ஒரு கதை- ‘மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை!’ (Post No.5329)

Written  by London swaminathan

Date: 16 August 2018

 

Time uploaded in London –12-11 (British Summer Time)

 

Post No. 5329

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை- நறுந்தொகை, அதிவீரராம பாண்டியன்

 

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல் – குறள் 559

 

நீதி முறை தவறி மன்னன் ஆட்சி செய்தால் அவன் நாட்டில் மழை பெய்யாமல் போகும்.

 

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையும் தொக்கு – குறள்

தர்ம நூல்கள் செப்பும் படி ஆட்சி நடத்தும் மன்னவன் நாட்டில் மழையும் பெய்யும்; விளைச்சலும் பெருகும்.

திருவாரூரில் மனுநீதிச் சோழன் என்பவன் அரசாண்டு வந்தான். இவனது கதை பெரிய புராணத்திலும் , சிலப்பதிகாரத்திலும், பழமொழியிலும் உள்ளது. அவனது மகன் வீதி விடங்கன் என்பவன் சாலை விதிகளை மீறி நூறு மைல் (100 mph) வேகத்தில் தேரை ஓட்டிச் சென்றான். அபோது துள்ளிக் குதித்து வந்த ஒரு பசு மாட்டின் கன்று, தேர்க்கடியிடில் சிக்கி இறந்தது. அந்தக் காலத்தில் போக்குவரத்து போலீஸோ சிக்னல் லைட்டோ (No Traffic Police or Signal light) கிடையாது. ஆனால் அரண்மனை வாசலில் எமர்ஜென்ஸி பெல் (Emergency alarm bell)  உண்டு. யாருக்காவது துயரம் என்றால் உடனே ஓடிப் போய் காலிங் பெல்லை (Calling Bell) அமுக்கினால் அரசின் வேலைக்காரர்கள் அல்லது மன்னர் அல்லது அமைச்சரே நேரே வந்து மனுவை வாங்கிக் கொள்வார். இதை ஒரு பசு மாடும் தினமும் கவனித்து வந்தது. அந்தப் பசு மாட்டின் கன்று ட் ரா ஃபிக் ஆக்ஸிடெண்டில் (Traffic accident) இறந்தவுடன் அந்த வண்டி ‘ஸ்டாப்’ பண்ணாமல் போனவுடன் ஓடி வந்து அரண்மனையின் ‘காலிங் பெல்’லை அடித்தது. அந்த பெல்லின் பெயர் ஆராய்ச்சி மணி. மன்னன் இதுவரை அந்த சப்தத்தைக் கேட்டதே இல்லை. அது துருப்பிடித்து போயிருந்தாலும் நல்ல ஒர்க்கிங் கண்டிஷனில் (good working condition) இருந்தது!

 

மன்னர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் வாயிலுக்கு ஓடி வந்து பார்த்தால் ஒரு பசு மாடு நின்று கொண்டிருந்தது. “ஓஹோ, ஏதோ ஒரு மிஸ்டேக் (mistake)கில் கொம்பு கயிற்றில் மாட்டிக் கொண்டு அடித்தி ருக்கும் அதனால் என்ன, ஒரு கட்டு அகத்திக் கீரை வாங்கிப் போடு! அது போய்விடும்” என்று ஒரு மந்திரி சொன்னார். இப்படி விவாதம் நடக்கையில் அரசு நியமித்த 007 ஜேம்ஸ்பாண்டு   (007  James  Bond) ஓடி வந்து உளவுத் தகவல் சொன்னான்.

“மன்னர் மன்னா! உன் மகன் ஒரு பசுவின் கன்றைக் கொன்றான். அதன் தாய்  இங்கே  வந்து உன் முன்னால் நிற்கிறது என்றான். பசுவின் காதிலும் அது விழுந்தவுடன் எல்லோரையும் பின் தொடர்ந்து வருமாறு அது ‘சிக்னல்’ (Signal) கொடுத்து விட்டு, ஆம்புலனஸ் கார் சப்தம் போடுவது போல ‘நீனா நீனா நீனா’, ‘உய்ந் உய்ந் உய்ந்’ என்று ஓலமிட்டுக் கொண்டே (accident spot) ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்தது.

 

மன்னனுகுக்கு வருத்தமும் கோபமும் ; என்ன செய்யலாம் என்றான்? உடனே  ஒரு திராவிட அமைச்சர் கேஸை (case) யாருக்கும் தெரியாமல் அமுக்கிவிடலாம் என்றார். அதற்குள் ஒரு பிராஹ்மணன் நூறு தங்க பசுங் கன்றுகள் செய்து பிராஹ்மணாளு க்குத் தந்தால் போதும். அதுதான் பிராயச் சித்தம் என்றார். ஒரு புத்திசாலி அமைச்சர், மநு நீதி சாஸ்திரத்தில் சொன்ன தண்டனையைச் சொன்னவுடன், “அப்படித்தான் செய்யவேண்டும்; ‘பல்லுக்குப் பல், ரத்தத்துக்கு ரத்தம்; கொண்டா என் மகனை என்றான். மன்னன்; ஏறினான் தேரில்;  70 மைல் ஸ்பீடில் (70 mph) போய் மகனைக் கொன்றான்; தேவர்கள் பூமாரி பெய்தனர்.

உன் நேர்மையை மெச்சினோம்; பசுவின் கன்றுக்கும் உன் மகனுக்கும் உயிர்ப் பிச்சை தந்தோம் என்று சொல்ல இருவரும் உயிர் பெற்று நடந்தனர்.

மன்னா! நேர்மையாக நாட்சி நடந்தால் அங்கே பயிர் செய்யாமலேயே தானியங்கள் விளையுமென்று வள்ளுவன் தமிழ் வேதம் செப்புவதை நீ அறியாயோ? காளிதாஸன்  ரகுவம்ஸ காவியத்தின் ஐந்தாவது அத்திய,,,யத்தில் ரகு என்ற மன்னன் கௌத்ஸ முனிவருக்கு 14 கோடிப் பொன்னை குபேரனிடம் வாங்கிக் கொடுத்ததை அறியாயோ? ரகு படை எடுக்க, முதல் நாள் இரவில் ஆயுத ரதத்தை தயார் செய்தவுடன் குபேரனே பயந்து போய் இரவோடிரவாக 14 கோடிக்கும் மேல் அவன் கஜானாவில் கொட்டி நிரப்பினானே. அது போல உன் நாட்டிலும் தன, தான்யம் செழிக்கும் என்று தேவர்கள் சொன்னார்கள்:

சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்

காலை கழிந்ததன் பின்றையும்- மேலைக்

கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்

முறைமைக்கு முப்பிளமை யில் – பழமொழி

 

–subham–

Leave a comment

1 Comment

 1. இந்தக் காலத்தில் மெத்தப் படித்த மேதாவிகள் இருப்பதால், ‘ஒரு பசு இப்படி நடந்துகொள்ளுமா. அனைவரையும் கன்று இறந்த இடத்திற்குக் கூட்டி வருமா?” என்றெல்லாம் குதர்க்கம் பேசுவார்கள்.
  ஆனால் உண்மையாகவே ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளும் ஆர்வலர்களும் மிருகங்களின் உணர்ச்சிகளையும் , அவற்றின் பரஸ்பர அபிமானம், நட்பு . நன்றி மறவாமை ஆகிய குணங்களைக்கண்டு வியந்து எழுதியிருக்கிறார்கள். மனிதன் போல் பேசமுடியாதே தவிர, மனிதனைப் போலவே இன்ப-துன்பம், சுக-துக்கம் ஆகியவற்றை அனுபவிக்கின்றன; தம் இனத்தில் பிறவற்றுடன் நீண்ட-ஆழ்ந்த நட்பும் அனுதாபமும் கொள்கின்றன, பிறவற்றுக்குப் பரிந்தும் நடந்து கொள்கின்றன, இன்னும் எத்தனயோ விதத்தில் அதிசயிக்க வைக்கின்றன. தங்கள் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகின்றன. மனிதன்தான் அவற்றைப் புரிந்துகொள்ளும் அறிவில்லாமல் திரிகிறான்.
  பசுவைத்தவிர யானை, குதிரை, சிங்கம் ஆகியவை கூட இப்படி உணர்ச்சி மிக்க உயிரினங்களாகவே இருக்கின்றன. இவற்றைப்பற்றிய சில புத்தகங்கள் இதோ:

  1.The Secret LIfe of Cows: by Rosamund Young. Faber &Faber, 2017.
  2. The Elephant Whisperer by Lawrence Anthony. St.Martin’s Griffin, 2012.
  3. The Man Who Listens to Horses- The Story of Monty Roberts. Ballantine Books, 2009
  [ There are other books about Horse Whisperers- people who communicate with horses at a deep level, and understand their language.]
  4. Born Free , Living Free, Forever Free- trilogy about lions. Joy Adamson. 50th Anniversary Edition, Pan, 2010.

  If we read such books, we feel so humble before these creatures, great and small, wild and domestic. Man emerges as the worst animal, because he kills for pleasure. No animal kills for pleasure.
  காக்கை குருவி எங்கள் ஜாதி,
  நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: