மநுவின் 4 கேள்விகளும் 4 அதிசயப் பிரார்த்தனைகளும்! (Post No. 5317)

மநு நீதி நூல்- Part 25

 


WRITTEN by London swaminathan

Date: 13 August 2018

 

Time uploaded in London –15-40 (British Summer Time)

 

Post No. 5317

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மநு நீதி நூல்- Part 25

 

 

ஸ்லோகம் 240 முதல் 286 (மூன்றாம் அத்தியாயம் முடிவு) வரை பார்ப்போம்.

 

முன்னதாக ஸ்லோகம் 203-ல் சொன்ன விஷயத்தை நினைவு கூறுதல் சாலப் பொருத்தம் ஆகும்; கடவுள்களுக்குச் செய்யும் கிரியைகளைவிட, இறந்து போன முன்னோர்களுக்குச் செய்யும் கிரியைகளே முக்கியமானவை. முதலில் கடவுளுக்குக் கொடுத்துவிட்டு பின்னர் பிதுர் காரியங்களை செய்வது ஏன் தெரியுமா? தேவ கார்யங்கள், பிதுர் கார்யங்களுக்கு வலிமை சேர்க்கின்றன!

ஸ்லோகம் 3-241 முதல் யார் ஸ்ரார்த்த்தம் சாப்பிடுவதை பார்க்கக்கூடாது என்கிறார் மநு.

 

3-251- நீங்கள் நன்றாக சாப்பிட்டீர்களா என்று கேட்டுவிட்டுக் கை கழுவ வாய் கொப்பளிக்க தண்ணீர் தரவேண்டும்.

 

3-254- நான்கு கேள்விகள் கேட்கச் சொல்லுகிறார்

1.ஸ்வரிதம்- நீங்கள் நன்றாகச் சாப்பிட்டீர்களா? (ஏகாக ஸ்ரார்த்தத்தில்)

2.சுஸ்ருதம்= நன்கு சமைக்கப்பட்டிருந்ததா? (கோஷ்டி ஸ்ரார்த்தத்தில்)

3.ஸம்பன்னம்= எல்லாம் சரியாக இருந்ததா? (நாந்தீ ஸ்ரார்த்தத்தில்)

4.ருசிதம்= அமோகமாக இருந்ததா? (தேவ ஸ்ரார்த்தத்தில்)

 

3-255-ல் தர்ப்பையால் ஆசனம் போடுவது, சாணத்தால் வீட்டை மெழுகுவது முதலியன பற்றிச் சொல்கிறார்

 

நான்கு பிரார்த்தனைகள்

3-257-ல் திவசப் பிராமணர்களை தென் முகமாக நோக்கி 4 பிரார்த்தனை செய்யச் சொல்கிறார் மநு:

 

1.“சுவாமிகளே! என் குலத்தில் கொடைத் தன்மையுடைவர்கள் அதிகரிக்க வேண்டும்.

2.வேதமானது ஓதுவதாலும், ஓதுவிப்பதாலும் யக்ஞம் செய்வதாலும் வளரக்கடவது.

 

3.புத்திர, பௌத்திரர் (மகன், பேரன்) என்று குலம் வளரக் கடவது; பெரியோர்களிடத்தும் வேதாந்த விசாரத்திலும் அன்பு குறையாமல் பெருகட்டும்

 

4.மற்றவர்களுக்குக் கொடுப்பதாற்காக எங்களிடம் செல்வம் சேரக் கடவது.

 

உலகில் கொடை, தான தருமம் பற்றிப் பேசும் நூல்கள் தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் மட்டுமே உண்டு; ஏனையோர் இது நடந்தவிடத்து அதைப் போகிற போக்கில் புகழ்வர். ஆனால் இந்து மதத்தில் மட்டுமே அதை ஒரு புண்ணிய காரியம் என்றும், புண்ணியம் இல்லாவிடினும் மற்றவர்கள் நன்றாக வாழ்வதற்காக இதைச் செய்யவேண்டும் என்றும் அறத்தின் ஒரு பகுதியாக சொல்லுவர். திருக்குறளிலும், ரிக் வேதத்திலும் இதைக் காணலாம். விருந்தோம்பல் என்பது பற்றிப் பேசாத ஸம்ஸ்க்ருத, தமிழ் நூல்கள் கிடையாது. இதனால்தான் ஆரிய- திராவிட பிரிவினை வாதம் தவிடு பொடியாகிறது. பாரதத்தில் மட்டுமே வளர்ந்த மண்ணின் மைந்தர்கள் உருவாக்கீய கொள்கை இது! ‘செல்வத்தின் பயனே ஈதல்’, ‘அறத்தான் வருவதே இன்பம்’, ‘ஆய் அறநிலை வணிகன் அல்லன்’ என்றெல்லாம் தமிழ் இலக்கியம் விதந்து ஓதும். ‘தனக்கு மட்டுமே சமைப்பவன் பாவி’ என்று கீதையும் வேதமும் சொல்கிறது.

 

மாமிஸ உணவு

ஸ்லோகம் 267 முதல் எந்தெந்த மாமிஸ உணவு திவசத்துக்கு, ஸ்ரார்த்தத்துக்கு உகந்தது என்று பேசுகிறது. மூன்று வருணத்தாரும் ஸ்ரார்த்தம் செய்ததால் இப்படி மாமிஸ உணவு பற்றி மநு குறிப்பிடுகிறார். சங்க இலக்கியம் மிகத் தெளிவாக மாமிஸமற்ற பிராஹ்மணர் உணவைப் போற்றுகிறது அது மட்டுமல்ல நாயும் கோழியும் புகாத அந்தணர் தெரு (அக்ரஹாரம்) பற்றியும் சங்க இலக்கிய நூல்கள் பாடுகின்றன.

 

ஸ்லோகம் 273 முதல் மாளய பக்ஷ ஸ்ரார்த்தம் பற்றிக் காண்கிறோம்

ஸ்லோகம் 275-ல் நம்பிக்கையுடன், பக்தி சிரத்தையுடன் கொடுக்கும் உணவு முன்னோர்களுக்கு என்றன்றும் ஏற்புடைத்தே என்கிறார்.

 

 

ஸ்லோகம் 284ல் வஸு, ருத்ர, ஆதித்ய என்ற மூன்று தலை முறையினருக்குச் செய்வது பற்றிச் சொல்கிறார்; வஸு- இறந்து போன தந்தை, ருத்ர- தாத்தா, ஆதித்ய= கொள்ளுத் தாத்தா.

 

அமிர்தம் என்பது என்ன?

 

285- ஒவ்வொரு மனிதனும் விகஸத்தையும் அமிர்தத்தையும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; விகஸம் என்பது- ஸ்ரார்த்த உணவின் மிகுதி; அமிர்தம் என்பது- யக்ஞ உணவின் மீதி

 

286: முடிவுரை

இதுவரை பஞ்ச மஹா யக்ஞம், சிரார்த்தம் பற்றிச் சொன்னேன்; இனிமேல் பிராஹ்மணர்கள் முதலியோர் வாழ்க்கை நடத்துவது பற்றிச் சொல்லப் போகிறேன்.

 

 

 

 

TO BE CONTINUED IN FOURTH CHAPTER……

 

XXX SUBHAM XXXX

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: