதிலை பற்றிய தகவல் 2300 ஆண்டுக்கு முந்தைய ஜாதகக் கதைகளில் இருந்தே அதிகம் கிடைக்கின்றன. ராமாயண மஹாபாரத, புராண, சமண சமய நூல்களும் பல தகவல்களைப் பொழிகின்றன.

 

மிதிலை நகரின் நான்கு வாயில்களிலும் நான்கு மார்க்கெட்டுகள் இருந்தனவாம். மக்கள் பொருள்களைக் கொணர்ந்து விற்றனர .விதேஹ நாட்டில் 16000 கிராமங்கள், 16,000 நாட்டியப் பெண்கள், 16,000 கிடங்குகள் இருந்தனவாம் (16000= ஏராளமான)

 

புத்தரின் சீடன் ஒருவன் வண்டிகள் நிறைய பொருட்களை ஏற்றிக் கொண்டு ஸ்ரவஸ்தி நகரிலிருந்து மிதிலைக்கு வந்து பண்டமாற்று வியாபாரம் செய்தான் என்று பௌத்த நூல்கள் பகரும்.

 

ஜனகருக்கு அறிவுரை வழங்கிய  அறிஞர் பெருமக்கள், கோசல, குரு, பாஞ்சால தேசங்களிலிருந்து வந்தனராம் அவர்கள்:

அஸ்வல, ஜரத்கார்வ, அர்த்தபாக கார்கி வாசக்நவி (பெண்), உத்தாலக ஆருணி, விதக்தா, சாகல்ய, கஹோல கௌசிகதேய

 

இதுதவிர பிரஹ்மாயூ என்ற பெயருடைய பிராஹ்மண அறிஞனின் பெயரும் புஸ்தகங்களில் அடிபடுகிறது. அவரை புத்தர் தனது மதத்துக்கு இழுத்தாராம். புத்தரும் புத்தரின் சீடர்களும் மிதிலைப் பெரு நகரில் பேருரை ஆற்றினர்.

அங்கதி என்ற மிதிலை மன்னனுக்கு மூன்று அமைச்சர்கள் உதவினராம்; திருவிழா நாட்களில் அந்நகரம் தேவ லோகம் போலக் காட்சி தந்ததாம்.

சூர்யப்ரக்ஞாப்தி ஜியசத்து என்பவர் மிதிலையை ஆண்டதாகக் கூறுவர். இது கோசல நாட்டின் ப்ரசேனஜித் என்பர் சிலர்.

 

மிதிலை நகரிலிருந்து ஆட்சிபுரிந்த சாதின என்ற அரசன் ஆறு சத்திரங்களைக் கட்டினான். அவற்றில் தினமும் ஆறு லட்சம் துண்டுகள் பரிமாறப் பட்டனவாம்.

 

வேத இலக்கியத்தில் நமீசாப்ய என்பவன் ஆண்டதாக ஒரே ஒரு தகவல் இருக்கிறது.

 

ஜாதக் கதைகள்,சமண, பௌத்த நூல்களில் வரும் மன்னர்களின் பெயர்கள் ஆராய்ச்சிக்குரியது. இந்த மன்னர்களின் பெயர்களை நாம் கேட்டதே இல்லை.

 

நான் ஆங்கிலத்தில் 1500-க்கும் மேலான

அரசர்களின் பெயர்களை வெளியிட்டேன். இந்தியாவை ஆண்ட 3000 அரசர் என்று தலைப்பிட்டு எழுதினேன். ஜாதகக் கதைகள், கதாசரித் சாகரம், விக்ரமாதித்தன் கதைகள் ஆகியவற்றிலுள்ள பெயர்களை எல்லாம் பொறுமையாகத்  தொகுத்தால் 3000 மன்னர்களை விட மிஞ்சிவிடும்!!

 

–சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: