அபூர்வ வைஷ்ணவ ஆசார்யர் ரொனால்ட் நிக்ஸன் (Post No.5222)

Written by S NAGARAJAN

 

Date: 16 JULY 2018

 

Time uploaded in London –   7-14 AM (British Summer Time)

 

Post No. 5222

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அபூர்வ வைஷ்ணவ ஆசார்யர் ரொனால்ட் நிக்ஸன் என்னும் கிருஷ்ண ப்ரேம்!

 

ச.நாகராஜன்

 

பிறப்பால் மேலை நாட்டில் பிறந்தாலும் சிலர் ஹிந்து மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஹிந்து மத ஆசார்யர்களாகவும் வழிகாட்டிகளாகவும் ஆகி மதித்துப் போற்றப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் வைஷ்ணவ ஆசார்யர் ரொனால்ட் நிக்ஸன் என்னும் கிருஷ்ண ப்ரேம்!

 

ரொனால்ட் ஹென்றி நிக்ஸன் இங்கிலாந்தில் செல்டன்ஹாம் என்ற இடத்தில் பிறந்தார். (தோற்றம் 10-5-1898 மறைவு 14-11-1965).

18ஆம் வயதில் முதல் மகா யுத்தத்தில் அவர் பிரிட்டிஷ் ஃபைட்டர் பைலட்டாக பணியாற்றினார். மரணத்தின் விளிம்பிலிருந்து ஏதோ ஒரு அற்புத சக்தியால் தப்பினார். போர் முடிந்த பிறகு கேம்பிரிட்ஜில் கிங்ஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார். அத்துடன் பல்வேறு மதங்கள் பற்றியும் அறிந்து கொண்டார். பாலி,சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல பாஷைகளில் வல்லுநர் ஆனார். 1921இல் இந்தியா வந்த நிக்ஸன் லக்னௌ பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பணியை மேற்கொண்டார்.

 

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஞானேந்திர சக்ரவர்த்தி ஒரு ஆன்மீகவாதி. அவரது மனைவி மோனிகா தேவி உலக வாழ்வைத் துறந்து வைஷ்ணவத்தில் பற்று கொண்டு அதைப் பின்பற்றலானார். அவரது பெயர் யசோதா மாயி ஆயிற்று. அவரைக் குருவாக ஏற்றார் நிக்ஸன்.

 

நாளடைவில் அவரும் உலக வாழ்வைத் துறந்தார்; கிருஷ்ண ப்ரேம் என்ற பெயருடன் புகழ் பெற்றார். 1930இல் அல்மோரா அருகில் மிர்டோலா என்ற இடத்தில் யசோதா மாயியும் சிஷ்யர் கிருஷ்ண ப்ரேமும் ஒரு ஆசிரமத்தைத் துவங்கினர். ஏராளமான சிஷ்யர்கள் அவர்களைப் பின்பற்றலாயினர்.

 

தனது ஆசிரமத்திலேயே பெரும்பாலும் கிருஷ்ண ப்ரேம் தங்கினாலும் ஒரு முறை அவர் தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டார்.

 

ரமண மஹரிஷியைத் திருவண்ணாமலையில் தரிசித்தார். அவரைப் பற்றி ரமணர்,”கிருஷ்ணப்ரேம் ஞானியும் பக்தனும் இணைந்து சேர்ந்த ஒரு அபூர்வமானவர்” என்று கூறினார்.

ரமணர் ஹாலில் தனது இருக்கையில் அமர்ந்திருக்க உள்ளே நுழைந்த  கிருஷ்ணப்ரேம் மௌனமாக அமர்ந்தார். நீ யார் என்ற கேள்வி அவரைக் குடைய ஆரம்பித்தது. எல்லோரிடமும் உறைந்திருக்கும் கிருஷ்ணரின் பணியாளன் என்று மனதிற்குள் சொன்னார். ஆனால் அந்தக் கேள்வி அவரைத் தொடர்ந்து கொண்டே இருக்க ஹாலை விட்டு வெளியேறினார்.

மறு நாள் காலை மௌனமாக உள்ளே வந்து அமர்ந்த அவர் ரமணரைப் பார்த்து மனதிற்குள்ளாகவே, “ நீங்கள் யார் என்று நான் கேட்கலாமா?” என்றார். அடுத்த கணம் கண்ணைத் திறந்து அவர் பார்த்த போது ரமணரின் இருக்கை காலியாக இருந்தது. காற்றில் கலந்தது போல அவரைக் காணோம். அடுத்த கணம் அவர் மீண்டும் இருக்கையைப் பார்த்த போது அவர் இருக்கையில் இருந்தார். அவரின் உதட்டோரத்தில் ஒரு சிரிப்பு தவழ்ந்தது. அவர் உண்மையின் சொரூபம், பாடலுக்கு அப்பாற்பட்ட மோனம் என்பதை கிருஷ்ண ப்ரேம் உணர்ந்தார்.

 

பாண்டிச்சேரி சென்ற கிருஷ்ண ப்ரேம் மஹரிஷி அரவிந்தரையும் அன்னையையும் தரிசித்தார்.

 

மஹரிஷி அரவிந்தர் கிருஷ்ணப்ரேமைப் பற்றிக் கூறும் போது “அவரிடம் ‘seening intellect’ இருப்பதாகத் தெரிவித்தார்.

அரவிந்தர் திலிப்குமார் ராய்க்கு எழுதிய கடிதத்தில் கிருஷ்ண ப்ரேமின் கடிதங்களில் உண்மையின் ஆதாரம் தெரிவதாக எழுதினார்.

 

(“It is a great refreshment to read the letters of Krishna Prem; one feels here a stream from the direct sources of Truth that one does not meet so often as one could desire. Here is a mind that cannot only think, but see—and not merely see the surface of things with which most intellectual thought goes on wrestling, without end or definite issue, and as if there were nothing else.” –Sri Aurobindo)

 

இந்தியாவைப் பற்றி கிருஷ்ண ப்ரேம் கூறுகையில், “Often while  meditating  I catch myself praying to Krishna that He may never let India’s immemorial soul be swamped by the rational robustious, scientific agnosticism of the blatant West, blurring over a thousand loud speakers : ‘Religion is the opium of the mind’. May He always shower  His blessing on India, whose very dust heaves with latent godliness in whose tiniest crannies mystic faith flowers like green grass-blades through chinks in rocks – India, whose people have only to anoint wayside stones with vermillion to endow them with sanctity. May these remain custodians of the precious heritage of faith in Jagat-pranam as the Bhagavat puts it.”

(Dilip kumar Roy’s quote in his book ‘Yogi Krishnaprem – page 80)

 

 

1965 நவம்பர் 14ஆம் தேதி காலையில் கிருஷ்ண ப்ரேம் தன் உடலை உகுத்தார். தண்டேஷ்வர் என்னுமிடத்தில் இருக்கும் ஒரு சிறு  கோவிலின் அருகில் உள்ள நீரோடை அருகே  அவரது குருவின் உடல் தகனம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது. கிராமவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிருஷ்ண ப்ரேம் பல அரிய நூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றை திலிப் குமார் ராய் எழுதியுள்ளார்.

 

கௌடிய சம்பிரதாய வைஷ்ணவராக வாழ்ந்த கிருஷ்ணப்ரேம் இறுதியாக கூறிய வார்த்தைகள், “My Ship is sailing”.

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: