இயற்கை வளத்தைப் பாதுகாப்போம்! (Post No.5279)

Written by S NAGARAJAN

Date: 2 August 2018

 

Time uploaded in London – 5-48 am    (British Summer Time)

 

Post No. 5279

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலையில் ஒலிபரப்பிய சுற்றுப்புறச் சூழல் உரைகளில் நான்காவது உரை

இயற்கை வளத்தைப் பாதுகாப்போம்!

இயற்கை வளத்தை இடையறாது மனிதன் அழித்து வருவதால் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவும், குடிநீரும் பற்றாக்குறையாக் இருக்கும் இழிநிலை ஏற்பட்டுள்ளது.

 

நாம் சுவாசிக்கும் காற்றும், உண்ணும் உணவும், நம்மை நோய்களிலிருந்து காக்கும் அரிய வகை மூலிகைகளும், உயிர் வாழ இன்றியமையாத நீரும்,  தாவர வளமும் விலங்கு வளமும் இல்லாமல் இருக்காது. ஆக ஒன்றை ஒன்று சார்ந்த தாவர மற்றும் விலங்கு வளம் காக்கப்பட வேண்டியது சுற்றுப்புறச் சூழலின் சமச்சீர்த்தன்மைக்கு இன்றியமையாதது.

 

பண்டாக்கள் (Pandas) மட்டுமே மூங்கில் தளிர்களை உண்ணும். சீனாவில் மூங்கில் காடுகள் அழிக்கப்படவே அங்கு பண்டா இனமே இல்லாமல் போனது. சீனாவில் காடுகள் அழிக்கப்பட்டபோது புலிகள் வாழ இடமில்லாமல் அவை தவிக்க ஆரம்பித்தன. அவற்றை பெருமளவில் மக்கள் கொன்று குவித்தனர். தப்பிப் பிழைத்த புலிகள், ஆப்பிரிக்க காடுகளுக்கு அனுப்பப்படவே அவை அங்கு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தன. ஆகவே காட்டு வளம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை அனைவரும் உணர முடியும்.

 

பயோடைவர்ஸிடி எனப்படும் உயிரினவகை வேறுபாட்டில் ஏற்படும் இழப்பு பல்வேறு அபாயங்களை ஏற்படுத்தும். ஆசியா பசிப்பிகில் இன்று மிக அதிக அளவில் இருக்கும் மீன் வகைகள் 2048இல் ஒன்று கூட இருக்காது; அமெரிக்காவில் குடிநீர் தட்டுப்பாடு, ஐரோப்பாவில் 42% சதவிகிதம் உயிரினங்களின் இழப்பு ஆகியவை இயற்கை வளத்திற்கு மனிதன் ஏற்படுத்திய கேட்டினால் உருவானவையே.

பிரான்ஸில் பறவை இனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

 

உயிரினவகை வேறுபாடு பற்றிய ஒரு ஆய்வு நூறு நாடுகளைச் சேர்ந்த 550 நிபுணர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. ஆய்வை முடிக்க மூன்று வருடங்கள் ஆயின. 129 நாடுகளின் அரசுகளினால் அங்கீகரிக்கப்பட்ட உயிரின வகை வேறுபாடு பற்றிய அறிக்கை உலகளாவிய விதத்தில் செயல்படுத்தும் ஒரு செயல் திட்டத்திற்கான அடிப்படை விஷயங்களை முன் வைக்கிறது.

 

பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவதற்கான முக்கிய காரணம் வேட்டையாடுதலே. சீதோஷ்ண நிலை மாறுதல், உலகம் வெப்பமயமாதல், விஷ வாயுக்கள் மற்றும் அபாயகரமான நச்சுப் பொருள்கள் ஆகியவையும் இதர பல காரணங்களாகும்.

 

350 கோடி வருடங்களாக பல்வேறு ஜீவராசிகள் பூமியில் இருந்து வந்துள்ளன. அவற்றில் 95 விழுக்காடு இன்று இல்லாமல் போய் விட்டன. உலகளாவிய விதத்தில் இப்படி பல்வகை உயிரினங்கள் இல்லாமல் போவது சாதாரண காலத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது.

 

ஆகவே மிருக மற்றும் தாவர வகைகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.

 

***

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: