ராமனின் அதிசயப் பயணம்-4 (post no.5265)

WRITTEN by London swaminathan

Date: 28 JULY 2018

 

Time uploaded in London – 13-19  (British Summer Time)

 

Post No. 5265

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

COMPARISION BETWEEN KASHMIR POET KALHANA AND TAMIL POET TIRUVALLUVAR

 

ராம பிரான் நடந்தது 14 ஆண்டுகள்; அதாவது சுமார் 5113 நாட்கள்; சில இடங்களில் பல மாதங்கள் கூட ஓய்வெடுத்தார். உதாரணத்துக்கு மழைக் காலங்களில் காட்டு வழியே நடக்க மாட்டார்கள். ஆகையால் ரிஷி முனிவர்கள் சாதுர் மாஸ்ய விரதம் ( நான்கு மாத நோன்பு) அனுஷ்டிப்பர். ராமனும் அதைப் பின்பற்றியதற்கு சான்று உள்ளது. கிஷ்கிந்தையில் சுக்ரீவனுக்கு நான்கு மாத கெடு விதிக்கிறார். படை திரட்டிக் கொண்டு திரும்பி வா என்று அனுப்புகிறார். அவன் 4 மாதங்கள் ஆகியும் வராததால் லெட்சுமணனை தூது அனுப்புகிறார்.  ஆக, ராமாயணம் நடந்ததை நடந்தவாறு சொல்கிறது.

 

முதல்  மூன்று பகுதிகளில் ராமன் சென்ற இடங்களைக் கண்டோம்; இதோ நாலாவது பகுதி.

 

75.சுதீக்ஷண ஆஸ்ரமம் (ஆகோலா)

முனிவருடன் சந்திப்பு

 

(முன்னரே வேறு ஒரு சுதீக்ஷ்ண ஆஸ்ரமம் குறிப்பிடப்பட்டது. ராமன் மீண்டும் அங்கு சென்றாரா? அல்லது ஒரே முனிவரின் பல ஆஸ்ரமங்களில் இதுவும் ஒன்றா? என்பது குறிப்பிடப்  படவில்லை)

 

76.அகஸ்த்ய ஆஸ்ரமம்

அகஸ்த்ய முனிவருடன் சந்திப்பு.

அகஸ்தியரின் ஆஸ்ரமங்கள் நாடு முழுதுமுள. இது ஒரு கோத்திரப் பெயர் என்பதால் பல முனிவர்கள் அந்தப் பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம்)

 

77.பஞ்சவடி (ஐந்து ஆல மரம்)

கோதாவரி நதிக்கரையில் ஐந்து பெரிய ஆலமரங்கள் உள்ள இடம். நாஸிக் அருகில் உள்ளது. ராவணனின் சஹோதரி சூர்ப்பநகையின் மூக்கை லக்ஷ்மணன் அறுத்த இடம்; ஸீதா தேவியை ராவணன் கடத்திய இடம்.

 

(ராவணன், பருவக்காற்றைப் பயன்படுத்தி பல நதிகள் வழியாகப் பல இடங்களுக்குச் சென்று அட்டூழியம் செய்ததை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளேன் . அசோகனின் குழு ஏழே நாட்களில் இலங்கையிலிருந்து பாட்னாவுக்கு திரும்பி வந்ததை மஹாவம்ஸம் இயம்பும். இதை அறியாத அரை வேக்காட்டு ஆராய்ச்சியாளர் கோதாவரி நதித்  தீவுதான் லங்கா என்று உளறிக்   கொட்டினர்)

 

78.ஸர்வ தீர்த் (கோடி)

ராவணனுடன் சண்டையிட்டு ஜடாயு மாண்ட இடம்; இங்கே ஜடாயுவை ராமன் தஹனம் செய்து ஜல அஞ்சலி (தர்ப்பணம்) செய்தான். (ஜடாயு என்பது கழுகு அல்ல; கழுகை அடையாளமாகக் கொண்ட ஒரு இனம். அவர்களும் மனிதர்களே; வானரர்கள் என்போர், குரங்கு போல முறையற்ற வாழ்க்கை நடத்திய மனிதர்களே. அவர்களுடைய அடையாளம் குரங்கு. இப்பொழுதும் ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் மூக்கு, முகம், வாய் முதலியவற்றை இனம் வாரியாக, வெவ்வேறு வகையில்  சிதைத்துக் கொள்ளும் பழக்கம், கானக வாஸிகள் இடையே உண்டு. அது போலவே வானர இனங்களும்).

  1. சுகல் தீர்த்

சுதீக்ஷண முனிவர் ஆஸ்ரமத்தில் ராமர் ஓய்வெடுத்தார்

 

(இமயம் முதல் குமரி வரை காடுகளில் முனிவர்கள் வசித்ததும் அவர்களுடன் ராமன் தங்கியதும் இதன் மூலம் தெரிகிறது. அமைதியான வாழ்வு நடத்தி, இறைவனை நோக்கி தவம் இயற்றுவதும், கானகப் பொருட்களை- கனி காய், தேன் வரகு அரிசி  — உணவாகப் பயன் படுத்தியதும் தெரிகிறது.)

 

மும்பை வட்டாரம்

 

80.பாலுகேஷ்வர் மந்திர், மும்பை

மணலினால் ராமர் உருவாக்கிய லிங்கம்; இங்கு ராமர் வில்லினால் ஒரு ஊற்று உண்டாகினார். வால்கேஷ்வர் கோவில் என்றும் அழைப்பர்.

 

81.புனே வட்டாரம்

81.ராம் தாரியா

இந்த வழியாக ராமர் தென் திசை நோக்கிப் பயணித்தார்.

82.ராம்லிங் (யட்ஸி)

ராமன் சிவனை வழிபட்ட இடம்

 

83.ஸ்ரீ ராம வர்தாயனி

துல்ஜாபூரில் ராமரை ஸதி மாதா சோதித்துவிட்டு, ஸீதையைக் கண்டுபிடிக்க ஒரு பொருளைக் கொடுத்ததாக ஐதீகம்

 

84.காட் ஷிலா மந்திர் (துல்ஜாபூர்)

ஒரு கல்லில் ஸதி மாதவின் உருவத்தை ராமர் கண்டதாகவும்அவள், ராமனை தெற்கு திசை நோக்கிச் செல்ல உத்த்ரவிட்டதாகவும் ஐதீகம்

 

85, 86 ராமேஷவர் (அதானி), ஜாம் கண்டி ஷிவ் மந்திர்

 

இரண்டு இடங்களும் ராமர் சிவ பூஜை செய்த இடங்கள்

  1. அயோமுகி கௌபா( ராம் த்ர்க்)

தொல்லை கொடுத்த ஒரு அரக்கியின் காதுகளையும், மூக்கையும் லக்ஷ்மணன் அறுத்த இடம்

 

  1. கபந்த ஆஸ்ரமம் (ராம் துர்க்)

கபந்தன் என்னும் அரக்கனை ராமன் கொன்ற இடம்

89.சபரி ஆஸ்ரமம்

காட்டுக்குள் சபரி ஆஸ்ரமம் இருக்கிறது. அவள்  கானகப் பழங்களை இனிக்கிறதா என்று கடித்துப் பார்த்தபின்னர் ராமனிடம் கொடுத்தாள்; அதை ராமன் அன்போடு வாங்கிச் சப்பிட்டான்.

 

90.பம்பாசர் (ஹம்பி- துங்கபத்ரா)

ஸீதையைத் தேடுகையில் ராமன் சென்ற  இவ்விடத்தில் வரிசையாகக் கோவில்கள் இருக்கின்றன.

91.ஹனுமான் ஹல்லி (ஹம்பி)

ராம லக்ஷ்மணர்களை அனுமன் சந்தித்த இடம்.

 

ரிஷ்யமுக பர்வதம்

சுக்ரீவனை சந்தித்த இடம்

 

  1. கந்தமாதன் பஹரி (ஹம்பி)

ஐந்து குரங்குகளைக் கண்ட ஸீதா தேவி தனது ஆபரணங்களைக் கீழே போட்ட இடம் (புறநானூற்றில் இது உள்ளது)

 

94.துங்கபத்ரா சக்ர தீர்த

வாலி- சுக்ரீவன் சண்டையை ராமன் மரத்தின் பின்னால் இருந்து பார்த்த இடம்

 

  1. கிஷ்கிந்தா (ஹம்பி)

வாலியின் தலைநகருக்கு ராமன் வந்தான்

96.பரஸ்ராவன் பர்வத் (ஹம்பி)

 

ராமன் இங்கே 4 மாதங்கள் (சாதுர் மாஸ்ய வ்ரத காலம்/ மழைக் காலம்) தங்கினார்.

97.ஸ்படிக சிலா

ஸீதையைத் தேடுவதற்கான திட்டங்களை அனுமான் அறிவித்த இடம்

98, 99, 100, 101.கர் ஸித்தேஸ்வர் மந்திர், ஹல் ராமேஷ்வர், கூடட் நைலிகர், சோம்வார் பேட்

 

இங்கு ராமன், சிவனை வழிபட்டார்.

இதில் நைலிகேர் என்னும் இடத்தில் தசரதனுக்கு ராமர் திதி கொடுத்தார்– சிரார்த்தம் செய்தார்.

  1. தனுஷ் கோடி (மேலி கௌடி)

வானர சேனை இங்கே காலை உணவு உண்டனர். ராமரின் அம்பு மூலம் ஒரு ஊற்று ஏற்படுத்தப்பட்டது.

 

103, 104, 105- சிவ, விஷ்ணு மந்திர்

மைசூர் மவட்டத்தில் கவி ராயன் பேட்டையில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. இந்த ஊரில் அரக்கன் கவியை ராமன் கொன்றார். ராம நகரில் ஒரு ராமர் கோவில் இருக்கிறது. இது அவர் ஓய்வெடுத்த இடம். இதே போல ராம் மந்திரும் (ராம் நகர்) அவர் ஓய்வெடுத்த இடம். ராவணனின் சஹோதரன் த்ரிசிரா கட்டிய ஊரில் விஷ்ணு மந்திர் உள்ளது.

 

ராமனும் பஞ்ச பாண்டவர்களும் 14, 13 ஆண்டுகள் சஞ்சாரம் செய்ததால் அவர்கள் காலடி படாத இடமே பாரதத்தில் இல்லை. ஆகவே அவர்கள் வந்த வழியெல்லாம் புனிதத் தலமாக மாறியதில் வியப்பொன்றும் இல்லை. மேலும் அவர்கள் மிகப்பெரிய அரசுகளின் பிரதிநிதிகள் என்பதால் அவர்களுக்கு அரசுகளின் மஹத்தான ஆதரவும் மக்களின் மாபெரும் வரவேற்பும் கிடைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை!

–தொடரும்

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: