அற்புத தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி! (Post No.5504)

WRITTEN BY S NAGARAJAN

Date: 4 October 2018

 

Time uploaded in London – 5-52 AM (British Summer Time)

 

Post No. 5504

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

அற்புத தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி!

 

.நாகராஜன்

நம்முடைய காலத்திலேயே வாழ்ந்து நமக்கு சுருக்கமான வார்த்தைகளில் பெரிய அரிய உண்மைகளை விண்டுரைத்தவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே.கிருஷ்ணமூர்த்தி.

பெருத்த சிந்தனையாளர். தத்துவ ஞானி. ஆன்மீகத்தை அள்ளித் தந்தவர். மனம், தியானம், உலகியல் வாழ்வு, சமூக மாற்றம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை எளிமையாக விளக்கியவர்.

அவரது சொற்களிலேயே அவரது தத்துவம் இது தான்:

உன்னை மாற்றிக் கொள் (CHANGE YOURSELF)

நீயே தான் உலகு (YOU ARE THE WORLD)

1895ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மதனபள்ளியில் தெலுங்கு அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஜே.கே. தியாஸபி இயக்கத்தில் ஈடுபட்டு பெரும் புகழ் பெற்றார். அவரது உயரிய ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்பதே ஒரு அனுபவம் என்ற நிலையில் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் அவரது உரைகளைக் கேட்டு இன்புற்றனர்; பயனுற்றனர்.

1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் நாள் அவர் மறைந்தார். அவரது வாழ்வு திடுக்கிடும் திருப்பங்கள் நிரம்பிய ஒன்று. பரபரப்பூட்டும் சம்பவங்கள் அடங்கியது. வியப்பூட்டும் உயரிய தியாகங்கள் நிறைந்தது.

90 வயது வாழ்ந்த அவரது நீண்ட வாழ்வில் அவர் எழுதிய நூல்கள் பல. ஆற்றிய உரைகள் பல. அவரது அனைத்துச் சொற்பொழிவுகள், எழுத்துக்கள் 17 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 1933 முதல் 1967 முடிய உள்ள காலகட்டத்தில் அடங்குபவை இவை.

இது 50 தொகுதிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17 தொகுதிகளின் விவரம் இதோ:-

  • Volume 1 (1933–1934): The Art of Listening(1991).
  • Volume 2 (1934–1935): What Is the Right Action?(1991)
  • Volume 3 (1936–1944): The Mirror of Relationship(1991).
  • Volume 4 (1945–1948): The Observer Is the Observed(1991)
  • Volume 5 (1948–1949): Choiceless Awareness(1991)
  • Volume 6 (1949–1952): The Origin of Conflict(1991).]
  • Volume 7 (1952–1953): Tradition and Creativity(1991).
  • Volume 8 (1953–1955): What Are You seeking?(1991).
  • Volume 9 (1955–1956): The Answer is in the Problem(1991).
  • Volume 10 (1956–1957): A Light to Yourself(1991).[
  • Volume 11 (1958–1960): Crisis in Consciousness(1991).
  • Volume 12 (1961): There is No Thinker, Only Thought(1991).
  • Volume 13 (1962–1963): A Psychological Revolution(1992).
  • Volume 14 (1963–1964): The New Mind(1992).
  • Volume 15 (1964–1965): The Dignity of Living(1992).
  • Volume 16 (1965–1966): The Beauty of Death(1992)
  • Volume 17 (1966–1967): Perennial Questions(1992)

இந்தப் பதினேழு தொகுதிகளும் சுமார் 5500 பக்கங்கள் கொண்டவை. ஜே.கே எழுதியவை 2412 நூல்களில் அடங்கும் என்றும் சுமார் 4580 வெளியீடுகளைக் கொண்டது என்றும் இவை 53 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிகிறது. 46822 நூலகங்களில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. அவரது படைப்புகள் சுமார் இரண்டு கோடி வார்த்தைகளை உள்ளடக்கியது. 75 புத்தகங்கள், 700 ஆடியோகேஸட், 1200 வீடியோ கேஸட் உள்ளிட்டவை இப்போது கிடைக்கின்றன.  2010இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின் படி 22 மொழிகளில் இவரது படைப்புகள் சுமார் 40 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இப்போது நிகழ்நிலைஆன் லைன் –  மூலம் படிக்கவும் இவரது நூல்கள் கிடைக்கின்றன.

இவரது சிந்தனையால் கவரப்பட்ட அறிஞர்கள், கவிஞர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் மிக நீண்டது. இடம் கருதி சிலரை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

George Bernard Shaw, Henry Miller, Anne Morrow Lindbergh, Alan Ginsburg, Federico Fellini, Khalil Gibran, Pandit Jawaharlal Nehru, Indira Gandhi, Erick Fromm, Prof. David Bohm, Charlie Chaplin, Greta Garbo, John Kenneth Galbraith, Svetlana (Stalin) Peters, Dalai Lama.

இவரது உரையைக் கேட்ட அல்டஸ் ஹக்ஸ்லி,புத்தரின் உரையைக் கேட்பது போல இருக்கிறது. அப்படிப்பட்ட வலிமை, நுட்பம், அதிகாரபூர்வமான கருத்துக்கள் என்றார்.

ஜே.கேயின் கருத்துக்கள் உண்மை ஒளியைக் காண விழைவோருக்கான ஒரு அபூர்வ பொக்கிஷமாகும்.

படிப்போம்; உயர்வோம்!

***

 

 

 

Leave a comment

2 Comments

  1. ஜே.கே நவீன கால தத்துவஞானிகளில் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை.
    அதிலும் மேலை நாட்டு (வரட்டு) தத்துவவாதிகளிலிருந்து வேறு பட்டு நிற்கிறார். அதேசமயம் நமது இந்தியப் பாரம்பரியத்திலும் முழுதும் சேரவில்லை என்று தோன்றுகிறது.

    மேலை நாட்டுத் தத்துவம் என்பது உலகம், உயிர், கடவுள் ஆகிய அடிப்படையிலிருந்து விலகி, எதிலும் ஒரு அடைப்படைக் கருத்தும் இல்லாத நிலையை அடைந்திருக்கிறது, எதைப் பற்றியும் ஒரு குழப்பம் தான். இன்று மொழி பற்றிய குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. எந்த விஷயத்திலும் வாழ்க்கையின் எந்தப் பிரச்சினைக்கும் வழிகாட்டுவதாக இல்லை. இது மேலைத்தத்துவ வாதங்களின் பழைய அணுகுமுறையிலிருந்து [ உ.ம் பண்டைய கிரேக்க தத்துவம்] முற்றிலும் மாறுபட்டது.. ஜேகே இதில் சேரமாட்டார்!
    ‘உன்னை மாற்றிக்கொள்’ என்பது நமது பாரதத் தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நாம் உலகை அறிவது நம் மனம்-பொறிகள் ஆகிய கருவிகளால். இவை முழுமையானவை அல்ல.அதனால் உலகைப்பற்றிய நமதுஅறிவு என்றும் சரியாக இருப்பதில்லை. நமது பொறி-புலன்கள் நெறிப்பட்டு , நம் சித்தம் தெளிவடைந்தால் இவ்வுலகைப் பற்றிய நம் எண்ணமும் அனுபவமும் மாறும். ஆகவே நாம் முதலில் நம்மைதான் திருத்திக்கொள்ளவேண்டும். இதை நமது பழைய நூல்கள் தெளிவாக்கு கின்றன:
    த்ருஷ்டிம் ஞானமயிம் க்ருத்வா
    பஶ்யேத் ப்ரஹ்ம மயம் ஜகத்.
    [ நம் பார்வை ஞானமயமாகிவிட்டால் உலகையே ப்ரம்ம மயமாகக் காண்போம்,]
    ‘நீயே தான் உலகு’ என்பதும் நம் இந்தியப் பாரம்பரியக் கொள்கைதான். நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் உலகைக் காண்கிறோம்! உலகை நாம் தான் பார்க்கிறோம்! இதுவும் ஓரளவு மேற்கண்ட ஶ்லோகத்திலேயே அடங்கிவிடுகிறது.

    இதை நம் காலத்தில் விளக்கியவர் ஸ்ரீ ரமண பகவான்.
    ” நாம் உலகம் காண்டலால் ” என்று தொடங்குவது அவர் அருளிய “உள்ளது நாற்பது”. இந்த உலகம் நான் இருக்கிறேன் என்று அறிவித்துக்கொள்வதில்லை. நாம் தான் இந்த உலகைப் பார்க்கிறோம்! நம் பொறி புலன்களால் அறிவதாக-உணர்வதாக நினைக்கிறோம். நம் தூக்கத்தில் இந்த உலகு எங்கு போகிறது? நாம் கனவிலும் ஒரு உலகை வருவித்துக்கொள்கிறோம்! இந்த ‘ நான்” என்பது யார் என்று தெரிந்தால், உலகம் என்பது என்ன என்பதும் தெரிந்துவிடும்!

    ஆனால் ஒரு முக்கிய விஷயத்தில் ஜேகே நம் பாரம்பரியத்திலிருந்து மாறுபடுகிறார். இந்திய வேதாந்திகள்-ஞானிகள் வெறும் வேதாந்திகளாக இல்லை. ஆசாரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதாவது அவர்கள் கருத்துக்களை எப்படி நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பதையும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். சாதனை முறையைச் சொல்லியிருக்கிறார்கள். வெறும் கருத்துக்களைச் சொல்லாமல், நடைமுறைக்கான வழிகளையும் காட்டி இருக்கிறார்கள்.
    இங்கு ஜேகே மாறுபடுகிறார். அவரைப்பொருத்தவரை, அவர் ஒரு உயர் நிலையை எய்திவிட்டார். ஆனால் அவரை எப்படிப் பின்பற்றுவது? இதற்கான வழியை அவர் சொல்லவில்லை. குரு என்று இல்லை, குருவுக்கு அவசியம் இல்லை என்கிறார். ஆனால் அவர் சொல்வதைக் கேட்பவர்களுக்கு அவரே குருவாகத்தானே ஆகிறார்? To quote JK to say there is no Guru is, ironically, to accept him as Guru, may be unconsciously!
    ஜெகே யின் முக்கிய கருத்துக்களில் ஒன்று, ” Choiceless Awareness”. [ இதைத் தமிழில் சொல்வது கடினம்.] இந்த நிலையை எப்படி அடைவது? இது மனம் செயல்படாத அல்லது கடந்த நிலை! இதை அடையும் வழி என்ன? இதை ஜேகே காட்டவில்லை! பல இடங்களில், பல சமயங்களில் விளக்கி இருக்கிறார். ஆனால் அதை அடைய ஒரு வழியைச் சொல்லவில்லை!

    ஜேகேயின் கருத்துக்கள் புத்தர் கருத்துக்களோடு ஓரளவுக்கு ஒத்துவருகின்றன. ஆனால் புத்தர் நடைமுறைக்கு வழிகாட்டினார்- The Noble Eight Fold Path. ஜேகேயிடம் இத்தகைய வழிகாட்டுதல் இல்லை!

    பகவான் ரமணரின் சன்னிதியில் இருமுறை ஜேகே பற்றிய பிரஸ்தாபம் எழுந்தது..
    Talk 41. 22 March, 1935.
    D:. J.Krishnamurti says ” No Guru is necessary”.?
    Maharshi: “How did he know it? One can say so after realising, but not before.”

    On 29 July 1936, M.Frydman asked:
    Krishnamurti says that man should find out the ‘I’. Then ‘I’ dissolves away, being only a bundle of circumstances. There is nothing behind the ‘I’. His teaching seems to be very much like the Buddha’s.
    Maharshi: Yes-yes, beyond expression.

    இருந்தாலும் புத்தர் எல்லோருக்கும் ஒரு ஆன்மீகப் பாதையைக் காட்டித் தந்தார். பகவான் ரமணரும் ஒரு பாதையைக் காட்டினார். அவரை அணுகிய முருகனார் அவரைக் கேட்டது “மெய்யின் இயல்பும் அதை மேவும் திறனும்” நாம் உய்யும்படி எமக்குச் சொல்லவேண்டும் என்பதே! இதையே ‘உள்ளது நாற்பது” விளக்குகிறது. அது உண்மை விளக்கமாக இருப்பதுடன் சாதனை முறையாகவும் மலர்கிறது.
    ஜேகேயிடம் பல விளக்கங்கள் இருந்தாலும் சாதனை முறை இல்லைபோல் தான் தோன்றுகிறது!

  2. Santhanam Nagarajan

     /  October 5, 2018

    super points. thanks

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: