பாதிரிகளுக்கு இங்கர்சாலின் கேள்வி! – 2 (Post No.5435)

 

Written by S NAGARAJAN

Date: 16 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-38 AM (British Summer Time)

 

Post No. 5435

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

ராபர்ட் க்ரீன் இங்கர்சாலின் உரை தொடர்கிறது. அதன் சுருக்கத்தை மட்டும் இங்கு தமிழில் காணலாம். மூலத்தை உள்ளது உள்ளபடி ஆங்கிலத்தில் படிக்கலாம்.

“ முதலில் இறையியலைப் பார்க்கிறேன். இந்த உலகில் என்ன செய்வது என்று நான் கேட்கிறேன். கேட்கும் உரிமை எனக்கு உள்ளதா? ஆம்,. கேட்கும் உரிமை உள்ளதெனில் அதை ஆராயும் உரிமையும் எனக்குள்ளது. ஆராயும் உரிமையும் எனக்குள்ளதெனில் அதை ஏற்றுக் கொள்ளும் உரிமையும் எனக்குள்ளது. ஏற்றுக் கொள்ளும் உரிமை எனக்குள்ளதெனில் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கும் உரிமையும் எனக்குள்ளது. எந்த மதத்தை  மறுக்க எனக்கு உரிமை உள்ளது? எது எனது பகுத்தறிவுக்கு ஒத்ததாக இல்லையோ , எது  தகுதி வாய்ந்த உண்மை என இல்லையோ, எது எனது பொதுஅறிவுக்கு உகந்ததாக இல்லையோ அதை நான் மறுக்கலாம். லட்சக்கணக்கானோர் இந்த உலகை இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களால் ஆள நினைக்கிறார்கள். ஆயிரக் கணக்கில் சர்ச்சுகள் உள்ளன. ஆயிரக்கணக்கான கதீட்ரல்கள் , தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் நற்செய்திகளை (‘gospel’)  பரப்புவதில் ஈடுபட்டுள்ளனர். அதன் விளைவு தான் இந்த உலகத்தில் என்ன? ஒரு சர்ச் இன்னொரு சர்ச்சை இரக்கத்துடன் நோக்குகிறதா? ஒரு நாட்டின் மதம் இன்னொரு நாட்டின் மதத்தை மதிக்கிறதா? அல்லது எனது மதமே சிறந்த மதம் என்று சொல்லாமல் இருக்கிறதா? ஒவ்வொரு மதத்தின் போதகரும் எல்லையற்ற செருக்குடன் மற்றவரைப் பின்பற்றுவோரை ஊழித் தீயில் தள்ளவில்லையா?

ஏன் சர்ச்சுகள் உலகை நாகரிகப்படுத்துவதில் தோல்வியை அடைந்து விட்டன? மற்ற நாடுகளை விட கிறிஸ்தவ நாடுகள் சிறந்ததாக இல்லையே, ஏன்? மற்றவர்களை விட கிறிஸ்தவர்கள் சிறந்தவர்களாக இல்லையே, ஏன்? பாதிரிகள் இதர டாக்டர்கள் அல்லது வக்கீல்கள் அல்லது வியாபாரிகள் அல்லது மெக்கானிக்குகள் அல்லது ரயில் எஞ்ஜின் டிரைவர்களை விடச் சிறந்தவர்களாக இல்லையே ஏன்? ரயிலை இயக்கும் எஞ்ஜின் டிரைவர் ஆயிரம் மடங்கு பயனுள்ளவராக இருக்கிறார். ஒரு மோசமான எஞ்சினியரையும் நல்ல பாதிரியையும் தருவதை விட ஒரு நல்ல எஞ்சினியரையும் மோசமான பாதிரியையும் எனக்குத் தாருங்கள்; இயற்கையை மீறிய செயல்களை நம்புபவர்களைப் பற்றிய ஒரு வியப்பூட்டும் உண்மை இருக்கிறது. ஒரு சர்ச்சின் பாதிரிகள் மற்ற சர்ச்சுகளில் உள்ள பாதிரிகள் சொல்லும் அற்புதங்களிலும் ஆச்சரியமூட்டும் விஷயங்களிலும் நம்பிக்கை கொள்வதில்லை. ஒருவேளை அவர்களில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் தெரிந்திருக்கலாம். ஒரு ஹிந்துவிடம் கிறிஸ்தவ மிஷனரிகள் பைபிளில் வரும் அற்புதங்களைச் சொல்வார். ஹிந்து புன்முறுவல் பூப்பார். ஹிந்து கிறிஸ்தவ மிஷனரிகளிடம் தங்கள் புராணங்களில் உள்ள அற்புதங்களைக் கூறுவார். மிஷனரிகள் அவரை இரக்கத்துடன் பார்ப்பர். ஒரு பாதிரி இன்னொரு பாதிரியின் வார்த்தையை நம்பமாட்டார்.

இதை விளக்கும் வகையில் ஒரு சின்ன கதையை ஒரு சமயம் நான் கேட்டேன். ஒரு கனவான் ஒரு விருந்தில் மிக மிக ஆச்சரியகரமான ஒரு சம்பவத்தை விவரித்தார். அவர் அதைச் சொல்லி முடித்த பின்னர் எல்லோரும், “அது நடக்கக் கூடியதா, என்ன? நீங்கள் எப்போதாவது இது போல கேள்விப்பட்டதுண்டா?” என்றனர். எல்லோரும் ஒருமித்த குரலில் ஆச்சரியப்பட்டு இப்படிக் கூறினர் – ஒருவரைத் தவிர. அந்த ஒருவர் ஒன்றுமே சொல்லவில்லை. பேசாமல் இருந்தார்; ஆச்சரியமும் படவில்லை. மிக அதிக ஆச்சரியத்தில் மூழ்கி இருந்த ஒருவர் அவரை நோக்கி, “இப்போது அவர் சொன்ன சம்பவத்தை நீங்கள் கேட்டீர்களா?” என்றார்.

ஆம், கேட்டேன் என்றார் அவர்.

“அது சரி, அதைக் கேட்டு சற்றும் ஆச்சரியப்பட்ட மாதிரி காணோமே!”

“அதுவா, நானே ஒரு பொய் சொல்பவன் தான்” என்றார் அவர்.

**

 

ஆங்கில மூலம் இது:

In the first place I am met by the theological world. Have I the right to inquire? They say, “Certainly; it is your duty to inquire.” Each church has a recipe for the salvation of this world, but not while you are in this world — afterward. They treat time as a kind of pier — a kind of wharf running out into the great ocean of eternity; and they treat us all as though we were waiting there, sitting on our trunks, for the gospel ship.

I want to know what to do here. Have I the right to inquire? Yes. If I have the right to inquire, then I have the right to investigate. If I have the right to investigate, I have the right to accept. If I have the right to accept, I have the right to reject. And what religion have I the right to reject? That which does not conform with my reason, with my standard of truth, with my standard of common sense. Millions of men have been endeavoring to govern this world by means of the supernatural. Thousands and thousands of churches exist, thousands of cathedrals and temples have been built, millions of men have been engaged to preach this gospel; and what has been the result in this world? Will one church have any sympathy with another? Does the religion of one country have any respect for that of another? Or does not each religion claim to be the only one? And does not the priest of every religion, with infinite impudence, consign the disciples of all others to eternal fire?

Why is it the churches have failed to civilize this world? Why is it that the Christian countries are no better than any other countries? Why is it that Christian men are no better than any other men? Why is it that ministers as a class are no better than doctors, or lawyers, or merchants, or mechanics, or locomotive engineers? And a locomotive engineer is a thousand times more useful. Give me a good engineer and a bad preacher to go through this world with rather than a bad engineer and a good preacher; and there is this curious fact about the believers in the supernatural: The priests of one church have no confidence in the miracles and wonders told by the priests of the other churches. Maybe they know each other. A Christian missionary will tell the Hindoo of the miracles of the bible; the Hindoo smiles. The Hindoo tells the Christian missionary of the miracles of his sacred books; and the missionary looks upon him with pity and contempt. No priest takes the word of another.

I heard once a little story that illustrates this point: A gentleman in a little party was telling of a most wonderful occurrence, and when he had finished everybody said: “Is it possible? Why, did you ever hear anything like that?” All united in a kind of wondering chorus except one man. He said nothing. He was perfectly still and unmoved; and one who had been greatly astonished by the story said to him: “Did you hear that story?” “Yes.” “Well, you don’t appear to be excited.” “Well no,” he said; “I am a liar myself.”

  • தொடரும்
  • ***
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: