Painting of Bhartruhari meeting his wife
Written by London Swaminathan
Date: 15 September 2018
Time uploaded in London – 17-32 (British Summer Time)
Post No. 5432
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பர்த்ருஹரி நீதிசதகம்-1
பர்த்ருஹரியின் 300 பாக்கள் அடங்கிய நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்கார சதகம் ஆகிய மூன்றும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலம் உள்பட பல ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. இதைத் தமிழில் வந்த விவேகா சிந்தாமணி முதலிய பல நூல்களில் தனித் தனிப் பாடலாக மொழி பெயர்த்துள்ளார்கள். அதற்குப் பின்னர் இவைகளைத் தமிழ் பாக்கள் வடிவிலும் மொழி பெயர்த்து விட்டனர்.
பர்த்ருஹரியின் காதல் கதை மிகவும் சுவையானது; சோகமானது. முன்னரே எழுதிவிட்டேன். கீழே அதற்கான தொடர்புக் குறிப்பு உளது.
நான் புதிதாக எழுத என்ன இருக்கிறது?
இதைப் பல தமிழ் அறிஞர் பாடல்களுடன் ஒப்பிடுவதே எனது நோக்கம்.
दिक्कालाद्यनवच्छिन्नानन्तचिन्मात्रमूर्तये ।
स्वानुभूत्येकमानाय नमः शान्ताय तेजसे ॥ 1.1 ॥
இதோ முதல் பாடல்
திக்காலாதயனவச்சின்னானந்த சின்மாத்ர மூர்த்தயே
ஸ்வானுபூத்யேகமானாய நமஹ சாந்தாய தேஜசஹ 1-1
கடவுள் வாழ்த்து பற்றி தொல்காப்பியர் குறிப்பிட்டாலும் தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்து கிடையாது! ஆனால் திருக்குறளில் உளது. சங்க இலக்கியத்தை சுமார் நாலு அல்லது ஐந்தாவது நூற்றாண்டில் நமக்கு தொகுத்து அளித்த மஹாதேவன் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) சிவ பெருமானைப் புகழ்ந்து பாடி, புறநானூறு முதலிய நூல்களில் முதல் பாடலாகச் சேர்த்துள்ளார். சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் வேதத்தில் உள்ளது போல இயற்கைச் சக்திகளே கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது. இளங்கோ அடிகள் சூரியன், சந்திரன், மழை ஆகியவற்றைப் பாடிப் பரவுகிறார். சம்ஸ்க்ருதத்தில் காளிதாசனின் காவியத்தில் இறைவனைத் துதிபாடியே துவங்குகிறார்.
நற்றிணையின் கடவுள் வாழ்த்து விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகம் ஒன்றின் மொழி பெயர்ப்பாக அமைந்துள்ளது சுவையான செய்தி.
இதோ திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்தை பர்த்ருஹரியுடன் ஒப்பிடுவோம்:
பர்த்த்ருஹரி சொல்கிறார்:
காலத்திற்கும் பரந்து விரிந்த இடத்துக்கும் அப்பாலுள்ள ஒளி மயமான அமைதியான, சாந்தமான இறைவனை வணங்குகிறேன். அந்த இறைவனை ஒருவனுடைய சுய அனுபவத்தாலேயே அடைய முடியும்; அளக்க/ அறிய முடியும்.
மிகவும் கருத்துள்ள பாடல்; இந்துக்கள் மட்டுமே கடவுளை காலத்துக்கும் இடத்துக்கும் அப்பால் வைப்பர். ஐன்ஸ்டைன் போன்ற பேரறிஞர்கள் காலம், இடம் பற்றிய கொள்களை முன் வைத்தனர். ஆனால் அதற்கும் முன்பாக இந்தக் காலம் பற்றிப் பேசியவர்கள் இந்துக்களே. ஐன்ஸ்டைன், ஒளியை மிஞ்சிய பொருள் ஏதும் இல்லை என்பார். ஆனால் இந்துக்களோ மனதின் வேகம் ஒளியைவிட அதிகம் என்பர். அதைப் பயன்படுத்தி நாரதர் முதலானோர் அண்டம் விட்டு அண்டம் பயணம் (Inter Galactic Travel) செய்தனர்.
Image of Surya Deva in Delhi Airport
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் பாட்டிலேயே பூத, பவ்ய, பவத் காலம் — நீயே இற்நத காலம், நிகழ் காலம், வருங்காலம் — என்று துதிக்கின்றனர். கடவுளையும் காலத்தையும் தொடர்புபடுத்தி ‘அவன்’ அதற்கு அப்பாற்பட்டவன் என்று மொழிவது இந்துக்களின் மிக முன்னேறிய விஞ்ஞான அணுகு முறையைக் காட்டுகிறது.
ஏனையோர் எல்லாம் ஒரு பாடலோ, இரண்டு பாடலோ பாடி கடவுள் வாழ்த்தை முடித்துக்கொண்டனர். ஆனால் வள்ளுவனோ பத்துப் பாடல்கள் பாடி கடவுளைத் துதித்துள்ளான். இது உலக மஹா விந்தை. உலகிலேயே தமிழன்தான் கடவுளைத் துதிப்பவர்களில் முதல்வன் என்பதை இது காட்டுகிறது. அது மட்டுமல்ல உருவ வழிபாடே சிறந்தது என்பதையும் வள்ளுவன் விண்டுரைக்கிறான். கடவுளின் திருப்பாதங்கள் பற்றி ஏழு குறள்களில் செப்பிவிட்டான். இதனால்தான் திருக்குறளை தமிழ் வேதம் (மறை) என்று ஒரு புலவர் திருவள்ளுவர் முன்னிலையிலேயே பாடிவிட்டார் (காண்க- திருவள்ளுவ மாலை)
பர்த்ருஹரி, அவரவர் அறிவு, அனுபத்துக்கு ஏற்ப இறைவனை உணரலாம் என்றார். வள்ளுவன் இதைப் பல சொற்களால் விளக்குகிறான். . கடவுள் என்பவன் தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், வால் அறிவன், நெஞ்சத் தாமரையில் வீற்றிருப்பவன், சம்சார சாகரத்தை கடக்க உதவுபவன், உலகிற்கே முதல்வன், வேண்டுதல் வேண்டாமை இலாதான், ஐம்புல உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன், எண்குணத்தான் (சிவ பெருமானின் அடைமொழி) என்றெல்லாம் வருணிக்கிறான். கடவுள் வாழ்த்துக்கு அப்புறமும் இந்திரன் பிரம்மன், லெட்சுமி, நஞ்சுண்ட கண்டன் (சிவன்), பல்மாயக் கள்வன் (கிருஷ்ணன்) யமன் போன்று பல தெய்வங்களைப் பல குறள்களில் பாடுகிறான்.
நான்கு வேதங்களிலும் வரும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் காயத்ரீ மந்திரம். அந்தணர்கள் நாள் தோறும் சூரிய ஒளியைப் பார்த்து தேஜோ மயமான இறைவனை நினைக்கும் மந்திரம். பர்த்ருஹரியும் இறைவனை தேஜோ மயமானவன்- ஒளி மயமானவன் என்று போற்றுவது குறிப்பிடத்தக்கது.
Old Articles in my blog:–
tamilandvedas.com/tag/கடவுள்…
Posts about கடவுள் வாழ்த்து written by Tamil and Vedas
tamilandvedas.com/tag/பர்த்ருஹரி
Posts about பர்த்ருஹரி written by Tamil and Vedas
tamilandvedas.com/tag…
Posts about சம்ஸ்கிருத பொன்மொழிகள் written by Tamil and Vedas. … ந யுக்தம் பரகளத்ர …
tamilandvedas.com/tag…
Posts about திரிமூர்த்தி written by Tamil and Vedas. about; Fatness Anecdotes … பர நாரி … பரத்ரவ்ய ஹர: …
tamilandvedas.com/tag…
Posts about பர்த்ருஹரி நீதி சதகம் written by Tamil and Vedas
–subham–