பெண்டிர்க்கழகு பேசாதிருத்தல்! குறள் கதை!! (Post No.5319)

WRITTEN by London swaminathan

Date: 14 August 2018

 

Time uploaded in London –14-42 (British Summer Time)

 

Post No. 5319

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பெண்டிர்க்கழகு பேசாதிருத்தல்!’ (நறுந்தொகை, அதிவீர ராம பாண்டியன்)

 

புலவர் புராணம் சொல்லும் கதை:-

 

திருவள்ளுவரிடம் ஒரு கோஷ்டி வந்தது. ஐயா எங்களுக்குள் பெரிய தர்க்கவாதம். நீவீர் சொல்கிறீர்:

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

மநு ஸ்ம்ருதியும் (3-78) இதையே செப்பும்.

 

ஆயினும்  இந்த துறவற நண்பர் நீவீர் சொல்லுவதற்கு ஆதாரம் என்ன? பிராக்டிகல் ஆதாரம், (PRACTICAL EXAMPLE) உதாரணம் உண்டா என்று கேட்கிறார்.

 நீர் சொல்கிறீர்; கிரஹஸ்தாஸ்ரம (இல்லறத்தான்)த்தில் உள்ளவன்தான், பிரம்மசர்யம்வானப் ப்ரஸ்தம், ஸந்யாசம் ஆகிய மூன்று நிலையில் உள்ளவர்களுக்கும் உதவுகிறான் என்று இதற்கெல்லாம் ப்ரூப் PROOF வேண்டாமா?

 

இப்படி வந்த கோஷ்டி Cவள வள என்று பேசிக் கொண்டிருந்தபோது வள்ளுவர் ஐயா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வந்தவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தார்.

 

இவர்கள் மீண்டும் வாய் திறப்பதற்குள் வள்ளுவர் வாய் திறந்தார்.

 

வாசுகி! ஏ வாசுகி! சாதம் ரொம்ப சுடுகிறது; கொஞ்சம் விசிறி கொண்டு வந்து வீசேன்– என்றார்.

அவர் பேசி முடிப்பதற்குள் அங்கே வள்ளுவன் மனைவி வாசுகி அம்மா ஓடோடி வந்தார். விசிறியால் வீசத் துவங்கினார். அந்த அம்மாள் பாதி நீர் இறைத்துக் கொண்டிருந்த தருணத்தில் கணவர் அழைத்தவுடன் ஓடோடி வந்து விட்டார்.

 

 

வள்ளுவர் கொஞ்சம் லேஸாக கண்ணால் சைகை செய்து கொல்லை புறம் போங்கள் என்றார். அவர்கள் அங்கே போனவுடன் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டனர். பாதிக் கிணற்றில் நின்று கொண்டிருந்த குடம் அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது (தண்ணீருடன்!)

அவ்வளவு தண்ணீர் இருந்த போதிலும் அது கீழே போகாமல் அப்படியே தொங்கிய அதிசயத்தைப் பார்த்து வியந்தனர். அதற்குள் வாசுகி அம்மாள் வந்து ஒன்றுமே நடக்காதது போலத் தன் வேலையைத் தொடர்ந்து செய்தார்.

 

வந்தவர்களுக்கும் விடை கிடைத்தது:

இல்லறமே சிறந்தது!

வாசுகி போன்ற ஒரு மனைவி இருந்தால் பெய்யெனப் பெய்யும் மழைஎன்று சொல்லிக் கொண்டே வீடு திரும்பியது வாக்குவாத கோஷ்டி.

 

சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: