கம்போடியாவில் மாளய பக்ஷம் (Post No.5482)

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 September 2018

 

Time uploaded in London – 6-48 AM (British Summer Time)

 

Post No. 5482

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

இறந்துபோன முன்னோர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விழா அல்லது புனிதச் சடங்கு புரட்டாஸி மாதத்தில் பௌர்ணமியில் துவங்கி அமாவாஸை முடிய நடைபெறும். அந்த அமாவாஸையை, மஹாளய (மாளய) அமாவாசை என்றும் அதற்கு முந்தைய 15 நாட்களை (பக்ஷம்), மாளய பக்ஷம் என்றும் இந்துக்கள் அழைப்பர்.

 

இதை கம்போடிய பௌத்தர்களும் கொண்டாடுகிறார்கள். இதன் ஒற்றுமையைக் காண்போம்

 

  1. இந்துக்கள் மாளய பக்ஷம் நடத்தும் காலத்தில் (செப்டம்பர், அக்டோபர், புரட்டாசி மாதம்) கம்போடியர்களும் முன்னோர்களுக்கு கடன் செலுத்துவர்.

 

2.இந்துக்களைப் போலவே சோற்றுப் (RICE BALLS) பிண்டங்களை இறந்தோருக்கு அளிப்பர்.

 

3.இந்துக்களைப் போலவே 15 நாள் (பக்ஷம் FORTNIGHT) கொண்டாடுவர்.

 

4.இந்துக்கள் மந்திரம் சொல்லிச் செய்வர். கம்போடியாவில் புத்த பிஷுக்கள் பாலி மொழி (PALI SUTTAS) சுத்தங்களை (சூக்தம்) சொல்லுவர்.

 

  1. இந்துக்கள் மாளய பஷம் என்பர்; கம்போடிய பௌத்தர்கள் ‘சம் பென்’ PCHUM BEN என்பர்.

 

  1. இந்துக்கள், முன்னோர்களை ‘பித்ருக்கள்’ என்று மரியாதையுடன் அழைப்பர். கம்போடியாவில் பாமர மக்களை நம்ப வைப்பதற்காக இறந்தோரின் ‘ஆவிகள்/பேய்கள்’ என்பர்.

 

  1. இந்துக்கள், இறந்தோர்கள் யமலோகத்தில் இருப்பார்கள் என்று சொல்லுவது போல கம்போடியர்களும் யம தர்மனை நினைவு கூறுகின்றனர்.

 

 

  1. ஒரே வேற்றுமை- கம்போடியர்கள், இறந்தோர் நரகத்தின் வாயில் திறந்தவுடன் ஆவிகளாக வெளியே வருவதாகச் சொல்லுவர். ஆனால் இந்துக்கள், அவர்களுடைய முன்னோர்கள் பரம மங்களகரமான ஆசிகளை வழங்குவதற்காக மேலுலகத்திலிருந்து பூவுலகிற்கு வருவதாக நம்புகின்றனர்.

 

ஒரு அதிகாரியோ, அமைச்சரோ நம்முடைய ஊருக்கு வரும்போது நாம் எளிதில் சிரமம் இன்றி மனு கொடுப்பது போல, நம் முன்னோர்கள், பூவுலகிற்கு வருகையில் நாம் எளிதில் ஆஸிகள் பெறும் காலம் இது.

 

  1. மநு தர்ம சாஸ்திரம் முதல் தமிழ் வேதமான திருக்குறள் வரை ஏழு தலைமுறை (எழுமை) பற்றிப் பேசும். இந்துக்களைப் போலவே கம்போடியர்களும் ஏழு தலைமுறைக்கு படைப்பு படைப்பதாக நம்புகின்றனர்.

 

10.இந்துக்கள், வெப்ப மண்டல நாடான இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்ததால் எல்லாவற்றிலும் அரிசி (பிண்டம்), எள், தண்ணீரைப் பயன்படுத்துவர். கம்போடியர்கள் ஊதுவத்திகளையும் மெழுகு திரிகளையும் பயன்படுத்துகின்றனர்.

11.கம்போடிய மாதமான போத்ர்பாத்ரில் (POTRBOTR) இதை அனுஷ்டிப்பதாகச் சொல்லுகிறார்கள். இது பாத்ரபத என்னும் ஸம்ஸ்க்ருத மாதப் பெயர். இதை தமிழர்கள் புரட்டாசி ஆக்கிவிட்டனர். கம்போடியர் போத்ர் போத்ர் ஆக்கிவிட்டனர்.

 

 

இந்தியாவில் பெரும்பாலோர்- காத்மாண்டு முதல் கண்டி வரை– ஏப்ரல் 14 புத்தாண்டு கொண்டாடுவது போல தென்கிழக்காசிய நாடுகள் அனைத்தும் கொண்டாடும். கம்போடியர்களுக்கு ஏப்ரல் 14ம் இந்த மாளய பக்ஷமும் தேசிய விடுமுறை. அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான பண்டிகை மாளய பக்ஷம். யாரும் புத்தமத கோவிலுக்குப் போகாமல் இருக்க மாட்டார்கள்.

 

இது போல இலங்கைப் பௌத்தர்களும் முன்னோர்களுக்கு படைப்பு படைக்கின்றனர். அவர்கள் எல்லோரும் இறந்துபோன முன்னோரை ‘பேய்’ என்று நினைக்கின்றனர். இந்துக்கள் மட்டும் இறந்தோரை தெய்வ நிலைக்கு உயர்த்தி நம்மை என்றும் ஆசிர்வதிக்கக் காத்திருப்பதாக நம்புகின்றனர்.

 

படங்கள் இன்றைய டெக்கான் க்ரானிக்கிள் DECCAN CHRONICLE பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டவை; நன்றி

 

–சுபம்–

Leave a comment

1 Comment

  1. பௌத்தர்கள் ஹிந்து நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பது நமது சரித்திரத்தை உள்ளபடி அறிந்தவர்களுக்கு புதிய விஷயமோ, ஆச்சரியம் தருவதாகவோ இருக்காது. நமது சரித்திரத்தை எழுதிய காலனீய வெள்ளைக்காரர்கள் புத்தர் சொன்ன கருத்துக்கள் ஏதோ புது மதம் போலவும், அது ஸனாதன தர்மத்திற்கு எதிரானது போலவும் திரித்து தங்கள் வசதிக்கேற்ப எழுதி வைத்தார்கள். இது உண்மைக்குப் புறம்பானது.
    ஸனாதன மதத்தின் அடிப்படை உண்மைகள் என்றும் மாறியதில்லை; ஆனால் அவற்றின் அம்சங்கள் காலத்திற்கேற்ப வெளிப்படுதலில் வித்தியாசம் இருக்கிறது. ஒறே விஷயத்தை பலவிதமாக விளக்குவதும் நமது மதத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.ஒரே வேதாந்தத்தை விளக்க ஆறுவகை தர்சனங்கள். ஒரே கடவுளை வழிபட ஆறு மதங்கள்- ஷன்மதம்; உபனிஷதங்களின் அடிப்படையில் த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்ற முப்பிரிவுகள்- இவை ஒவ்வொன்றினுள்ளும் பல கிளைகள் என இப்படி நமது மதத்தில் அடிப்படையான கருத்துச் சுதந்திரம் பண்டைக்காலம் தொட்டே இருந்துவந்திருக்கிறது, புத்தரின் கருத்துக்களையும் இப்படித்தான் பார்க்கவேண்டும்
    . Buddha emphasised certain aspects, to the exclusion of certain others. The same was done by every Acharya- Shankara,Ramanuja, Madhva, Sri Chaitanya,and others. They do form a revision or diversion, do not constitute a revolution.
    க்ருத யுகத்தில் த்யானம் , திரேதாயுகத்தில் யாக-யக்ஞங்கள்; த்வாபர யுகத்தில் அர்ச்சாமூர்த்த வழிபாடு, யாத்திரைகள், இத்யாதி. இக் கலியுகத்தில் இது எதுவும் சரிவராது என நாம ஸங்கீர்த்தனம் என இப்படி நமது சாஸ்திரங்களே யுகதர்மத்தைப் பிரித்துக் கூறுகின்றன. உண்மையில் பார்த்தால் இவற்றையும் ‘புரட்சி’ என்றே சொல்லலாம்! நாம் அப்படி நினைக்கவில்லை.

    இந்த விஷயங்களை நமது சரித்திர ஆசிரியர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததுமட்டு மல்லாமல், காலனியருக்கு அடிமைகளாகவே இருக்கின்றனர். மேலெழுந்த வாரியாக ஏதோ எழுதுகின்றனர். இந்த விஷயங்களைப்பற்றி சரியாக எழுதியவர் ஸ்ரீ அரவிந்தரே. ஹிந்து மதம் எப்படி காலத்திற்கேற்ப வளர்ச்சியடைந்து பரிணமித்து வந்திருக்கிறது என்பதை அவர் மிகத்தெளிவாக எழுதியிருக்கிறார். இதில் புத்தரின் கருத்துக்களும் எப்படி ஹிந்து மதத்தின் அடிப்படையிலேயே அமைந்தவை என்பதையும் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

    ” Indian religion followed this line of evolution and kept its inner continuity with its Vedic and Vedantic origins; but it changed entirely its mental contents and colour and its outward basis. It did not effectuate this change through any protestant revolt or revolution or with any idea of an iconoclastic reformation. A continuous development of its organic life took place, a natural transformation brought out latent motives or else gave to already established
    motive-ideas a more predominant place or effective form. At one time it seemed as if a discontinuity and a sharp new beginning were needed and would take place.Buddhism seemed to reject all spiritual continuity with the Vedic religion. BUT THIS WAS AFTER ALL LESS IN REALITY THAN IN APPEARANCE. The Buddhist ideal of Nirvana was no more than a sharply negative and exclusively statement of the highest Vedantic spiritual experience. The ethical system of the eightfold path taken as the way to release was an austere sublimation of the Vedic notion of the Right, Truth and Law followed as the way to immortality- RTASYA PANTHAH. The strongest note of Mahayana Buddhism , its stress on universal compassion and fellow-feeling , was an ethical application of the spiritual unity which is the essential idea of Vedanta.## The most characteristic of the new discipline, Nirvana and Karma, could have been supported from the utterances of the Brahmanas and Upanishads, Buddhism could have easily claimed for itself a Vedic origin and the claim would have been no less valid than the Vedic ascription of the Sankhya philosophy and discipline with which it had some points of intimate alliance. But what hurt Buddhism and determined in the end its rejection was not its denial of a Vedic origin or authority, but the exclusive trenchancy of its intellectual , ethical and spiritual positions…..Indian religion absorbed all that it could of Buddhism, but rejected its exclusive positions…..”
    ## Here, Sri Aurobindo says in a footnote:
    “Buddha himself does not seem to have preached his tenets as a novel revolutionary creed, but as the old Aryan way,, the true form of the eternal religion.”
    [ A Defence of Indian Culture, chapter VIII , Indian Spirituality and Life-2, in the publication “The Renaissance in India” 1997, pages 207-208. Previously published as The Foundations of Indian Culture.]
    புத்தர் தன் கருத்துக்களை “ஆர்ய தர்மம்” என்று தான் சொன்னார். தர்மா-தம்மா என்பது தான் அவர் சொன்னது, மதம் அல்ல.
    இந்த அடிப்படையில் பார்த்தால் ஹிந்துமதத்தின் பல நம்பிக்கைகளையும் அம்சங்களையும் பௌத்தர்கள் பின்பற்றுவது இயற்கையானதே!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: