மலைக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி (Post No.5261)

Picture shows plastic recycling in Kolkata.

 

Written by S NAGARAJAN

 

Date: 27 JULY 2018

 

Time uploaded in London –   7-15 am (British Summer Time)

 

Post No. 5261

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பப்படும் உரைகளில் இரண்டாவது உரை கீழே தரப்படுகிறது.

 

மலைக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி பற்றிய தகவல்கள்!

அமெரிக்க விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வறிக்கை நம்மை திடுக்கிட வைக்கும் ஒன்றாக அமைகிறது. உலகெங்கும் இதுவரை தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் எவ்வளவு என்பதை ஆராய்ந்து நிர்ணயிக்கப் புகுந்த அவர்கள் அது 8.3 பில்லியன் டன்கள் என்ற மலைக்க வைக்கும் எண்ணைக் கூறியுள்ளனர்.

ஒரு பில்லியன் என்றால் அது நூறு கோடியைக் குறிக்கும். ஆக 830 கோடி டன் பிளாஸ்டிக்கை கடந்த 65 ஆண்டுகளில் நாம் உற்பத்தி செய்திருக்கிறோம்.

இந்த 8.3 பில்லியன் டன்கள் என்பது 25000 எம்பயர் ஸ்டேட் பில்டிங்கைப் போல கனமானது. அல்லது நூறு கோடி யானைகளின் எடைக்குச் சமமானது.

ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பிளாஸ்டிக் பொருள்களை நாம் மிக குறுகிய காலமே பயன்படுத்துகிறோம், பின்னர் தூக்கி எறிந்து விடுகிறோம்.

இவற்றில் 70 சதவிகித பிளாஸ்டிக்  குப்பைகளாக நீரோடைகளிலும் , கடற்கரை உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளிலும், கடலிலும் தூக்கி எறியப்படுகின்றன.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாண்டா பார்பாரா (Santa Barbara) தனது சகாக்களுடன் செய்த ஆய்வை ஸயின்ஸ் அட்வான்ஸஸ் (Science Advances) என்ற இதழில் வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய அளவில் மிகப் பெரிதாக நடத்தப்பட்ட ஆய்வு என்பதால் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது. உலகில் இதுவரை எவ்வளவு பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, அது எந்தெந்த வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எங்கு இறுதியில் தூக்கி எறியப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்தச் சுவையான ஆய்வறிக்கை தருகிறது.

இதன்படி 83000 லட்சம் பிளாஸ்டிக் மூலப் பொருள் இதுவரை உற்பத்தியாகியுள்ளது.

இதில் பாதியளவு கடந்த 13 ஆண்டுகளில் தான்  உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதில் 30 சதவிகிதப் பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களில் 9 சதவிகிதம் மட்டுமே மறு சுழற்சி செய்யப்பட்டுள்ளது. 79 சதவிகிதம் நிலப்பரப்புகளில் எறியப்பட்டுள்ளது. பாக்கிங் செய்யப்படும் பொருள்கள் ஒரு வருடத்திற்குள்ளாகவே பயன்படுத்தப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. நீண்ட காலம் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் என கட்டுமானத்திலும் இயந்திரங்களிலும் பயன்படுத்தப்பட்டவற்றைக் கூறலாம்.

இதே போக்கு நீடிக்குமானால் 2050ஆண்டு வாக்கில் 1200 கோடி பிளாஸ்டிக் பொருள்களின் கழிவை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் என்று பார்த்தால் 2014ஆம் ஆண்டில் ஐரோப்பா 30 சதவிகிதமும் சீனா 25 சதவிகிதமும் அமெரிக்கா 9 சதவிகிதமும் பங்களிப்பைத் தந்துள்ளது.

இந்த அபாயகரமான போக்கை கவனித்து வரும் விஞ்ஞானிகள் நமது பூமியை பிளானட் பிளாஸ்டிக் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறுகின்றனர்.

ஆக பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிரித்து பூமியை பிளானட் எர்த் என்று அழைக்கும் நிலையை ஏற்படுத்துவோமாக!

***

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: