Written by London swaminathan
Date: 17 JULY 2018
Time uploaded in London – 8-27 AM (British Summer Time)
Post No. 5227
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
தற்காலத்தில் கோர்ட்டுகளில் நடக்கும் விஷயங்களை எழுதவோ ரிகார்ட் செய்யவோ வசதிகள் உண்டு. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், மனிதர்களின் ஞாபக சக்தி ஒன்றே துணை. ஒவ்வொரு வக்கீலும், சட்ட அறிஞரும் உதவிக்கு ஆட்களை வைத்திருப்பர்; அவர்கள் தக்க நேரத்தில் தகுந்த பாயிண்டுகளை எடுத்துக் கொடுக்க, சட்டம் பேசும் அறிஞர்கள் சத்தமாகப் பேசி வெல்லுவர்.
அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஒரு பிரபல வழக்கறிஞர் இருந்தார். அவரிடம் ஸாம் (SAM) எனப்படும் ஒரு கறுப்பின இளைஞன் வேலைக்கு இருந்தான்; அவன் மஹா மேதாவி; எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுவான். இதனால் அந்த வக்கீலின் க்யாதி (புகழ்) தென்பகுதி முழுதும் பரவி இருந்தது.
ஸாம் சொன்னால் நீதிபதியும் கூட அது சரியாகதான் இருக்கும் என்று ஒப்புக்கொள்வார். அவ்வளவு கீர்த்தி!
இது யம தர்ம ராஜாவுக்குப் பிடிக்கவில்லை அவர் சித்ர குப்தனை அனுப்பி ஸாமின் உயிரைப் பறித்து வா என்று அனுப்பினார்.
வழக்கறிஞர் அறையில் ஒரு நாள் ஸாம் வேலை செய்து கொண்டிருந்த போது சித்ரகுப்தன் இருவர் முன்னிலையிலும் தோன்றினான்.
ஏய் யார் நீ? ஏன் இங்கு வந்தாய்? என்று வக்கீல் கேட்டார்.
நான்தான் யம தூதன்; ஸாமின் காலம் முடிந்துவிட்டது; ஆகையால் அவனை அழைத்துச் செல்ல வந்தேன்
வக்கீல்: இதோ பார், ஸாம் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது ஆகையால் போய்விடு.
சித்ரகுப்தன் போகவா? என் பாஸ்(BOSS) ஆர்டர் கொடுத்தால் அதை சிரமேல் கொண்டு முடிப்பது எங்கள் வேலை ஒப்பந்தத்திலேயே உளது; ஆகையால் ஒரு அங்குலமும் நகர மாட்டேன்.
வக்கீல்- அப்படியா? உங்கள் பாஸிடமும் சொல்; இந்த ஸாமுக்கு ஞாபக சக்தி கு
றைந்து போனால் எனக்கு அவனால் கிஞ்சித்தும் பிரயோஜனம் இல்லை; நீ கொண்டு செல்; ஆனால் ஞாபக சக்தி நன்றாக இருந்தால் அவனை நீ கொண்டு செல்லக் கூடாது. உங்கள் ‘ஐயா’விடமும் சொல்லி என் கட்டளையை ஏற்றுக் கொள். நீ அவனை எப்படி வேண்டுமானாலும் சோதித்துக் கொள்.
சித்ரகுப்தன் தன் மானஸீக மொபைல் போன் மூலம் யமதர்ம ராஜனைத் தொடர்பு கொண்டு கட்டளைக்கு ஒப்புக்கொண்டான்
ஸாம் வயலில் உழுது கொண்டிருந்தான். சித்ர குப்தன் ஒரு பேய் வடிவில் வந்து உனக்கு முட்டை பிடிக்குமா? என்றான்
ஸாம்- ஆமாம் பேயே! எனக்கு முட்டை பிடிக்கும்
பேய் வடிவில் வந்த சித்ர குபதன் மறைந்து விட்டான்.
காலம் உருண்டோடியது; அமெரிக்காவில் சுதந்திரப் போர் வெடித்தது; ஸாம் முதலில் சிறைப் பிடிக்கப்பட்டான். பின்னர் அவன் எதிர் தரப்பில் சேர்ந்தான். பின்னர் சுதந்திரம் வேண்டும் என்ற தரப்பில் சேர்ந்தான். இப்படிப் பல்லாண்டுகள் உருண்டோட அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது.
வழக்கம் போல ஸாம் நிலத்தை உழுது கொண்டு இருந்தான்.
சித்ரகுப்தன் பேய் வடிவில் தோன்றினான்.
எப்படி வேண்டும்? என்று ஸாமிடம் கேட் டான்.
ஸாம்- பொறித்துக் கொண்டுவா (FRIED, PLEASE! என்றான்
பேய் பறந்தோடிப் போனது.
இந்தக் கதையில் வரும் ஸாம் அமெரிக்காவில் உண்மையில் இருந்தவன் ;அவனது பெருமையை விளக்க இப்படி பேய்க் கதை (DEVIL) ஒன்றை சொல்லுவர்
அக்காலத்தில் நினைவாற்றலுக்கு அவ்வளவு மதிப்பு; மொபைல் போன், ஐ பேட், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் வந்தவுடன் நமக்கு நினைவாற்றல் மழுங்கிப் போய்விட்டது!
-சுபம்-