WRITTEN BY S NAGARAJAN
Date: 11 SEPTEMBER 2018
Time uploaded in London – 6-24 AM (British Summer Time)
Post No. 5417
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
சிறப்புக் கட்டுரை
செப்டம்பர் 11. விவேகானந்தர் தனது உரையால் அமெரிக்காவை வெற்றி கொண்ட நன்னாள்!
பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்!
ச.நாகராஜன்
1
செப்டம்பர் 11. இன்று (11-9-2018) ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் சர்வமத மகாசபையில் வெற்றிகரமான உரையாற்றிய 125 ஆண்டு விழா நாளாகும்.
அந்த மகத்தான வெற்றி ஹிந்து மதத்தின் வெற்றி. கூடியிருந்த அவையினர் அனைவரும் ஸ்வாமிஜி உரை முடித்தவுடன் இரு நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அன்றிலிருந்து தொடங்கி அவரது பெயர் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.
ஸ்வாமிஜியை இறுதிப் பேச்சாளராக அறிவிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. ஏனெனில் அவரது பேச்சைக் கேட்க விரும்பி வரும் மக்கள் அதுவரை காத்திருப்பர் என்பதால் தான்.
2
மன்மத நாத் கங்குலி என்பவர் ஸ்வாமிஜியின் பால் அத்யந்த பக்தி கொண்டவர். அவர் தனது நினைவலைகளைப் பின்னால் பகிர்ந்து கொண்டார்.அவரது அனுபவங்கள் வேதாந்த கேசரி இதழில் 1960ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாத இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு சுவாரசியமான சம்பவம் இது.
கங்குலி 1897ஆம் ஆண்டு ஸ்வாமிஜியை கல்கத்தாவில் தரிசித்தார்.பின்னர் அடுத்த முறை டிசம்பர் கடைசி வாரத்தில் சந்தித்தார்.
ஸ்வாமிஜியைக் கண்டவுடன் கங்குலி விரைந்து சென்று அவர் பாதங்களைக் கையால் தொட்டு வணங்கினார். அருகில் இருந்த ஒரு சிறு கூடாரத்தின் பக்கத்தில் ஒரு டீ மேஜை இருந்தது. உட்காருவதற்கு சில ஸ்டூல்களும் இருந்தன. ஸ்வாமிஜி பிரம்மானந்தரிடம் கங்குலி அருந்துவதற்கு டீ கொண்டு வருமாறு கூறினார். டீயும் பிரசாதமும் வந்து சேர ஸ்வாமிஜி தனது சம்பாஷணையைத் துவக்கினார்.
அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி ஸ்வாமிஜி தன் நினைவுகளைச் சொல்லலானார்.
அவரது வார்த்தைகளிலேயே அதைப் பார்ப்போம்:
“சிகாகோவில் ஹிந்து மதம் தான் உலகிலேயே மிகப் பெரிய மதம் என்பது நிரூபிக்கப்பட்டது. இதைப் பாதிரிகளால் பொறுக்க முடியவில்லை. அவர்கள் கோபத்தால் கொதித்தனர். பிரான்ஸில் இன்னொரு சர்வமத மகாசபையைக் கூட்ட அவர்கள் விரும்பினர். பாரிஸில் அதை நடத்த எண்ணிய அவர்கள் அதில் பேசும் அனைவரும் பிரெஞ்சு மொழியிலேயே பேசுவதைக் கட்டாயமாக்கலாம் என முடிவு செய்தனர். அப்போது எனக்கு பிரெஞ்சு மொழி தெரியாது. அதனால் என்னை அந்த சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளாமல் செய்து விட முடியும் என்று அவர்கள் எண்ணினர். ஆனால் நான் பிரான்ஸுக்கு சென்று பிரெஞ்சு மொழியை ஆறு மாதங்களில் நன்றாகக் கற்றுக் கொண்டு விட்டேன். பிரெஞ்சு மொழியிலேயே பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினேன். இதைப் பார்த்த மிஷனரிகள் தங்கள் உற்சாகத்தை இழந்தனர். இன்னொரு மாநாட்டை நடத்துவது என்ற அவர்களது எண்ணமே கிடப்பில் போடப்பட்டது.”
ஸ்வாமிஜியை புறந்தள்ளி ஓரங்கட்ட நினைத்த பாதிரிகளின் சூழ்ச்சியை மிக சுலபமாக அவர் முறியடித்து விட்டார். பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றதால் அதிலேயே பேசி பிரான்ஸ் மக்களை அவரால் கவர்ந்து ஈர்க்க முடிந்தது.
ஸ்வாமிஜி தங்கியிருந்த அறைக்கு வெளியே ஒரு பிரைவேட் லெட்டர் பாக்ஸ் இருந்தது. அதில் அவருக்கு வரும் தபால்கள் போடப்படும்.
அதில் அவருக்கு மிரட்டல் கடிதங்கள் ஏராளம் வந்தன. ஹிந்து மதம் பற்றிப் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற மிரட்டல் அந்தக் கடிதங்களில் இருக்கும்.
அஞ்சா நெஞ்சரான ஸ்வாமிஜி அதைச் சற்றும் பொருட்படுத்தவே இல்லை.
ஸ்வாமிஜி ராபர்ட் க்ரீன் இங்கர்சாலைச் சந்தித்த சமயத்தில் இங்கர்சால் அவரிடம், “நல்ல வேளை, நீங்கள் இப்போது வந்தீர்கள். சிறிது காலம் முன்னர் வந்திருந்தால் உங்களைக் கொன்றே இருப்பார்கள்” என்றார்.
ஹிந்து மதம் பற்றிய ஸ்வாமிஜியில் அரிய உரைகளால் பாதிரிகள் திடுக்கிட்டனர். பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
இதற்காக அவர்கள் செய்த சூழ்ச்சிகள் பல.
அவற்றில் ஒன்று தான் பிரான்ஸில் நடத்த திட்டமிட்ட அடுத்த மாநாடு.
அதை சுலபமாக உடைத்து எறிந்தார் அவர். ஒருவேளை பிரான்ஸில் மாநாடு நடந்திருந்தால் அமெரிக்காவை வெற்றி கொண்டது போல பிரான்ஸையும் அவர் வெற்றி கொண்டிருப்பார்.
3
இந்த 125வது ஆண்டு தினத்தில் ஹிந்து மதத்தின் பெருமையை உலகளாவிய விதத்தில் நிலை நாட்டிய ஸ்வாமி விவேகானந்தருக்கு நமது பக்தியுடனான பணிவான அஞ்சலியைச் செலுத்துவோம். அவர் போதித்த நமது மதத்தின் பெருமைகளை நினைத்துப் போற்றி அதைப் பாதுகாப்போம். நமது மதத்தின் அருமை பெருமைகளை உலகெங்கும் பரப்பி அனைவரும் உணரச் செய்வோம்!
***
ஆதாரம் : அத்வைத ஆஸ்ரமம்., கல்கத்தா வெளியிட்ட Reminiscences of Swami Vivekananda என்ற நூல். (முதல் பதிப்பு மே 1961; மேலும் பல பதிப்புகள் கண்ட நூல்) 430 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் கிழக்கு மற்றும் மேற்கைச் சேர்ந்த ஸ்வாமிஜியின் பக்தர்கள் மற்றும் அபிமானிகள் தெரிவிக்கும் சுவையான தகவல்கள் ஏராளம் உள்ளன.வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல். ராமகிருஷ்ண மடம் கிளைகளில் கிடைக்கும்.
–subham–
R.Nanjappa (@Nanjundasarma)
/ September 11, 2018இப்பொழுது ஹிந்துக்களுக்கு எதிராக வேறுவிதமான சூழ்ச்சிகள் நடக்கின்றன.
1.ராமக்ருஷ்ண மடத்தினர் வேதாந்த மடங்கள் மூலமாக வேதாந்தக் கருத்துக்களைப் பரப்பினர். முதலில் இங்கு வந்த அமெரிக்கர்கள் உண்மையாகவே இக்கருத்தால் ஈர்க்கப்பட்டார்கள். ஆனால் நாளடைவில் ராமக்ருஷ்ண மடத்துத் துறவிகள், வேதாந்தம் ஒரு சிறப்பு இந்தியத் தத்துவக் கொள்கை என்பதை விட்டு, இது ஒரு பொதுவான அம்சம் . கிறிஸ்தவத்திலும் இருக்கிறது என்பதுபோல் பேச முற்பட்டார்கள். [An aspect of their stance that all religions are true and equal] ஏசுவின் Sermon On the Mountகும் வேதாந்த விளக்கம் கொடுத்தார்கள். இதைப் பார்த்த வெள்ளைக்காரர்கள், இந்த விஷயம் எங்களிடமே இருப்பதால் உங்கள் வேதாந்தம் எதற்கு எனக் கேட்கிறார்கள்.
2. Fr. Francis X Clooney ஒரு ஜெஸ்யுட் பாதிரியார். ஹிந்து தத்துவத்தில் நாட்டமுள்ளவர்போல் காட்டிக் கொள்பவர், ஆனால் ஜெஸ்யூட் களின் நோக்கமே ஹிந்துமதத்தைத் தீர்த்துக் கட்டுவதுதானே? இவர் எப்படி வேதாந்தத்திற்கு உண்மையான நண்பராக இருக்க முடியும்? ஆனால் ராமக்ருஷ்ண மடத்தினர் இவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். Does not the RK Math even know the basic aims and objectives of the Jesuits? How can a priest who has taken the Jesuit oath be friendly or loyal or sincere to Hinduism?
ஹிந்து மதத்தை விசேஷமாகப் பயிலும் இந்தக் கிறிஸ்தவப் பாதிரிகள் [ இவருக்கு முன்னால் பீட் க்ரிஃபித்ஸ் Bede Griffiths, later known as Swami Dayananda , அபிஷிக்தானந்தா Abishiktananda போன்றோர்] Inter-faith dialogue எனப் பேசினாலும் அவர்களின் உண்மையான அடிப்படை நோக்கம் ஹிந்து மதம் எப்படி கிறிஸ்தவத்திற்குத் தாழ்ந்தது என்பதை நிலை நாட்டுவதுதான்.
3. இன்னொரு வகையினர், வேதாந்தம் இந்திய-ஹிந்து மதத்தின் தனிப்பட்ட கொள்கை அல்ல; மேலை நாட்டு வேதாந்தம் எனவும் ஒரு தனிப்பிரிவைச் சொல்லலாம் என்று கிளம்பியிருக்கிறார்கள். Western Vedanta என்று இதைச் சொல்கிறார்கள். இந்தத் தலைப்பிலேயே ராமக்ருஷ்ண மடத்தினர் நடத்தும்
Prabuddha Bharata பத்திரிகையில் 3-4 வருஷங்களுக்குமுன் ஒரு கட்டுரை வந்தது! இது இப்படியே போனால், விவேகானந்தரே அமெரிக்கா வந்துதான் வேதாந்தம் பயின்றார் என்றுகூடச் சொல்வார்கள்! [ In fact, there are people who say it was Vivekananda who invented Hinduism!]
4.. இன்னொரு வகையினர் ராமக்ருஷ்ண மடத்தினரின் பூரண ஒத்துழைப்புடனும் சலுகையுடனும் அவர்களுடனேயே இருந்து, படிப்பதுபோல் நடித்து, வெளியில் வந்து ராமக்ருஷ்ணருக்கு எதிராக எழுதினார்கள். Jeffrey J Kripal என்பவர் இத்தகையவர். In his book “Kali’s Child”, he has described Sri Ramakrishna as a pedophile and erotic personality!, இந்த ஜெஃப்ரீ க்ரிபால் ஹிந்து மத ஸ்காலர் என அறிமுகமானவர். அமெரிக்க பல்கலைக் கழகங்களுடன் தொடர்புடையவர், எனவே இவர் எழுதிய புத்தகம் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பாடப்புத்தகமாக இருக்கிறது! அதனால் உலகம் முழுதும் அறிமுகமாகிவிட்டது!
5.ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்க அறிஞர்களுடன் தொடர்பு கொண்டார். ஹார்வார்டு பல்கலைக் கழகத்திலும் பேசினார். ஆனால் இன்று, ஹார்வார்டு, சிகாகோ போன்ற முன்னணி அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் ஹிந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன, இங்கிருக்கும் Jeffrey Kripal, Michael Witzel, Sheldon Pollock, Wendy Doniger போன்றோர் சம்ஸ்கிருத அறிஞர்களாகக் கருதப்படுபவர்கள் ஆனால் ஹிந்து மதத்திற்கு எதிராக, ஹிந்து மத நூல்களை திரித்து பொழிபெயர்த்தும், விளக்கியும் வருகிறார்கள். இவர்களை எதிர்த்து எழுத இந்தியாவில் யாரும் இல்லை! இன்ஃபோஸில் நாராயணமூர்த்தி யாகிய பெரும் பணக்கார இந்தியர் இவர்களில் ஷெல்டன் போலக் தலமையில் ஹிந்து மத நூல்களை ஆங்கில மொழியாக்கம் செய்து வெளியிட [ Murty Classical Library of India ]பல லட்சக் கணக்கான டாலர் வழங்கியிருக்கிறார்! [ The American Universities are still somehow connected with the Churches, directly or indirectly. and funded by those who have such conncections]
ஸ்வாமி விவேகானந்தர் நமக்கு பெருமை தேடித்தந்தார், ஆனால் அது ஒரு நூற்றாண்டு பழைய கதை. இன்று பழங்கனவாகிவிட்டது. அவருக்குப் பிறகு அமெரிக்கா சென்ற சன்யாசிகளும், நவயுக குருமார்களும் வேதாந்தம், யோகா எனப் பலவாறு பிதற்றி குட்டை குழப்பிவிட்டனர்.
மஹரிஷி மஹேஷ் யோகி Transcendental Meditation TM என அறிமுகம் செய்தார், இது விஞ்ஞான பூர்வமாக அங்கீகாரம் பெற்றது. A.C. பக்தி வேதாந்த ஸ்வாமி பரபுபாதா ஹரே க்ருஷ்ண இயக்கத்தை அமெரிக்காவில் 1966ல் தொடங்கி புரட்சி செய்தார். [International Society For Krishna Consciousness ISKCON] 12 ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் 100க்கு மேற்பட்ட கிளைகளைத் தொடங்கினார். இவர் விவேகானந்தருக்கு நேர் எதிர் துருவமாக இருந்தார், விவேகானந்தர் பொதுவாக வேதாந்தம் பேசினார்; ப்ரபுபாதா க்ருஷ்ண ப்ரக்ஞை பற்றிப் பேசினார்.; விவேகானந்தர் வேதாந்தத்திலும் அத்வைதம் போதித்தார்; ப்ரபுபாதா அசிந்த்ய பேதாபேதம் போதித்தார்; விவேகானந்தர் சமூகத்தில் சற்று மேல் நிலையில் இருந்தவர்களுடனேயே தொடர்பு கொண்டார்; ப்ரபு பாதரோ குறிப்பாக இளைஞர்களை அதுவும் ஹிப்பிகளை ஈர்த்து க்ருஷ்ணபக்தராக்கினார். அவர்களில் பலர் சிறந்த அறிஞர்களாகி சிறந்த இலக்கியம் படைத்திருக்கின்றனர். The Beatles- மஹரிஷி மஹேஷ் யோகியாலும் பரபுபாதாவினாலும் ஈர்க்கப்பட்டார்கள்.
ஹிந்து சமய-தத்துவ அறிவு அமெரிக்காவில் எப்படிப் பரவியது-ஊடுருவியிருக்கிறது , அமெரிக்க சிந்தனையை எப்படி பாதித்திருக்கிறது- often in very subtle ways- என்பதை American Veda [Harmony, 2013] என்ற புத்தகத்தில் Philip Goldberg விரிவாக விளக்கியிருக்கிறார்.
ஆனால், இன்று பொதுவாக அமெரிக்காவில் ஹிந்து மதவெறுப்பே தலை தூக்கியிருக்கிறது. இன்று Hinduphobia உச்ச நிலையில் இருக்கிறது. இதில் அமெரிக்க முன்னணிப் பத்திரிகைகளும் [ நியூயார்க் டைம்ஸ் போன்றவை] பல்கலைக் கழகங்களும் பெரிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் பின்னால் சர்ச்சுகளூம் பாதிரிகளும் அவர்களின் பண-நிர்வாக பலமும் செயல்படுகின்றன.
இவை இஸ்லாம் மதத்தைக்கூட ஆதரித்து எழுதுகின்றன; ஆனால் ஹிந்து மதத்திற்கு எதிரான நிலையையே எடுக்கின்றன. ஹிந்துதுமதத்தை எதிர்த்தே விமர்சிக்கின்றன. இவற்றின் விளக்கத்தை ராஜீவ் மல்ஹோத்ராவின் நூல்களில் காணலாம்.
விவேகானந்தர் செய்த அரிய முயற்சியை நினைத்து இன்று பெருமூச்சு தான் விடலாம்! ஹிந்துக்களுக்கு எதிரான பிரசாரம் இன்று உலகம் முழுதும் வலுத்து வருகிறது. This is due to the domination of leftist elements [ in the guise of ‘liberalism] in the mainstream media both in the West and in India. இதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்கும் நிலையில் நாம் இல்லை!
Santhanam Nagarajan
/ September 11, 2018thanks for your views. we have to see these developments in right perspective and should take right action. Efforts are there. People like Vamana Sastry (David Frawly) are also there to defend and put forth the principles of Hinduism. With the man power and money power the church wants to uproot Hinduism. But this will never happen. First Hindus should realise these things. Once the awakening is there all the problems will get solved automatically.
R.Nanjappa (@Nanjundasarma)
/ September 11, 2018Yes sir, David Frawley, Rajiv Malhotra are there. But there is one main difference. David Frawley is not affiliated to any American university ie he is not considered an “academic”. Now, people like Wendy Doniger write anything they like; because of their academic connections , their views spread immediately in the academic circles. Other academic writers cite these writings in their works, and so the original rubbish gets established as the standard reference on the subject. Front line newspapers like New York Times publish such writings in the op-ed pages or other places. But objections made to them do not get published. Besides, these American “academics” do not engage in dialogue or discussion with people like David Frawley or Rajiv Malhotra because they are not considered academics.
Now, in India, there is no University specialising in Hindu religious thought or philosophy or studies, like they have in America for Christian theological studies. So, however learned our scholar may be, he does not get an official or appropriate academic stature. In American universities and schools, Shiva is described as womanizer; Kali is described as one who kills her husband! It is such perverse ideas that spread among people. Unfortunately, Hindu children who attend American schools and colleges are exposed to such ideas, and they get influenced by such negative images.
Comparative religious and philosophy studies are a big stream in American universities. While every other religion ( including Islam) is taught in a sympathetic light, portrayed in friendly terms and taught by scholars in the respective fields and by people practising those religions, Hinduism alone is taught by non-Hindus or nominal Hindus who have no sympathy or experience in the field. Imagine the damage done in course of time, when thousands of such people complete their courses and join services, media, law/judiciary. academic world.etc.
Recently, it is only Vamsee Juluri who has taken on academic Hinduphobia in an academic manner and given a fitting reply in his book “Rearming Hinduism” [ Westland, 2014;] But what can one book achieve against hundreds circulating in the academic world?. And which HIndu organization in India has taken up this challenge in an academic, appropriate manner and scale? It is so sad.