முட்டாள்கள் பற்றி வள்ளுவன், பர்த்ருஹரி- ஒரு குட்டிக் கதை (Post No.5453)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 21  September 2018

 

Time uploaded in London – 8-49 am (British Summer Time)

 

Post No. 5453

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

முட்டாள்கள் பற்றி வள்ளுவன், பர்த்ருஹரி- ஒரு குட்டிக் கதை (Post No.5453)

 

வள்ளுவன் 1330 அருங் குறள்களை யாத்தான்;பர்த்ருஹரி 300 பாக்களில் வரிக்கு வரி குறள் போலவே பேசுகிறார். பஞ்சதந்திரம் இயற்றிய பிராஹ்மணன் விஷ்ணுசர்மனோவெனில் கதைக்குள் பொன் மொழிகளைப் பொழிகிறார். நாம் எல்லோரும் பஞ்சதந்திரம் என்றால், ஏதோ மிட்டாய் சாக்லெட் சாப்பிடும் சின்னப் பயல்களுகான கதை என்று நினைப்போம். ஆனால் அதில் திருக்குறளையும் பர்த்ருஹரியையும் விடக் கூடுதல் அறிவுரை உளது. நிற்க.

 

பர்த்ருஹரியின் நீதி சதகத்தில் என்ன செப்பினார்?

 

प्रसह्य मणिम् उद्धरेन्मकरवक्त्रदंष्ट्रान्तरात्
समुद्रम् अपि सन्तरेत्प्रचलदूर्मिमालाकुलम् ।
भुजङ्गम् अपि कोपितं शिरसि पुष्पवद्धारयेत्
न तु प्रतिनिविष्टमू‌ऋखजनचित्तम् आराधयेथ् ॥ 1.4 ॥

 

ப்ரசஹ்ய மணிம் உத்தரேத் மகர வக்த்ர தம்ஷ்ட்ராந்தராத்

ஸமுத்ரமபி ஸந்தரேத் ப்ரசலதூர்மி மாலாகுலம்

புஜங்கம் அபி கோபிதம் சிரஸி புஷ்பவததாரயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்ருகஜனசித்தம் ஆராதயேத் -1-4

 

 

ஒரு முதலையின் வாயிலிருந்து ஒரு ரத்தினத்தை எடுத்துவிடலாம்,

ஒருவன் ஸமுத்திரத்தைக் கூட நீந்திக் கடந்துவிடலாம்,

ஒரு பூவை அணிவது போல ஒரு பாம்பைக்கூட தலையில் சூடலாம்,

ஆனால் பிடிவாதமான முட்டாளின் மனதை மாற்ற முடியாது 1-4

 

लभेत सिकतासु तैलम् अपि यत्नतः पीडयन्
पिबेच्च मृगतृष्णिकासु सलिलं पिपासार्दितः ।
क्वचिदपि पर्यटन्शशविषाणम् आसादयेत्
न तु प्रतिनिविष्टमूर्खचित्तम् आराधयेथ् ॥ 1.5 ॥

 

 

லபேத் ஸிகதாசு தைலம் அபி யத்னதஹ பீடயன்

பிபேஸ்ச ம்ருக த்ருஷ்ணிகாஸு ஸலிலம் பிபாஸார்திதஹ

க்வசிதபி பர்யதந் சசவிஷாணம் ஆஸாதயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்கசித்தம் ஆராதயேத் -1-5

 

 

மணலைக் கடைந்து எண்ணை எடுத்துவிடலாம்,

கானல் நீரிலிருந்து குடித்து தாகத்தைத் தீர்த்து விடலாம்

காட்டில் முயல் கொம்பைக் கூடக்கண்டு எடுத்து விடலாம்,

ஆனால் ஒரு முட்டாளின் மனதை மாற்ற முடியாது 1-5

 

 

 

व्यालं बालमृणालतन्तुभिरसौ रोद्धुं समुज्जृम्भते
छेत्तुं वज्रमणिं शिरीषकुसुमप्रान्तेन सन्नह्यति ।
माधुर्यं मधुबिन्दुना रचयितुं क्षारामुधेरीहते
नेतुं वाञ्छन्ति यः खलान्पथि सतां सूक्तैः सुधास्यन्दिभिः ॥ 1.6 ॥

 

 

வ்யாலம் பால ம்ருணால தந்து பிரஸௌ ரோததும் ஸமுஜ்ரும்பதே

சேதும் வஜ்ரமணிம் சிரீஷ குஸுமப்ராந்தேன ஸன்னஹயதி

மாதுர்யம் மதுபிந்துனா ரசயிதும்  க்ஷாராமுதேரீஹதே

நேதும் வாஞ்சயந்தி யஹ கலான்பதி ஸதாம் ஸூக்தைஹி

ஸுதாஸ்யந்திபிஹி 1-6

 

முட்டாளுக்கு வலியப் போய் நல்ல வார்த்தை சொல்லி மாற்றிவிட முயலுவோர்

தாமரை மலர்த் தண்டுகளால் ஒரு யானையைக் கட்டிப்போட நினைப்பவரே,

சீரிஷ/அனிச்ச மலரின் காம்பை வைத்து வைரத்தைத் துளை போட நினைப்பவரே

ஒரு சொட்டுத் தேன் துளி விட்டு கடலின் உப்புத்தன்மையை நீக்க விரும்புபவரே (ஆவர்)- 1-6

 

முட்டாள்கள் பற்றி வள்ளுவர் சுமார் 20 குறள்களில் கொட்டித் தீர்த்துவிட்டார்,

 

 

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின் (குறள் 838)

 

முட்டாள் கையில் ஒரு பொருள் கிடைத்து விட்டால் ஏற்கனவே பைத்தியம் பிடித்த ஒருவன் கள்ளையும் குடித்துவிட்டால் என்ன ஆகுமோ அப்படி ஆட்டம் போடுவான்.

 

குரங்கு கையில் பூமாலை, அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான்,

இஞ்சி தின்ன குரங்கு போல- பழமொழிகள் நம் நினைவுக்கு வரும்.

 

 

 

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன்று இல் (குறள் 839)

முட்டாளுடன் தொடர்பு கொள்வதும் இனிதே; ஏனெனில் அவன் பிரிந்து செல்லும்போது கொஞ்சமும் வருந்தமாட்டோம்.

 

போனான்டா சனியன் என்று கொண்டாடுவோம்

 

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய் – குறள் 848

 

சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் கற்க மாட்டான்; அவன் சாகும் வரைக்கும் நம்மைப் பிடித்த நோய் போன்றவன்

 

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தன்கண்டவாறு –  குறள் 849

 

முட்டாளுக்குக் கற்பிக்கப் போனவன் முட்டாள் ஆகிவிடுவான்; முட்டாளோ பிறர் சொல்லுவதைக் கேட்காமல் அறிவாளிபோலத் தோன்றுவான்.

 

அவன் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடுவான்.

இதற்கு பஞ்ச தந்திரம் எழுதிய விஷ்ணு ஸர்மா ஒரு நல்ல கதை சொல்லுவார்.

ஒரு காட்டில் குளிர்காலம் வந்தது; குரங்குகள் வாடைக் காற்றில் வாடின. மாலை நேரம் வந்தது; அப்பொழுது மின்மினிப் பூச்சிகள் ‘பளிச் பளிச்’ சென்று ஒளி உமிழ்ந்து பறந்தன. ஒரு குரங்குக்கு நல்ல யோஜனை பிறந்தது. ஒரு மின்மினிப் பூச்சியைப் பிடித்து, காய்ந்த இலை, சருகுகளுக்கு அடியில் வைத்து தீ எரிவதாகக் கற்பனை செய்து கொண்டு கை,கால்களைத் தடவி சூடு உண்டாக்கின. குளிரால் மிகவும் வாடிய ஒரு குண்டுக் குரங்கு வாயால் ஊதி மேலும் தீயை எழுப்ப முயன்றது. இதையெல்லாம் மரத்தின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்த தூக்கணங் குருவிக்கு ஒரே சிரிப்பு. இந்த முட்டாள் குரங்குகளுக்கு கொஞ்சம் நல்ல வார்த்தை சொல்லுவோம் என்று மரத்தின் மேலிருந்து சொன்னது:

 

ஓ, குரங்குகளே! அது தீப்பொறி அன்று; வெறும் பூச்சிதான்; அதனால் தீ உண்டாகாது- என்று.

 

குரங்குகளோ இதை செவிமடுக்கவில்லை. அது அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று.

 

 

குருவிக்கு வருத்தம்; கொஞ்சம் நன்றாகக் காதில் ஓதுவோம் என்று பறந்து வந்து ஒரு குரங்கின் காதில் முன் சொன்னதை ஓதியது. கோபம் அடைந்த அந்தக் குரங்கு குருவியைப் பிடித்து, ஒரு பாறையில் மோதிக் கொன்றது.

 

இது போலப் பஞ்சதந்திரக் கதைகளில் நிறைய கதைகள் முட்டாளின் சிறுமைதனைப் பேசும்.

விஷ்ணு ஸர்மா சொல்கிறார்,

பெரியதொரு மரத்தை வாளால் வெட்டமுடியாது;

பெரியதொரு பாறையை வாளால் பிளக்கமுடியாது;

குருவியின் புத்திமதி, வாழ்க்கையை எளிதானது

என்ற கொள்கையுடைய குரங்குகளுக்குப் பயன் தராது;

 

மேலும் ஒரு ஸ்லாகத்தில் சொல்கிறார்,

தகுதியற்றவனுக்குச் சொல்லும் புத்திமதி

வீட்டில் ஏற்றிய ஒளிமிக்க விளக்கை

குடத்திலிட்டு மூடி வைப்பதை ஒக்கும்

 

இவ்வாறு ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் இடையிலும் முடிவிலும் விஷ்ணுஸர்மா பாடிக்கொண்டே கதை சொல்லுவார்.

 

–சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: