கண்ண பிரான் பற்றிய அபூர்வ கதை!(Post No.5474)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 September 2018

 

Time uploaded in London – 7-38 am (British Summer Time)

 

Post No. 5474

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

கண்ண பிரான் பற்றிய அபூர்வ கதை!(Post No.5474)

 

கிருஷ்ணனைப் பற்றிய ஒரு அபூர்வ கதையை ஆழ்வார்கள் பாடியுள்ளனர். இந்தக் கதை வட இந்தியாவில் இல்லை, ஸம்ஸ்க்ருத நூல்களில் இல்லை என்று மு.இராகவையங்கார் கூறுகிறார். இது சுவையான கதை மட்டுமல்ல.

 

ஜடப் பொருட்களுக்கும் முக்தி உண்டு என்று தெரிகிறது. அல்லது ஒருவனின் எல்லையற்ற பக்தி எந்த அளவுக்குச் செல்லும் என்று காட்டுவதாகவும் கொள்ளலாம்.

 

தமிழில் புறநானூற்றில் உள்ள ராமாயணச் செய்திகள் கம்பனிலோ வால்மீகியிலோ இல்லை. ஆழ்வார்கள் பாடிய பல ராமாயண சம்பவங்கள் வேறு எந்த ராமாயணத்திலும் இல்லை. ஒரு வேளை கம்பன் சொல்லும் மூன்று ராமாயணங்களும் அவர்கள் பாடிய காலத்தில் கிடைத்திருக்கலாம்.

 

இதே போல பாகவதத்தில் இல்லாத கதைகளும் ஆழ்வார் பாடல்களில் இருப்பது ஆராய்ச்சிக்குரியது.

 

தமிழ் மொழி -தெய்வத் தமிழ், தமிழ்நாடு தெய்வ பூமி என்பதற்கு இவை எல்லாம் எடுத்துக்காட்டுகளாக நிற்கின்றன.

 

இதோ இணப்பிலுள்ள ததிபாண்டன் கதையைப் படியுங்கள்; வழங்கியவர் மு. ராகவ அய்யங்கார் என்னும் மிகப்பெரிய தமிழ் அறிஞர். காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள், தமிழ் தாத்தா உ.வே.சா.,  பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரம் பிள்ளை ஆகியோரால் பாராட்டப்பட்ட பெரியார் வழங்கிய கதை:-

 

 

Leave a comment

1 Comment

 1. வால்மீகி ராமாயணம். ஸ்ரீமத் பாகவதம் ஆகியவை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை. அதனால் அவற்றில் எல்லாவிஷயங்களும் குறிப்பிடப்படவில்லை. அவற்றில் இல்லாத சில நிகழ்ச்சிகள் வேறு ஞானி-பக்தர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.- திறவோர் காட்சி! வால்மீகி ராமரை மனிதர்களில் சிறந்தவராகக் கருதுகிறாரே தவிர, அவதாரம் எனக் கொண்டாடவில்லை. மேலும் அவர் எழுதியதை சீதையின் மஹத்தான சரித்திரம் என்கிறார்! ராமரை ஒரு தர்மவான்- எல்லா நிலைகளிலும் தர்மத்தை விடாதவர் எனக் காட்டுகிறார். இறுதியில், ராமரே தான் ராஜ தர்மத்தைச் செய்து முடித்ததாகத்தான் சொல்கிறார். ராவணவதம் முடிந்த பிறகு, சீதை அவர் முன்பு வந்ததும், முகம் கடுமையாகி , சீதையை நேராகக் கூட பார்க்காமல் அவர் கூறுவது:
  விதி தஶ்சாஸ்து தே பத்ரே யோஅயம் ரண பரிஶ்ரம:
  ஸ: தீர்ண: ஸுஹ்ருதாம் வீர்யான்ன த்வதர்தம் மயா க்ருத:
  ரக்ஷதா து மயா வ்ருத்தமபவாதம் ச ஸர்வஶ:
  ப்ரக்யாதஶ்யாத்மவம்ஶஸ்ய ந்யங்கம் ச பரிமார்ஜிதா.
  [யுத்தகாண்டம்=சர்கம் 119, 15-16]
  உனக்கு நலமே விளைக! நான் நன்னெறியைப் பின்பற்றுபவன். பலவாறான அபவாதங்கள் உண்டாகிவிட்டன. நெடுங்காலமாக மிகவும் கீர்த்தி பெற்ற என் குலத்திற்கு களங்கமும் தலைகுனிவும் ஏற்பட்டுவிட்டது. அதை என் நண்பர்களின் வீர பராக்ரமத்தினால் நீக்கிவிட்டேன். பயங்கரமான போரை நான் மேற்கொண்டது உனக்காக இல்லை. இதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்.
  க: புமான் ஹி குலே ஜாத: ஸ்த்ரியம் பரக்ருஹோஷிதாம்
  தேஜஸ்வீ பு நராதத்யாத் ஸுஹ்ருல்லேக்யேன சேதஸா 19
  நற்குலத்தில் பிறந்த எந்த வீர் புருஷன்தான் அயலார் வீட்டில் தங்கியிருந்த தன் மனைவியை மறுபடியும் மனமார ஏற்றுக்கொள்வான்?
  கதம் த்வாம் புனராதத்யாம் குலம் வ்யபதிஶன் மஹத் 20
  மாசற்ற உன்னத குடியில் பிறந்தவன் என்று பெருமை பாராட்டிக்கொள்ளும் நான் எவ்வாறு மறுபடியும் (உன்னை) எற்றுக்கொள்வேன் ?

  ஆக வால்மீகி சித்தரிப்பது ரகுகுலத்தில் வந்த ராமன் என்ற அரசனை! பிற பல விஷயங்களை அவர் பேசவில்லை. ஆனால், அவை கம்பருக்கும் துளசிதாசருக்கும் தெரிந்திருக்கின்றன! ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகளுக்கும் தெரிந்திருக்கிறது. பல விஷயங்களைப் பாடியிருக்கிறார். அருணகிரி நாதருக்கும் தெரிந்திருக்கிறது! அவர் ஆழ்வார்களையும் மிஞ்சும் விதத்தில் ராமரைப் பாடியிருக்கிறார். கௌஸல்யை குழந்தை ராமருக்கு எப்படிப் பாலூட்டினாள் எனச் சொல்கிறார்! இதெல்லாம் நம் ஞானி-பக்தர்கள் கண்ட காட்சிகள்!
  ஸ்ரீமத் பாகவதமும் பலவிஷயங்களை விட்டுவிட்டது. அவை மஹாபாரதத்திலும், ஹரி வம்சத்திலும், கர்க ஸம்ஹிதையிலும் வருகின்றன.
  ஒவ்வொரு பக்த-பாகவத ஸம்பிரதாயத்திலும் சிறப்பாகச் சில அம்சங்கள் கொண்டாடப் படுகின்றன. மீராபாய், சூர்தாசர் ஆகியோருக்கு பல காட்சிகள் தெரிந்திருக்கின்றன. நமது அருணகிரி நாதருக்கும் தெரிந்திருக்கிறது! யசோதை கணபதி உபாஸகி எனப் பாடுகிறார்! [ இதை க்ருபானந்த வாரியார் விளக்கியிருக்கிறார்.] ஸஹஸ்ர நாம கோபாலா எனப் பாடுகிறார்.விதுரருக்கும் துரியோதனனுக்கும் மனவேறுபாடு தோன்றச்செய்து விதுரருடைய தெய்வீக வில் கௌரவர்களுக்குப் பயன்படாமல் செய்தார் போன்ற பல நுணுக்கமான விஷயங்களைப் பாடியிருக்கிறார்.
  ஸ்ரீ ராமக்ருஷ்ணருக்கும் பல காட்சிகள் தோன்றியிருக்கின்றன! சீதை எத்தகைய வளையல் அணிந்திருந்தார் எனக் கண்டு அதேபோல் அன்னை சாரதாதேவியாருக்குச் செய்து போட்டார் ! அவர் மஹாசமாதிக்குப் பிறகும் அதைக் கழற்றுவதைத் தடுத்தார்! சாரதாதேவியார் ராமேஶ்வரம் கோவிலில் ஸ்வாமியைத் தரிசித்த போது தன்னை மறந்து , ‘ஓ, இது அப்படியே இருக்கிறதே!’ என வியந்து கூறினார். இது அவருடன் இருந்த ஸ்வாமி ராமக்ருஷ்ணானந்தருக்குத் தான் புரிந்தது. [ ஸ்ரீ ராமாவதாரத்தில் பூஜைக்காக இந்த லிங்கத்தை சீதைதான் மணலால் செய்து வைத்தது! அது இன்னமும் அப்படியேதான் இருக்கிறது என்பதையே அவர் குறிப்பிட்டார்!] இப்படி ஞானி-பக்தர்களுக்கு பல காட்சிகள் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த அவதாரங்கள் என்றோ நிகழ்ந்து முடிந்துவிட்டவை அல்ல! ஸ்ரீ அரவிந்தர் அலிபூர் சிறையில் ஸர்வம் வாசுதேவ மயம் என்பதை ப்ரத்யக்ஷமாகக் கண்டாரே! ஸ்வாமி ப்ரம்மானந்தர் ஒரு ஏகாதசி ராம பஜனையில் ஆஞ்சனேயர் அமர்ந்திருப்பதை நேரில் கண்டார்! இதன் பிறகுதான் மடத்தின் ஒவ்வொரு கிளையிலும் ஏகாதசி பஜனை செய்யவேண்டும் என்ற வழக்கத்தைக் கொண்டுவந்தார்!
  இப்படிப் பல விஷயங்கள் பழந்தமிழ் நாட்டில் தெரிந்திருக்கின்றன. மு.இராகவையங்காரும். ரா.இராகவையங்காரும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கின்றனர். தமிழ் நாடு அரசு இவற்றை தேசிய உடமை ஆக்கிவிட்டாலும் இவை எளிதில் படிக்கக் கிடைப்பதில்லை.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: