Written by London swaminathan
Date: 25 JULY 2018
Time uploaded in London – 7-24 am (British Summer Time)
Post No. 5255
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ராம பிரான் 14 ஆண்டுகள் அயோத்திக்கு வெளியே இருந்தார். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து கால் நடையாக இலங்கை வரை வந்தார். புராண கால மனிதர்களில் அதிக தூரம் நடந்து, சாதனைப் புஸ்தகத்தில் முதலிடம் பெற்றார். அவரைப் போல கால் நடையாக நடந்த மனிதர் எவரையும் நாம் அறியோம் . சுமார் 5113 நாட்கள் நாட்டை வலம் வந்தார். அவருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதிசங்கரர் இப்படிப் பலமுறை வலம் வந்தார்
இதோ ராமனின் பயணம் தொடர்கிறது: (முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிப்பது சாலச் சிறந்தது)
20.ஸீதா பஹரி- ரிஷியான் ஜங்கல்
ஸீதையும் ராமரும் இங்கே ஓய்வு எடுத்தனர்
21.ஹனுமன் மந்திர் (முர்கா)
ராமருக்குத் துணையாக அனுப்பப்பட்ட
பரத்வாஜ ரிஷியின் மாணவர்கள் விடை பெற்றுச் சென்றனர்.
22.குமார் த்வய (ராம நகர்)
ராமரும் லக்ஷ்மணனும் குளித்துவிட்டு சிவனை வழிபட்ட இடம்
23.வால்மீகி ஆஸ்ரமம்- லாலாபூர்
மகரிஷி வால்மீகியுடன் சந்திப்பு
24.காமத் கிரி – சித்ர கூடம்- மந்தாகினி நதி
ராமபிரான் இங்கே நீண்ட காலம் தங்கினார்.
25.மாண்டவ்ய ஆஸ்ரமம்
பரதன் புகழ் பாடும் இடம்
26.பரத் கூப் – பரத்பூர்
அத்ரி மஹரிஷியின் உத்தரவின் பேரில், அண்ணனின் பட்டாபிஷேகத்துக்காக தம்பி பரதன், எல்லாப் புனித நீர் நிலைகளிலிருந்தும் ஜலத்தை எடுத்து இங்குள்ள கூவத்தில் ( கிணறு) சேமித்து வைத்தான்.
27.ஸ்படிக சிலா- சித்திரகூடம்
இந்திரனின் மகனான ஜயந்த், காகத்தின் வடிவத்தில்
ஸீதையைத் தாக்கினான்
28.குப்த கோதாவரி -சித்திரகூடம்
ஸீதையின் துணிமணிகளைத் திருடிய மாயாங்கனை, லக்ஷ்மணன் தண்டித்தான்
29.ததி காட்
மந்தாகினி நதி வட்ட வடிவில் ஓடும் அழகிய இடம் (ராமன், ஒரு இயற்கை அன்பன்; அவன் ரஸித்த இயற்கைக் காட்சிகளை வால்மீகியும் ரஸித்து எழுதி இருக்கிறார்)
30.அத்ரி – அனுசுயா ஆஸ்ரமம்
அத்ரி முனிவரையும் அனுசுயையையும் ராமன் சந்தித்த இடம்
31.ஆம்ரவதி
விராடன் என்ற அசுரன் ராம லக்ஷ்மணர்களைத் தாக்கினான்
- விராட்குண்டம் – ஜமுனிஹை
ராம லக்ஷ்மணர்கள், இங்கே விராடனைக் கொன்று புதைத்தனர்.
33.புஷ்கரணி — டிகாரியா
விராடனைக் கொன்ற ரத்தக் கறை படிந்த
ஆயுதங்களையும் துணிமணிகளையும் கழுவிய புஷ்கரணி
34.மார்கண்டேய ஆஸ்ரமம்- மார்க்கண்டி
சிவனை வழிபட்ட இடம்
சதானா மாவட்டத்தில் நுழைகின்றனர்
35.சித்த பஹார்- சதேஹ சாதனா
ரிஷி முனிவர்களின் எலும்புக் குவியல்களில் இருந்து உருவான மேட்டுப் பகுதிகள்
(எனது கருத்து– இது போன்ற இடங்களை விஞ்ஞான முறையில் ஆராய்ந்தால் ராமாயண கால, அதற்கு முந்திய கால முனிவர்களின் காலத்தை துல்லியமாக மதிப்பிடலாம்)
36.சுதீக்ஷண ஆஸ்ரமம்
ராமர், சுதீக்ஷண முனிவரைச் சந்தித்த இடம்
37.சரபங்க ஆஸ்ரமம்- சர்பங்கா
சர பங்க முனிவர் ராம, லக்ஷ்மணர்களைச் சந்தித்தபின்னர், வாழ்க்கையின் பயன் நிறைவேறியது என்று கூறி யோக அக்னியில் புகுந்து ஜோதிமயமான இடம்
38.ஸீதா ரஸோய்
இங்கு ஸீதை அறு சுவை உணவு சமைத்த பின்னர், வனவாஸி சஹோதரர்களை ராமன் சந்தித்து நலம் விசாரித்தான்.
பன்னா மாவட்டத்தில் நுழைகின்றனர் (மத்தியப் பிரதேச மாநிலம்)
- தேவ பஹர் (அஜய் கர்)
ராமனுக்காக சிவன் கோவிலும். வசதியான குகைகளும் எழுப்பப்பட்ட இடம் ( ஏற்கனவே இருந்த குகைகளைச் சுத்தம் செய்து, காற்றோட்டம் உண்டாக்கி, இலை தழை மெத்தைப் படுக்கை உண்டாக்கினர் என்பதே பொருத்தம்- எனது கருத்து)
40.வ்ரிஹஸ்பதி- பஹரி கேரா
தேவ குரு பிருஹஸ்பதி உருவாக்கிய இந்த ஆஸ்ரமத்தில் ராமன், பல ரிஷிகளைச் சந்திக்கிறான். ரிஷிகள் மஹா நாடு என்றும் சொல்லலாம்!
126 மைல் கற்களில் 40 மைல் கற்களைக் கண்டோம். இன்னும் 86 மைல் கற்களையும் காண்போம்
–தொடரும்